25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆன்மீகம்

Apr 04, 2023

பங்குனி உத்திரம்

பங்குனி மாதத்தில் வரும் முக்கியம் விசேஷ நாட்களில்பங்குனி உத்திரம் மிகவும் முக்கியமானது. இறை வழிபாடுகள் செய்வதற்கு உரிய மாதமாக பங்குனி மாதமும் திகழ்கின்றது.தமிழ் மாதங்களில் 12ஆவது மாதம் பங்குனி, 27 நட்சத்திரங்களில் 12ஆவது உத்திரம் நட்சத்திரம் இந்த 12, என்ற எண் முருகனுடைய திருக்கரங்களின் எண்ணிக்கையை குறிக்கும். எனவேதான் பன்னிரு கை வேலவனுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களிலும் முருகப்பெருமான் ஆலயங்களிலும் பங்குனி உத்திர திருவிழா 12 நாட்கள் பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படுகிறது.  மீனாட்சி-சொக்கநாதர் , ராமர் -சீதைக்கும் பங்குனி உத்திர நாளன்று தான் திருமணம் நடைபெற்றது. தெய்வீக திருமணங்கள் நிகழ்ந்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வார்கள். இந்த நன்னாளில்   திருமணத்தடை இருப்பவர்கள் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்தால் திருமணம் கைகூடும்.கன்னிப் பெண்களுக்கு நினைத்த வரன் அமைய பங்குனி உத்திர விரதத்தை கடைப்பிடிப்பது யோகத்தைக் கொடுக்கும்.. பங்குனி உத்திர விரதத்தால் கிடைக்கும். அரசு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும், அரசு சார்ந்த காரியங்கள் நடக்கும். சிலருக்கு பணியிடத்தில் இழுபறியாக இருக்கும் பதவி உயர்வு கிடைக்கும்.வட மாநிலங்களில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் சகோதரத்துவத்தை வலியுறுத்தவும் எப்படி ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதோ, அது போலவே நம் தமிழகத்தில் பங்குனி உத்திரப் பெருவிழாவாகக் கொண்டாடி வருகிறோம்.

Mar 31, 2023

வசந்த நவராத்திரி பூஜை

வசந்த நவராத்திரி மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி மார்ச் 30 ஆம் தேதி முடிவடைகிறது . வசந்த நவராத்திரி என்பது யோகம் எனும் பக்தி நிலையை தரக்கூடியது. மேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஒன்பது தினங்களிலும். அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீநவாவரண பூஜையும், லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும், கன்யா பூஜையும், சுவாஸினி பூஜையும் நடைபெறும். வசந்த நவராத்திரி பூஜை செய்து வழிபட்டால் பெண் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

Mar 24, 2023

வளரும் லிங்கத் திரு மேனி கொண்ட உலகத்தின் மிகப் பெரிய சுயம்பு லிங்கம்  பூதேஷ்வர் நாத் 

  பூதேஷ்வர் நாத் உலகத்தின் மிகப் பெரியசுயம்பு லிங்கம் , 18 அடி உயரம். 20 அடி சுற்றளவு கொண்ட இந்த லிங்கத்திரு மேனி கொண்ட பெருமானை பூதேஷ்வர் நாத் என்று அழைக்கிறார்கள். சதீஸ்கர் மாநிலம் க்ரியாபாந்த் மாநிலம், மதுரா என்னும் கிராமத்தில் இப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.ஆச்சரியமான ஒருஉண்மை என்னவென்றால்!! இப்பெருமானை வருடம் தோறும் கணக்கிடுகிறார்கள்.ஒவ்வொரு வருடமும் இவர் 6முதல் 8 இன்ச் வரை  பூதேஷ்வர் நாத் வளர்ந்துகொண்டே வருகிறார்.  

Mar 17, 2023

கண்ணாடி வளையல்

எல்லோருடைய வீட்டிலும் பெண்கள் வளையல் அணிந்து இருப்பார்கள், வளையல் அணியாத பெண்களிடம் காசு, பணம் அவ்வளவு சீக்கிரம் தங்குவது இல்லையாம் எனவே தான் கண்ணாடி வளையல்களின் சத்தம் கேட்குமாறு பெண்கள் முந்தைய காலங்களில் நிறையவே வளையல் அணிந்து வந்தனர். இந்த வளையல் சத்தம் வீட்டில் கேட்டுக் கொண்டே இருந்தால் அங்கு சுபிட்சம் நிலைத்திருக்கும் என்கிறது சாஸ்திரங்கள் குறிப்பாக வளையல் அணியாமல் பூஜை அறையில் பெண்கள் விளக்கு ஏற்றவே கூடாது.பொதுவாக கண்ணாடி வளையல்கள் என்பது இந்த கால பெண்களிடம் பேஷன் இல்லை என்றே கருதப்படுகிறது. இந்த கண்ணாடி வளையல்கள், மூதாட்டிகள் மட்டுமே உபயோகிக்கப்பட்டதாக இன்றைய நவநாகரீக பெண்கள் நினைக்கின்றனர்.கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத்தன்மை மற்றும் சைதன்யம் நிரம்பியுள்ளன.அவை சூழ்ந்துள்ள சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன. கண்ணாடி வளையல்களின் ஓசை, தீய சக்திகளை விரட்டியடித்து தேவியின் அருள் கிடைக்க உதவுகிறது.கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு, சீமாந்தம் போன்ற சடங்குகள் வைப்பது முற்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கங்கள் ஆகும். இந்த விழாவில் பிரதானமான அம்சமே கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளையல்கள் போட்டுவிடுவது மட்டுமின்றி, அந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் எல்லா வயதுப் பெண்களுக்கும் வளையல் அடுக்குவதுதான்.நிறைமாத பெண்மணி மெல்ல நடந்துவரும் உடல் வாகைக் கொண்டிருப்பாள். அதனால் அவள் வரும் போது முன்னே, பின்னே அக்கம் பக்கத்தில் செல்பவர்கள் அவள் வருவதைப்புரிந்து கொண்டு அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒதுங்கிச் செல்வதற்கு அந்தக் கண்ணாடி வளையோசை உதவும் என்பதே ஆகும்.கண்ணாடி வளையல்கள் லேசாக உடைந்திருந்தாலோ, கீறல் விழுந்திருந்தாலோ அணியக்கூடாது. ஏனென்றால், இந்த விரிசல் மூலமாக தீய சக்திகள் உடலில் புக வாய்ப்புள்ளது.

Mar 10, 2023

காஞ்சி மகா பெரியவரின் விபூதியைப் பற்றிய விளக்கம்

 காஞ்சி மகாபெரியவர் விபூதி என்ற தத்துவத்தை அழகாக விளக்குகிறார். விறகினை அக்னி எரித்து சாம்பலாக்குகிறது. இறுதியில் அந்த சாம்பலே பஸ்மமாக மிஞ்சுகிறது. அதேபோல ஞானம் என்கிற நெருப்பு மனித வாழ்வின் கர்மங்களை எரித்து பஸ்மமாக்குகிறது. என சொல்கிறார் பகவான் கிருஷ்ணர். இங்கு பஸ்மம் என்பது விபூதியைப் குறிக்கும். அதாவது பல நிறங்கள் கொண்ட பொருட்கள் எரிந்தபின், கடைசியில் வெளுத்துத்தான் போகும். இதையே நாம் சாயம் வெளுத்து விட்டது. என்கிறோம். சாயம் என்பது வேஷம். இந்த வேஷம் போனபின் சாம்பல்தான் மிஞ்சும். இதுவே விபூதி.

Mar 03, 2023

உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் கண்திருஷ்டி என்ற சொல் இருப்பது ஏன்?

புதிதாக வாங்கும் ஆடைகள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் போது,  பக்கத்து வீட்டிலுள்ள தோழி தெரிந்தவர்களுக்கு  காண்பிக்கும் போது அவர்களுடைய மனதில் இவ்வளவு விலையா? நம்மால் இப்படி வாங்க முடியவில்லையே, என ஏக்கமாக பார்ப்பது, உங்களுக்கு கண் திருஷ்டி ஏற்படும்.மேலும் நகைகள், பீரோவிலுள்ள புடவைகளை, கடைபரப்பி காண்பிப்பதும் சரியல்ல.அவ்வாறு ஆர்வமாக காண்பித்த பின்பு அந்த புடவையையோ அல்லது நகையையோ அணியமுடியாமல் போகும்,மேலும் நகைகள் அடகுக்கு போவது ,மீட்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.எல்லோருடைய பார்வையும் அப்படி இருக்காது என்றாலும், உங்களுக்கு தெரிந்து இவர்களிடம் காட்டினால் கண் திருஷ்டி படுகிறது என்று ஒரு அபிமானம்  .இருப்பவர்களிடம் காட்டாமல் இருப்பது நல்லதே...மற்றபடி உங்களின் மீது அதிக பாசமுள்ள பிரியமுள்ளவர்களிடம் காண்பிப்பது சரியே.கண் திருஷ்டி ஆபத்து: உலகம் முழுதும் நம்பும்உண்மை .வேதத்தில் 'கோரம் சக்சுக்ஷக்ஷிஷு என்று கண் திருஷ்டி பற்றி துதி இருக்கிறதுகுழந்தைகளுக்குக் கருப்புப் போட்டு வைப்பது , கோவிலில் கோபுரத்தில் ஆபாச சிலைகள் வைப்பது ,பெரிய கடைகளில் விநோத உருவம் வரைந்த பூசணிக்காய் தொங்குவது ,வீட்டின் முகப்பில் திருஷ்டி விநாயாகர் உருவம் மாட்டுவது , கார் வாங்கினால் குங்குமத்துடன் எலுமிச்சம்பழத்தை டயரில் வைத்து நசுக்குவது ,எல்லா நிகழ்ச்சிகள் முடிந்ததும் செந்நிற மஞ்சள் வண்ணஆரத்தி சுற்றுவது ,வெள்ளிக்கிழமைகளில் தாய்மார்கள், வீட்டிலுள்ள அனைவரையும் நிறுத்தி உப்பு அல்லது மிளகாயைச் கற்றி நிரிலோ, நெருப்பிலோ போடுவது ,தலையைச் சுற்றி அல்லாது ஒரு பொருளைச் சுற்றி தேங்காயை சிதறு காய் அடிப்பது,கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று பழமொழி சொல்லுவது இந்துக்களின் கண்திருஷ்டி நம்பிக்கை ,உலகம் முழுதும் பரவியுள்ளது.,கண் படுதல் அல்லது திருஷ்டி என்பது உண்மையே என்று அதர்வண வேதம் கூறுகிறது.அதர்வண வேதம் கோரமான தீய கண்கள் என்ற சொற்றொடரை பயன்படுத்தி அதற்கு  பரிகாரங்களையும் பேசுகிறது 

Feb 24, 2023

பெண்களின் மாங்கல்ய பலம் பெருக

பெண்கள் அணியும் மாங்கல்யம், பெண்களின் நெற்றி ,தலை வகிட்டு பகுதி ஆரம்பம், ஆகிய மூன்று இடங்களிலும் லட்சுமி தேவி வாசம் செய்கின்றால். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால் லட்சுமி தேவியின் அருளை முழுமையாக பெற முடியும்.வீட்டிற்கு வரும் பெண்களுக்கு, குங்குமம் கொடுப்பதால், கொடுப்பவர்- பெறுபவர் இருவருக்குமே ,மாங்கல்ய பலம்பெருகும்,பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக, தாங்கள் இட்டுக் கொண்ட பிறகே கொடுக்க வேண்டும். பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

Feb 17, 2023

ஞானம் பெற்ற ஆதி சங்கராச்சாரியார்

நவீன இந்து மதத்தை போதித்தவர்களில் ஒருவரான ஆதிசங்கராச்சாரியார் ஜோஷிமட்டில் உள்ள ஒரு மரத்தடியில் ஞானம்பெற்றதாகக் கூறப்படுகிறது.எனவே இப்பகுதி ஜோதிர்மத் என்றும் அழைக்கப்படுகிறது. அந்தமரத்தை இன்றும் அங்கு காணலாம். இது கல்பவ்ரிக்ஷம் என்று அழைக்கப்படுகிறது.ஆனால், இந்த மரத்தை அடுத்துள்ள கோயில் இன்று இடிந்துவிழுந்துள்ளது. அதன் அருகில் இருந்த குகையும் அழிக்கப்பட்டுவிட்டது.அதில் ஆதி சங்கராச்சாரியார் தியானம் செய்ததாக கூறப்படுகிறது.ஜோஷிமட் பற்றி பல கதைகள் உள்ளன. இங்கு லட்சுமி நரசிம்ம சுவாமிகோயிலும் உள்ளது. அவரது பக்தரான பிரஹலாதன் இங்கு முக்திஅடைந்ததாக கூறப்படுகிறது.இங்கு ஏராளமான கோவில்கள் மற்றும் நீர் ஊற்றுகள் உள்ளன. இவைபிரம்மா, விஷ்ணு, கணேஷ் என கடவுளின் பெயர்களிலும்அறியப்படுகின்றன.

Feb 10, 2023

திரியை கொண்டு தீபம் ஏற்றினால் நடக்கும் பலன்கள்

பருத்திப் பஞ்சால் செய்யப்பட்ட திரியை கொண்டு தீபம் ஏற்றினால் குடும்பத்தில் பல நல்லது  நடக்கும். இதனால் குடும்பம் சிறக்கும்.தாமரைப்பூ தண்டைக் கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், முன்வினைக் கர்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி, செல்வம் நிலைக்கும்  முன்னோர்களின் சாபங்கள் விலகும். அதோடு ஏதேனும் தெய்வக்குற்றங்கள் இருந்தால் அதுவும் விலகி வீட்டில் அமைதி உண்டாகும்.வாழைத்தண்டு நாரைக் கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், குடும்பப் பிரச்னைகள், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். வெள்ளை எருக்கம்பட்டையை திரியாக திரித்து அதில் தீபம் ஏற்றுவதால் வீட்டில் செல்வம் பெருகும்.

Feb 03, 2023

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்

108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார். இந்த ஆலயம் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது.உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ- தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். அமிர்தவல்லித் தாயார் தனித்தனி சன்னதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன. சோளிங்கரில்  யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் காட்சி அளிக்கிறார்.பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

1 2 ... 8 9 10 11 12 13 14 15 16 17

AD's



More News