குழந்தை பிறந்த10 நாட்கள்,இறப்பு நடந்த வீட்டில் 10 நாட்களுக்கு வீட்டில் பூஜை செய்யக்கூடாது வீட்டில் பெண் மாதவிடாய் நாட்களில் பூஜை செய்ய வேண்டாம்,விளக்கு அமர்த்துதல் (அல்லது) மலையேற்றுதல் என்றுதான் சொல்ல வேண்டும், அணைப்பது என்பது வார்த்தையை உபயோகிக்க கூடாது தெய்வத்துக்கு பிளாஸ்டிக் பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டாம்.
நரசிம்ம பெருமாள் பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவக் கூடியவர். இவரை தொடர்ந்து வணங்கி வர திருமணத் தடை, குழந்தை பேரின்மை, கடன் தொல்லை, குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்பு, கருத்து வேறுபாடுகள் நீங்கும். அதோடு, சொத்து தகராறாலும், தம்பதிகளிடையே கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்தால் அவர்கள் விரைவில் சேரக்கூடிய சூழல் ஏற்படும்.
அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும் அரசு வேலைக்கு முயற்சிப்போர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்கள் ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்க வேண்டும் .மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம் தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை அன்பு காதல் பாசம் உண்டாகும்.அர்த்தநாரீஸ்வரர் , சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம்.குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.
திருவண்ணாமலை மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. , மலை ஏற சுமார் 4 மணி நேரமாகும்..கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை, பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும், கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல்கிறார்கள். இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை, தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.
வாரம் ஒரு முறை கண்ணாடி பவுல் ஒன்றை எடுத்து கொண்டு அதில் நிரம்ப கல் உப்பை போட்டு கொண்டு விடுங்கள். அதன் மீது எழுமிச்சை பழம் ஒன்றை நடுவில் அழுத்தி வையுங்கள். எழுமிச்சை பழத்தை ஊசியால் குத்தி துளை போட்டு கொள்ளுங்கள். பின்னர் வர மிளகாய்களை குடும்பத்தில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையில் எடுத்து கொண்டு அதன் காம்பு பகுதியை எழுமிச்சை பழத்தை சுற்றிலும் சொருகி வையுங்கள். எத்தனை பேர் உங்கள் குடும்பத்தில் இருக்கிறார்களோ ,அத்தனை பேருக்கும் சேர்த்து செய்வது தான் நல்லது. அதை அப்படியே கை படாமல், எடுத்துகொண்டு போய் நில வாசல் கதவின் பின்புறத்தில் வைத்து விடுங்கள்.
பெருமாளின் உருவத்தில் பதிக்கப்பட்டிருக்கும் முடி உண்மையானது என்று சொல்லப்படுகிறது. பெருமாள் பூமிக்கு வந்தபோது நிகழ்ந்த போர்க்களத்தில், அவருடைய முடியின் சிலவற்றை இழந்துள்ளார். இதை அறிந்த காந்தர்வ பேரரசி நீலா தேவி தன்னுடைய கூந்தலை அறுத்து,பெருமாளின் சிலை முன்பு வைத்துவிட்டு, அதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியுள்ளார். அதை ஏற்றுக்கொண்டு அவர் தலையில் சூடிக் கொண்டுள்ளார். அதனால்தான் பெருமாளை தரிசிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் முடியை தானமாக பெருமாளுக்கு இன்றும் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.அட ! இது தெரியாமல் பலர் முடி காணிக்கை நேர்த்திக்கடன் செய்து கொண்டிருக்கிறோம்.
கோவிலில் அடிமேல் அடி வைத்து , நின்று நிதானமாக அடிமேல் அடி வைத்து வலம் வந்து ,அனைத்து மூரத்திகளையும் வணங்கிச் செல்ல வேண்டும். வேகமாக வலம் வருதல் கூடாது. ஆலயத்தில்அனைவரும் சமம். இறைவனே மிகப் பெரியவன். மற்றவரின் காலில் விழுந்து வணங்கக்கூடாது.கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. மற்றோரின் கவனத்தை திசை திருப்பக் கூடிய,வண்ண உடை ஆடம்பரமான உடை அணிந்து செல்லக்கூடாது
அதிகாலையில் பூஜை செய்யும் போது, குலத்தெய்வதை வணக்கி ,பின் பூஜை அறையில் இருக்கும் விநாயகருக்கு அருகம்புல் வைத்து ,சுத்தமான பசு நெய்யில் தீபம் ஏற்றி, அதன் முன்பு" ஓம் கம் கணபதி சர்வலோக வசிகராய நம" என்று மந்திரம் சொல்லி வர விநாயகர் அருளால் சகல மக்களும் வசியம் ஆவர்கள்.
உங்களுக்கு இருக்கூடிய கடன் அடைந்து பணம் பெருக, சமயலறையில் நாம் பயன்படுத்தும் உப்பு, மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும், இந்த உப்பை வீட்டில் இந்த இரண்டு இடங்களில், வைத்தால் தீரும் என்று கூறப்படுகிறது.உடம்பில் இருக்கும் கெட்ட அதிர்வலைகளை தீய சக்திகளை விரட்டநம் வீட்டில் இருக்ககூடிய குளியலறையில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு கண்ணாடி பவுல் அல்லது மண் அகலில் சிறிது உப்பு போட்டு அதன் மேல் சிறிது மஞ்சள் குங்குமம் வைத்து வைத்து விடுங்கள். லஷ்மி கடாட்சம் பெருக, ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது மண் கலையம் ஒன்றில் நீர் நிரப்பி சிறிது கல் உப்பு சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வீட்டில் வடகிழக்கு மூலையில் அல்லது தென்மேற்கு மூலையில் வைத்தால் இந்த ஆற்றல் வீடு முழுவதும் பரவி லஷ்மி கடாட்சம் பெருகும் இதை வாரம் ஒரு முறை மாற்ற வேண்டும்.
யோகி ஆடலரசன் அய்யா அவர்கள் வழங்கும் ஒரு வார தசகாரிய வாசியோக ஆன்லைன் வகுப்புகள் வருகின்ற திங்கள்கிழமை(14/11/2022) முதல் காலை 5 மணியிலிருந்து ஆறு மணி வரை நடக்க இருக்கின்றது.Time: 5am to 6am கட்டணம்:- Rs 500/-.மேலும் ஆன்மீக வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கு மட்டுமான ஆன்லைன் வாசியோக பயிற்சிகள் காலை 11 மணியிலிருந்து 12 மணி வரை மற்றும் மதியம் 3 மணியிலிருந்து நான்கு மணி வரை என இரு batch நடைபெற இருக்கின்றது.பெண்களுக்கு மட்டுமான இந்த பயிற்சி வகுப்பில் 14 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மகளிரும் கலந்து கொண்டு பயனடையலாம்.பெண்களுக்கான ஒரு வார வாசி யோக பயிற்சிகள் நடைபெறும் நேரம்: 11am to 12 am & 3pm to 4pmமகளிர்களுக்கான ஆன்லைன் தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சிகளை வழங்குபவர்கள்: யோகினி மைத்ரேயா மற்றும் யோகி ஆடலரசன் ஐயா அவர்கள்பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆர்வமுள்ள நண்பர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட் நம்பரில் வகுப்பு கட்டணத்தை செலுத்தி விட்டு அதற்கான ரசீதை அடியில் கண்ட நிர்வாகக் குழு whatsapp எண்ணுக்கு(8675371212) அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நன்றி. வணக்கம்.Chelladevi RAc.no:0106301000031514Branch:ArakandanallurIFSC:DBSSOIN0106Whatsapp no-9087650998Gpay-9087650998 நிர்வாகக் குழு.சைவ சன்மார்க்க யோக சேவை இயக்கம் மற்றும் வாகீசர் தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சி மையம்.திருக்கோவிலூர்.Cell - 8675371212