திரியை கொண்டு தீபம் ஏற்றினால் நடக்கும் பலன்கள்
பருத்திப் பஞ்சால் செய்யப்பட்ட திரியை கொண்டு தீபம் ஏற்றினால் குடும்பத்தில் பல நல்லது நடக்கும். இதனால் குடும்பம் சிறக்கும்.
தாமரைப்பூ தண்டைக் கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், முன்வினைக் கர்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி, செல்வம் நிலைக்கும் முன்னோர்களின் சாபங்கள் விலகும். அதோடு ஏதேனும் தெய்வக்குற்றங்கள் இருந்தால் அதுவும் விலகி வீட்டில் அமைதி உண்டாகும்
.வாழைத்தண்டு நாரைக் கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், குடும்பப் பிரச்னைகள், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும்.
வெள்ளை எருக்கம்பட்டையை திரியாக திரித்து அதில் தீபம் ஏற்றுவதால் வீட்டில் செல்வம் பெருகும்.
0
Leave a Reply