இராஜபாளையத்தில் பாலப் பணிகளை விரைவு படுத்த வலியுறுத்தல்.
.இராஜபாளைமய் நகர் பகுதி தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக உள்ள டி.பி. மில்ஸ் ரோட்டில் இரண்டு சாக்கடை தரைப்பாலங்கள் வலுவிழந்த நிலையில் இருந்தன். ஒன்பது மாதங்களுக்கு முன் பணிகளுக்கான ஒப்புதல் வழங்கியும், தொடங்காமல் இருந்து வந்த நிலையில் , 1 மாதத்திற்கு முன் பணிகள் தொடங்கின. பள்ளி திறப்பிற்கு முன்பு நடைமுறைக்கு கொண்டு வர எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பழைய பாலங்களை அகற்றிய வேகத்தில், பணிகள் நடைபெறாததால் மலையடிப்பட்டிக்கு இணைப்பு இன்றி வாகன ஒட்டிகள் நெரிசலுக்கு உள்ளாகி வருகின்றனர். சூழ்நிலை கருதி வேகமாக முடிக்க வேண்டிய பணிகள் தாமதத்தால், மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஒட்டிகள் உள்ளிட்ட அனைவருக்கும் சிரமம் ஏற்பட்டு வருவதை கருதி மாவட்ட நிர்வாகம் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply