25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆன்மீகம்

Jan 13, 2023

மஹாலக்ஷ்மி சுபிக்ஷம்

வாசம் நிறைந்த பொருட்கள் அனைத்தும் மஹாலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.அவளின்  அருளும்,ஆசி நமக்கு கிடைக்க தினந்தோறும் பச்சை கற்பூரம் கலந்த நல்லெண்ணெய் வாசமும், ஜவ்வாது கலந்த நல்லெண்ணெய் வாசமும் ,பூஜை அறையில் நிறைந்து இருக்க வேண்டும். அப்போது மஹாலக்ஷ்மி நம்முடன் வீட்டில் நிரந்தரமாக குடி புகுவாள். 

Jan 06, 2023

விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது

பூஜையின் போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம். யாராவது தூங்கிக் கொண்டிருக்கும் போது காலை, மாலை வேளையில் விளக்கேற்றக் கூடாது .தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்.போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும். 

Dec 30, 2022

பூஜை செய்யக்கூடாத நாட்கள்

குழந்தை பிறந்த10 நாட்கள்,இறப்பு நடந்த வீட்டில் 10 நாட்களுக்கு வீட்டில் பூஜை செய்யக்கூடாது வீட்டில் பெண் மாதவிடாய் நாட்களில் பூஜை செய்ய வேண்டாம்,விளக்கு அமர்த்துதல் (அல்லது) மலையேற்றுதல் என்றுதான் சொல்ல வேண்டும், அணைப்பது என்பது வார்த்தையை உபயோகிக்க கூடாது தெய்வத்துக்கு பிளாஸ்டிக் பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டாம்.

Dec 23, 2022

நரசிம்ம பெருமாளை வணங்கி வர

நரசிம்ம பெருமாள் பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவக் கூடியவர். இவரை தொடர்ந்து வணங்கி வர திருமணத் தடை, குழந்தை பேரின்மை, கடன் தொல்லை, குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்பு, கருத்து வேறுபாடுகள் நீங்கும். அதோடு, சொத்து தகராறாலும், தம்பதிகளிடையே கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்தால் அவர்கள் விரைவில் சேரக்கூடிய சூழல் ஏற்படும்.

Dec 16, 2022

அரசாங்க காரியங்களில் வெற்றி பெற ராஜ அலங்கார முருகர் படம் 

 அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும் அரசு வேலைக்கு முயற்சிப்போர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்கள் ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து  வணங்க வேண்டும்  .மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம் தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை அன்பு காதல் பாசம் உண்டாகும்.அர்த்தநாரீஸ்வரர் ,  சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம்.குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம்  எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.

Dec 09, 2022

திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனத்தின் சிறப்பு

திருவண்ணாமலை மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. , மலை ஏற சுமார் 4 மணி நேரமாகும்..கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை, பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும், கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல்கிறார்கள். இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை, தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது. 

Dec 03, 2022

கண் திருஷ்டி பரிகாரம்

வாரம் ஒரு முறை கண்ணாடி பவுல் ஒன்றை எடுத்து கொண்டு அதில் நிரம்ப கல் உப்பை போட்டு கொண்டு விடுங்கள். அதன் மீது எழுமிச்சை பழம் ஒன்றை நடுவில் அழுத்தி வையுங்கள். எழுமிச்சை பழத்தை ஊசியால் குத்தி துளை போட்டு கொள்ளுங்கள். பின்னர் வர மிளகாய்களை குடும்பத்தில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையில் எடுத்து கொண்டு அதன் காம்பு பகுதியை எழுமிச்சை பழத்தை சுற்றிலும் சொருகி வையுங்கள். எத்தனை பேர் உங்கள் குடும்பத்தில் இருக்கிறார்களோ ,அத்தனை பேருக்கும் சேர்த்து செய்வது தான் நல்லது. அதை அப்படியே கை படாமல், எடுத்துகொண்டு போய் நில வாசல் கதவின்  பின்புறத்தில் வைத்து விடுங்கள்.

Dec 02, 2022

திருப்பதி பெருமாளுக்கு ஏன் முடி காணிக்கை கொடுக்கிறோம் தெரியுமா?

பெருமாளின் உருவத்தில் பதிக்கப்பட்டிருக்கும் முடி உண்மையானது என்று சொல்லப்படுகிறது.  பெருமாள் பூமிக்கு வந்தபோது நிகழ்ந்த போர்க்களத்தில், அவருடைய முடியின் சிலவற்றை இழந்துள்ளார். இதை அறிந்த காந்தர்வ பேரரசி நீலா தேவி  தன்னுடைய கூந்தலை அறுத்து,பெருமாளின் சிலை முன்பு வைத்துவிட்டு, அதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியுள்ளார். அதை ஏற்றுக்கொண்டு அவர் தலையில் சூடிக் கொண்டுள்ளார். அதனால்தான் பெருமாளை தரிசிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் முடியை தானமாக பெருமாளுக்கு இன்றும் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.அட ! இது தெரியாமல் பலர் முடி காணிக்கை நேர்த்திக்கடன் செய்து கொண்டிருக்கிறோம். 

Nov 25, 2022

ஆலயத்தில்அனைவரும் சமம்

கோவிலில் அடிமேல் அடி வைத்து , நின்று நிதானமாக  அடிமேல் அடி வைத்து வலம்  வந்து ,அனைத்து மூரத்திகளையும் வணங்கிச் செல்ல வேண்டும். வேகமாக வலம் வருதல் கூடாது. ஆலயத்தில்அனைவரும் சமம். இறைவனே மிகப் பெரியவன்.  மற்றவரின் காலில் விழுந்து வணங்கக்கூடாது.கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது.   மற்றோரின் கவனத்தை திசை திருப்பக் கூடிய,வண்ண உடை ஆடம்பரமான உடை அணிந்து செல்லக்கூடாது 

Nov 18, 2022

விநாயகர் வசிய பூஜை மந்திரம்

அதிகாலையில் பூஜை செய்யும் போது, குலத்தெய்வதை வணக்கி ,பின் பூஜை அறையில் இருக்கும் விநாயகருக்கு அருகம்புல் வைத்து ,சுத்தமான பசு நெய்யில் தீபம் ஏற்றி, அதன் முன்பு" ஓம் கம் கணபதி சர்வலோக வசிகராய நம" என்று மந்திரம் சொல்லி வர விநாயகர் அருளால் சகல மக்களும் வசியம் ஆவர்கள்.  

1 2 ... 8 9 10 11 12 13 14 15 16 17

AD's



More News