ஞானம் பெற்ற ஆதி சங்கராச்சாரியார்
நவீன இந்து மதத்தை போதித்தவர்களில் ஒருவரான ஆதிசங்கராச்சாரியார் ஜோஷிமட்டில் உள்ள ஒரு மரத்தடியில் ஞானம்பெற்றதாகக் கூறப்படுகிறது.எனவே இப்பகுதி ஜோதிர்மத் என்றும் அழைக்கப்படுகிறது. அந்தமரத்தை இன்றும் அங்கு காணலாம். இது கல்பவ்ரிக்ஷம் என்று அழைக்கப்படுகிறது.
ஆனால், இந்த மரத்தை அடுத்துள்ள கோயில் இன்று இடிந்துவிழுந்துள்ளது. அதன் அருகில் இருந்த குகையும் அழிக்கப்பட்டுவிட்டது.அதில் ஆதி சங்கராச்சாரியார் தியானம் செய்ததாக கூறப்படுகிறது.
ஜோஷிமட் பற்றி பல கதைகள் உள்ளன. இங்கு லட்சுமி நரசிம்ம சுவாமிகோயிலும் உள்ளது. அவரது பக்தரான பிரஹலாதன் இங்கு முக்திஅடைந்ததாக கூறப்படுகிறது.இங்கு ஏராளமான கோவில்கள் மற்றும் நீர் ஊற்றுகள் உள்ளன. இவைபிரம்மா, விஷ்ணு, கணேஷ் என கடவுளின் பெயர்களிலும்
அறியப்படுகின்றன.
0
Leave a Reply