25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆன்மீகம்

Sep 16, 2022

கடவுளை வணங்கும் முறை

சிவன், விஷ்ணு, பிரம்மாவை வணங்கும்போது, தலைக்கு மேல், 12 அங்குல உயரத்திற்கு, கைகளை உயர்த்தி, கை கூப்ப வேண்டும்.பிற தெய்வங்களுக்கு தலை மேல் கை கூப்ப வேண்டும். குருவை, நெற்றிக்கு நேர் கைகூப்பி வணங்க வேண்டும்.தந்தைக்கும், அரசருக்கும் வாய்க்கு நேர் கைகூப்பி வணங்க வேண்டும்.அறிநெறியாளர்களை, மார்புக்கு நேர் கைகூப்பி வணங்க வேண்டும்.அன்னையை வயிற்றுக்கு நேர் கைகூப்பி வணங்க வேண்டும். 

Sep 15, 2022

மகாளய அமாவாசை தினம்

புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மகாளயம் என்று பெயர். இந்த ஆண்டுக்கான மகாளய பட்சம் (11) முதல் செப்டம்பர் 25ஆம் தேதி  வரை மகாளய பட்சம்.  இந்த 15 நாட்கள் அடங்கிய புண்ணிய தினத்தில் எந்த நாளிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். இதனால் நம் முன்னோர்களின் ஆசி மற்றும் இறைவனின் ஆசி கிட்டுவது நிச்சயம்.மகாளய பட்ச காலத்தில் நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பது ஐதிகம். மகாளய பட்ச தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கை சிறப்படையும்.ஆவணி பௌர்ணமிக்கு அடுத்த நாள் முதல் புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்களே மகாளய பட்சம் என அழைக்கப்படுகிறது.மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம், பட்சம் என்றால் பதினைந்து நாட்கள், முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்மேற்கண்ட பதினைந்து நாள்களில் ஒரு முறையும் அமாவாசையன்று ஒரு முறையும் ஆக இரண்டு முறை தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த தினத்தில் அரச மரத்தை சுற்றிவந்து கணபதியை வணங்கி வருவது அமாவாசை நாட்களில் காகம், எறும்பு, பசு, நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்தல் ,கருப்பு உளுந்து, கருப்பு எள், உப்பு, உடைகள், வெல்லம், பார்லி போன்ற உணவு பொருட்களை தானமாக அளித்தல், தண்ணீர் தானம் கொடுப்பதும், குடிக்க இனிப்பு கலந்த தண்ணிரைப் பருக கொடுப்பதும், சிவ பெருமான் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வருவது,எப்போதும் ஏழை, எளியோரை தொந்தரவு அல்லது கஷ்டப்படுத்தக்கூடாது. நாம் அவர்களுக்கு உதவியோ, மரியாதை கொடுத்தாலே போதும் சனி பகவானின் ஆசி கிடைக்கும்.முன்னோர்களை வணங்குவதுகுல தெய்வ இறைவனை வணங்குவதும் சிறப்பான விஷயம் தான்.ஒரு திறந்த வெளியில் தெற்கு திசை பார்த்து ஒரு விளக்கு ஏற்றி வைத்து அந்த தீபத்தைப் பார்த்து வணங்குவது மிகவும் நல்லது.மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம். மகாளய அமாவாசை தினத்தில் நற்காரியங்களை செய்து இறைவனின் அருளும், முன்னோர்களின் அருளும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

Sep 12, 2022

பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன் என்றார் கீதையில் கண்ணன்

நீ எனக்கு ஒரு இலையைக் கொடு  ,அல்லது பூவை கொடு  ,இல்லை ஒரு பழத்தைக்கொடு அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு , எதைக் கொடுத்தாலும். பக்தியோடு கொடு., சுத்தமான   உள்ளம்  உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன் என்றார் கீதையில் கண்ணன்.. 

Sep 09, 2022

திருவண்ணாமலை கிரிவலத்தைத் தொடங்குவதற்கு முன்பு ...

கிரிவலத்தைத் தொடங்குவதற்கு முன்பு திருவண்ணாமலை  கோயிலுக்கு அருகே இருக்கும்,காவல் தெய்வம் பூத நாராயணரைத்  தரிசித்து அனுமதி பெற வேண்டும்.அவரை வணங்கிவிட்டுப்புறப்பட்டால் எந்தவித இடையூறும்இல்லாமல் கிரிவலத்தை முடிக்க முடியும் என்பது நம்பிக்கை.. பின்னர் வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்க வேண்டும். அதன் பிறகு ஆலயம் சென்று  அண்ணாமலையாரையும்,உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிக்க வேண்டும் அதன் பிறகு கோயில் ராஜ கோபுரத்தை வணங்கிவிட்டு மலையை வலம் வரத்தொடங்க வேண்டும். கிரிவலத்தை இப்படித்தான் தொடங்க.வேண்டும் என்பது நியதி,

Sep 02, 2022

தலை முடியின் முன் வகிட்டில்,மகாலட்சுமி வாசம்

தலை முடியின் முன் வகிட்டில்,மகாலட்சுமி வாசம்செய்வதால் திருமணமான பெண்கள் முன் வகிட்டில் குங்குமம். இடுகின்றனர்.மகாவிஷ்ணுவிற்குப் பிடித்தது   துளசி ..  வீட்டில் துளசி மாடம் வைத்து' தினமும் சுற்றி வந்துவழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும், வாழை, மாவிலை எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன 

Aug 26, 2022

சண்டிகேஸ்வரர் முன் கை தட்டக்கூடாது

சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கைதட்டுவது ஒரு பெரிய பாவ செயல். சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காது என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் அது உண்மையில்லை சண்டிகேஸ்வரர்சிறந்த சிவபக்தர். அவர் எப்பொழுதும் சிவசிந்தனையில் தியானத்தில் இருப்பவர். சிவனின் சொத்துக்களை பாதுகாப்பவர் எனவே சிவ தரிசனத்திற்கு பிறகு சண்டிகேஸ்வரரை வணங்கும் பொழுது மெதுவாக சத்தம் வராமல் கைகளை துடைத்து, கோயில் சொத்து எதையும் நாம் எடுத்துச் செல்லவில்லை. என்பதை சண்டிகேஸ்வரர் தியானம் கலையாமல் சொல்ல வேண்டும் .இதுவே முறையாகும். 

Aug 26, 2022

. வாராஹி காயத்ரி மந்திரம்

வாராஹி காயத்ரி மந்திரம்ஓம் மஹிஸத்வஜாயை விதிமஹே தந்தஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹிப் ப்ரசோதயாத் .வாராஹி மூல மந்திரம்ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணிஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹ:

Aug 13, 2022

நீ எதிலிருந்து விடுபட நினைக்கிறாயோ அவற்றுடனெல்லாம் நீ மேலும் பந்தப்படுவாய்

ஏனெனில் சுதந்திரம் என்பது எதற்கும் எதிரானதல்லசுதந்திரம் என்பது "எதனிடமிருந்தோ"அல்லது "எதற்காகவோ"அல்ல சுதந்திரம் என்பது எதனுடனும் உடன்படுவதுமல்ல சுதந்திரம் என்பது கடந்து செல்வதுஉடன்பாடு, எதிர்மறை இரண்டையும் கடந்து செல்வது சுதந்திரம் என்பது இருமைத் தன்மையிலிருந்து விடுதலைஅங்கு "உடன்பாடு எதிர்மறை"எங்கிருக்கிறது.....???எதனுடன் சம்பந்தப்படுவது....??? எதை எதிர்ப்பது........???சம்பந்தம் புத்திசாலித் தனமானதல்லஎதிர்ப்பும் பழையதோடு சம்பந்தப்பட்டதுதான்ஆகவே, புரிந்துகொள்-சண்டையிடாதே.சண்டையிடுவதன் மூலம் யாராவது ஏதாவது அடைந்திருக்கிறார்களா......???வலியைத் தவிர-தோல்வியைத் தவிரஆகவே, தப்பி ஓடாதே, பதிலாக விழித்துக்கொள்தப்பி ஓடுவதனால் ஒருவன் தப்பி ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்அதற்கு முடிவு இல்லைஅறிதலே சுதந்திரம். பயமல்ல, கோபமல்ல, பகையல்ல, எதிர்ப்பல்லதசக்காரிய  வாசியோக சாகா கல்வியை பயின்று இந்த பிரபஞ்ச தலைவனை பற்றியும்  தன்னைப் பற்றியும் அறிதல் மட்டுமே சுதந்திரம். இதுவே சைவ சன்மார்க்கம் காட்டும் பாதை. இதில் பயணிக்கும் ஒரு மாணவன் படிப்படியாக அஷ்டாங்க யோகத்தின் முடிவில் ஜீவன் முக்தி, அஷ்டகர்ம யோகத்தின் முடிவில் ஜீவசமாதி, அஷ்டமா சித்தி யோகத்தின் முடிவில் மரணமில்லா பெருவாழ்வு எனும் படிநிலைகளை கடந்து கடவுளாக நிலை மாற்றம் அடைகிறார்இந்த கலியுகத்தில் அனைவரும் கடவுளாக நிலை மாற்றம் அடைய பர முக்தி அல்லது முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு  தச காரியவாசி யோக சகா கல்விதான் ஒரே வழி!!!புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரம்!!! எந்நாளும் சாகாமல் இருக்க கற்பதுவே கல்வி!!எனவே பணம் சம்பாதிக்கும் சாதா கல்வியுடன் இறைவனுடைய அருளை சம்பாதிக்கும் சாகா கல்வியும் படித்து மரணமில்லா பெரு வாழ்வை அடைய அனைவரும் பாடுபட வேண்டும். இதுவே மனிதனாக பிறந்ததின் பயன் சாகா கல்வியை படிக்க தவறியவர்கள் மனிதனாக பிறந்திருக்கவே வேண்டாம் என்கிறது நமது தமிழர் ஆன்மீக மரபுஓம் நமசிவாய , திருச்சிற்றம்பலம்.யோகி ஆடலரசன் ஐயா.

Aug 11, 2022

குல தெய்வம்

இந்த ஆடிமாதத்தில் முதலில் குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வரவேண்டும். பின்னர் நடப்பவை அனைத்தும் நன்மையாக நடக்கும்.நாம் தினமும் வீட்டில் பூஜை செய்தாலும், பல கோவில்களுக்கு சென்று வந்தாலும், நமக்கு ஒரு துன்பம் என்ற பொழுது முதலில் வந்து நிற்பது, குல தெய்வம் தான். எனவே ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது தவறாமல் குலதெய்வ கோவிலுக்கு சென்று வர வேண்டும். அதற்கு மிகவும் உகந்த மாதம் ஆடி மாதம்.  

Aug 11, 2022

"சும்மாயிரு"

சன்மார்க்கத்தில் ஜீவ ஒழுக்கம், பூத ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்றெல்லாம் பல்வேறு ஒழுக்க விதிகளை  விதித்து ,வள்ளல் பெருமான் போன்ற மெய்ஞானிகள்    அவற்றை செய்யச் சொல்கிறார்கள்.நாங்கள் எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டுமா? அல்லது வள்ளலார் போன்ற விஞ்ஞானிகள் சொல்வதை செய்ய வேண்டுமா? இந்த குழப்பத்தை நீக்கி அருள வேண்டுகிறோம்.யோகி ஆடலரசன் ஐயா அவர்களின் பதில் :- சம்சார துக்க நிவர்த்தி ஆகிய "ஜீவன் முக்தியை" அடைய வேண்டுமானால் எதுவும் செய்யாமல் "சும்மா இருக்க" வேண்டும்.ஆனால் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய வேண்டுமானால் ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம்,  பூத ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்ற ஒழுக்க விதிகளை கடைபிடித்து அசுத்த தேகத்தை, சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான ஒளி தேகமாக மாற்றம் அடையச் செய்ய வேண்டும். இதில் சோம்பேறி தனம் உள்ள சாதகர்கள்  ஜீவன் முக்தியை அடைய  பாடுபடுகிறார்கள். அவர்கள் வீட்டை . துறந்து துறவியாகி குளிக்காமல், நல்ல உடை உடுத்தாமல், பிச்சை எடுத்து வாழ்ந்து ஜீவன் முக்தியை அடைகிறார்கள். அவர்கள் எதுவும் செய்யக்கூடாது. சும்மா இருக்க வேண்டும். சாப்பாட்டுக்கு கூட பிச்சை எடுத்து தான் சாப்பிட வேண்டும். காசை கையால் தொடக்கூடாது. உணவை மட்டுமே பிச்சை எடுக்க வேண்டும். வேறு ஒன்றையும் யோசிக்கக்கூடாது இதுதான் ஆன்ம ஞானியின் லட்சணம்.இவ்வாறு வாழ்ந்த பல்வேறு ஞானிகளை நமக்கு தெரியும். சாக்கடை சித்தர், அழுக்கு மூட்டை சித்தர், மூக்குப்பொடி சித்தர்,  புத்தர், வர்த்தமான மகாவீரர், சேஷாத்ரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி, பகவான் யோகி ராம்சுரத்குமார் போன்ற அனைத்து ஞானிகளும் ஆன்ம ஞானிகளே. அதாவது ஜீவன் முக்தர்கள். இவர்களிடம் மேற்குறிப்பிடப்பட்ட ஜீவன் முக்த லட்சணம் பரிபூரணமாக விளங்கியதை நாம் காணலாம்.இவர்கள் நம் ஒவ்வொருவரிடமும் உள்ள பஞ்சகோசங்களில்  அதாவது அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்ற ஐந்து உடல்களில் விஞ்ஞானமய கோசம் மற்றும் மனோமய கோசத்தை  மட்டுமே கையாண்டார்கள்.மீதமுள்ள அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம் இதைப்பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை. அவர்களுடைய ஸ்தூல உடலாகிய அன்னமய கோசத்தில் கேன்சர் வந்தாலும் எது வந்தாலும் அதைப்பற்றி அவர்கள் சட்டை செய்வதில்லை. இதுவே "சும்மாயிரு" என்பதின் அர்த்தம்.ஆனால் மெய்ஞானம் அல்லது  சைவ சன்மார்க்கம்  என்று வரும் பொழுது இந்த உடலை அனுதினமும் நன்றாக குளித்து, நல்ல உடை உடுத்தி சுத்தமாக பராமரித்து, பற்பம், செந்தூரம் உட்கொண்டு இந்த சும்மா போன்  ஆகிய உடலை ஸ்மார்ட் போனாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.வள்ளலார், சைவ சமய நால்வர் பெருமக்கள், பதினெண் சித்தர் பெருமக்கள், சப்தரிஷிகள் மற்றுமுள்ள அனேக தசகாரிய வாசி யோகிகள் போன்ற மெய்ஞானிகள் அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்ற அனைத்து உடல்களையும் வலுப்படுத்த பயிற்சி செய்கிறார்கள்.இவர்கள் இல்லறத்தில் இருந்து கொண்டே ஒழுக்கம் தவறாமல் அனுதினமும் நன்றாக குளித்து, நல்ல உடை உடுத்தி, ஆலய வழிபாட்டை செய்து, மனைவி மக்கள் குழந்தை  சுற்றங்களையும் பாதுகாத்துக் கொண்டு, தான் சார்ந்த சமூகத்தையும், நாட்டையும் பாதுகாத்து கொண்டு உயர்ந்த உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். எனவேதான் அவர்களுக்கு யாரும் பெறாத நிலையாகிய நூற்றுக்கு நூறு மார்க் என்ற மரணமில்லாப் பெருவாழ்வை இறைவன் அளித்தார்.அதாவது வள்ளலார், சைவ சமய நால்வர் பெருமக்கள், அகத்தியர் போன்ற சித்தர் பெருமக்களை யாரும் விஷ ஊசி போட்டு சாகடிக்க முடியாது அல்லது தண்டனை  கொடுத்து சித்திரவதை செய்ய இயலாது.ஆனால் பகவான் ஓஷோ, இயேசு நாகர் போன்ற மேலும் பல ஆன்ம ஞானிகளை சாதாரண மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் விஷ ஊசி போட்டு  கொன்றதும், சிலுவையில் அறைந்து கொன்றதும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.இவ்வாறு ஆன்ம ஞானிகளுக்கும்  மெய்ஞ்ஞானிகளுக்கும் உள்ள வித்தியாசம் ஆன்மீக ஆர்வம் உள்ள பொதுமக்களுக்கு புரியாததால் தான் இன்று ஆன்மீகத்தில் பல்வேறு குழப்பவாதிகள் மற்றும் போலி குருமார்கள் நான் முற்றும் துறந்த முனிவன் என்றெல்லாம் வேஷம் போட்டு ஊரை ஏமாற்றிக் கொண்டு திரிகிறார்கள்.எனவே  வீட்டைவிட்டு ஓடிப்போய் துறவியாகி சும்மா இருக்கிறேன் பேர்வழி என்று குளிக்காமல், நல்ல உடை உடுத்தாமல், துன்பப்பட்டு, துக்கப்பட்டு கஷ்டப்பட்டு நோய் வந்து அல்லது சிலுவையில் அறையப்பட்டு பிச்சைக்காரனாக சாவதைவிட, வீட்டில் இருந்துகொண்டே ஒழுக்க விதிகளை பின்பற்றி யாரும் பெறாத நிலையாகிய மரணமில்லாப் பெருவாழ்வை அடைய வழிகாட்டும் சைவ சன்மார்க்க சாதனங்களே உயர்ந்த நிலை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஆன்மீகத்தில் போலிகள் ஒழிந்து சைவமும், சன்மார்க்கமும் வளர வேண்டுமானால் ஆன்ம ஞானிகளுக்கும் வள்ளலார் போன்ற மெய்ஞானிகளுக்கும் உள்ள இந்த  வித்தியாசத்தை பொது மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். தன் உடலை பராமரிக்க தெரியாத, ஒரு குடும்பத்தை நடத்தத் தெரியாத, மனைவியை சந்தோஷப்படுத்த தெரியாத ஆண்மையற்ற முட்டாள்கள் ஆன்மீகம் என்ற பெயரில் நடிப்பதை தடுக்க வேண்டுமானால், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் ஆன்மீகம் என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டுமானால் இந்த புரிதல் பொதுமக்களுக்கு அவசியம் ஏற்பட வேண்டும்.எனவே உண்மை ஆன்மீகம் என்பது சைவ சன்மார்க்கம் காட்டும் தசகாரிய வாசி யோகப் பயிற்சிகளை முறையாகச் செய்து, சாகா கல்வி கற்று எந்த ஒரு சிரமமும் இல்லாமல் வீட்டில் இருந்துகொண்டே பற்றறுத்து வாழ்ந்து பரமுத்தி என்னும் நம் உடலாகிய கருவியை நீங்களே அசெம்பிள் செய்யவும் தேவையற்ற போது பஞ்சபூதங்களில் பிரித்து போடவும் செய்யக்கூடிய தன்மையை அடைவதே ஆகும். எனவே நீங்கள் அனைவரும் சைவ சன்மார்க்க பாதையில் தசகாரிய வாசி யோக பயிற்சிகளை மேற்கொண்டு மரணமில்லாப் பெருவாழ்வை அடைய முயல வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்."கொடுவா பிடி பிடித்தால் தான் அருவா பிடியாவது தேறும்" என்ற தமிழ் பழமொழிக்கு  ஏற்ப நாம் ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம், பூத ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் போன்ற முறையான ஒழுக்கங்களை கைக்கொள்ளும் போது மட்டுமே ஜீவன்முக்தி என்ற நிலையாவது நமக்கு கிடைக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். செத்துப் போனவர்களையே வணங்கிக் கொண்டிருக்கும் தமிழா!!!இனியாவது சாகாதவர்களை வணங்க கற்றுக்கொள்!!!தமிழனின் கலை சாகாக் கலையே!!!சைவ சன்மார்க்க நெறி நின்றார் நீடுவாழ்வார், மற்றையார் வெந்து சாவார்!!!மேன்மைகொள் சைவ சன்மார்க நெறி விளங்குக உலகமெல்லாம்!கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!!!அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை!அருட்பெருஞ்ஜோதி!. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க! .ஓம் நமசிவாய !!! திருச்சிற்றம்பலம்!!!- யோகி ஆடலரசன் ஐயா.

1 2 ... 8 9 10 11 12 13 14 15 16 17

AD's



More News