வெஜிடபிள் பிரியாணி
தேவையான பொருட்கள் - அரிசி 3 கப், காரட் அரை கப் நறுக்கியது, உருளைக்கிழங்கு அரை கப் நறுக்கியது, பச்சைப்பட்டாணி அரை கப் நறுக்கியது, பீன்ஸ் அரை கப் நறுக்கியது, காலிஃபிளவர் அரை கப் நறுக்கியது, வெங்காயம் அரை கப் நறுக்கியது, மசாலா அரை கப் நறுக்கியது, பச்சைக் கொத்தமல்லி பூண்டு 10 பல், இஞ்சி சிறிய துண்டு, பச்சை மிளகாய் 8 அல்லது 10, தேங்காய் துருவல் கால் கப், வெங்காயம் நறுக்கிய துண்டு கால் கப், பட்டை சோம்பு சிறிது, ஏலக்காய் கிராம்பு சிறிது.
செய்முறை - முதலில் அரிசியை நன்றாக நெய் அல்லது டால்டா விட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். (வாசனை வரும் வரை) மேற்கண்ட மசாலாப் பொருட்களை பச்சையாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் சிறிது டால்டா அல்லது நெய் ஊற்றி (கால் கப்) நறுக்கிய காய்கறிகளைப் போட்டு நன்றாக வதக்கவும். அத்துடன் மசாலா கலவையையும் போட்டு மூன்று நிமிடம் வதக்கவும். பின்பு அரிசியையும் 6 கப், தண்ணீருடன் சேர்த்து நன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பையும். சேர்த்து அடுப்பில் குக்கரை வைத்து, ஆவி வந்த பிறகு வெயிட் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும். ஆறிய பிறகு 1 மூடி எலுமிச்சம்பழச் சாறைப் பிழிந்து கலந்து விடவும். இதனுடன் தொட்டுச் சாப்பிட வெங்காயம், தயிர் பச்சடி ஏற்றது .ரொட்டித் துண்டுகளை நெய்யில் வறுத்து வெஜிடபிள் பிரியாணியில் போட்டால் நன்றாக இருக்கும்.
0
Leave a Reply