25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


ஆன்மீகம்

Aug 24, 2023

பாக்யாத லட்சுமி ராவம்மா.. (வரலட்சுமி நோன்பு)

நம் வீட்டுக்கு மகாலட்சுமியை அழைத்து இரண்டு நாள்கள் தங்க வைத்து ஒவ்வொரு வீட்டிலும் செல்வ வளத்தை பெருக்க பூஜைகள் செய்வது தான் வரலட்சுமி பூஜை.வரலட்சுமி விரதத்தை ஆதியில் தேவலோகப் பெண்கள் கடைப்பிடித்ததாகவும் பின்பு சித்திர நேமி என்னும் பெண் அறிந்து தன் துயர் நீங்கப் பெற்றார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. சாருமதி என்னும் பெண்ணின் கனவில் வரலட்சுமி தாயார் தோன்றி வரலட்சுமி விரத முறைகளை உபதேசித்து அதைக் கடைப்பிடிக்குமாறு கூறினார் என்றும் அன்றுமுதல் இந்த விரதம் பூலோகத்தில் அனைவராலும் கடைப்பிடிக்கப் படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.ஆதி சங்கரர் பிட்சையின்போது நெல்லிக்கனியை தானமாகப் பெற்று தானமிட்ட பெண்மணியின் தரித்திரம் நீங்கும் வண்ணம் கனகதாரா ஸ்தோத்திரம் பாடியது ஒரு துவாதசி திதி. ஏகாதசி திதி அன்று விரதம் இருந்தவர்கள் துவாதசி திதி அன்றுதான் பாரனை முடித்து உணவு உட்கொள்வர். ஏகாதசி அன்று பெருமாளை வழிபட்டு கூடவே துவாதசி அன்று வரலட்சுமியையும் வழிபடக் கிடைத்திருக்கும் அற்புதமான நாள் இந்த ஆண்டு வரலட்சுமி விரதம்.வழக்கமாக வரலட்சுமி நோன்பு, ஆடி மாதம் பௌர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமையில் கடைப்பிடிக்கப்படும். வெள்ளிக்கிழமை என்றாலே மகாலட்சுமி வழிபாட்டு மிகவும் உகந்தநாள். பெருமாள் வாசம் செய்யும் இடம் பாற்கடல். அந்தப் பாற்கடலைக் கடைந்தபோதுதான் மகாலட்சுமி தேவி அவதரித்தார்.:பொதுவாகவே விரதங்கள் என்பவை குடும்பங்களில் வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படுபவை. குடும்பத்தில் இல்லாத விரதங்களைக் கைக்கொள்ளும் வழக்கம் நம் மரபில் இல்லை. பெண்கள் திருமணமான பிறகு பிறந்தவீட்டில் கடைப்பிடித்த விரதங்கள் பலவற்றைப் புகுந்த வீட்டில் கடைப்பிடிக்கும் வழக்கம் இல்லாமல் இருந்தால் அவற்றை விட்டுவிடுவார்கள். ஆனால், அவ்வாறு புகுந்தவீடு, பிறந்த வீடு என்ற பேதமின்றி யாரும் கடைப்பிடிக்கலாம் என்னும் விதியை உடையது வரலட்சுமி விரதம்.எந்த நோன்பையும்விட வரலட்சுமி நோன்பு  மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் நம் இல்லத்துக்குக் கொண்டுவரும். ஆண்டு முழுவதும் வீட்டில் ஆரோக்கியத்தையும் செல்வச்செழிப்பையும் வரமாகத் தரும் நோன்பு இது. இதனால், கணவன் மனைவி இடையே நல்ல அன்பும் அந்நியோன்யமும் நிறைந்திருக்கும் என்பது ஐதிகம்..ஓம் கமலாயை நம:ஓம் ரமாயை நம:ஓம் லோக மாத்ரே நம:ஓம் விச்’வ ஜநந்யை நம:ஓம் மஹாலட்சுமியை நம:ஓம் க்ஷீராப்தி தநயாயை நம:ஓம் விச்வஸாக்ஷிண்யை நம:ஓம் சந்தரசோதர்யை நம:ஓம் ஹரிவல்லபாயை நம:என்னும் ஒன்பது நாமங்களைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும். பின்பு வரலட்சுமி தேவியை வணங்கிவிட்டுக் கையில் சரடு கட்டிக்கொள்ள வேண்டும். சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் மூத்த பெண்கள், மாமியாரிடம் கட்டிக்கொள்வது விசேஷம். தனிக்குடித்தனத்தில் இருப்பவர்கள் கணவன் கையால் கட்டிக் கொள்ளலாம். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டிக்கொள்வோம்.

Aug 17, 2023

சனி தோஷம் நீக்கும் பழநி திருஆவினன்குடி சனீஸ்வரன் கோயில்

திருநள்ளாறுக்கும் குச்சனூருக்கும் போகமுடியலியா? கவலையைவிடுங்கள் பழநியில்இருக்கிறார் சனிஸ்வரன்! .நவகிரகங்களில் ஒருவர். சனிபகவான். சனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பலரும் பரிகாரம் செய்வதற்குத் திருநள்ளாறு குச்சனூர் ஆகிய தலங்களுக்குச் செல்வது வழக்கம். அங்கு சென்றிட இயலாதவர்கள் முருகனின் மூன்றாம் படைவீடான பழநி திருஆவினன்குடியில் உள்ள சனீஸ்வரனை வழிபட்டு திருநள்ளாறு, குச்சனூருக்கு நிகரான பலனைப் பெறலாம்தமிழ்நாட்டிலேயே ஒற்றைச் சனிக்கான தனிக்கோயில் பழநியில் மட்டுமே உள்ளது. சனீஸ்வரனின் திருவுருவச் சிலையானது. புடைப்புச் சிற்பமாக இல்லாமல் முழுவுருவச் சிலையாக உள்ளது காக்கை வாகனத்துடன், நின்றகோலத்தில், கிழக்குநோக்கி முருகனுக்கு எதிர்திசையில் அமைந்துள்ள சிறப்பு உடையது இத்தலம்திருநள்ளாறு,குச்சனூர்சனீஸ்வரன்தலங்களுக்குஇணையாகப்பழநிஆவினன்குடிதலமும்சிறப்புடையதுஎன்பதால்தென்மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.காக்கை வாகனத்துடன்,நின்றகோலத்தில், கிழக்குநோக்கி முருகனுக்கு எதிர்திசையில்அமைந்துள்ள சிறப்பு உடையது இத்தலம் இக்கோயிலுக்கு வருபவர்கள்முதலில் முருகனை வழிபட்டுபின்னர் சனிஸ்வரனைத் தரிசிக்கவேண்டும். வடைமாலை சாத்தியும், எள் சாதம் படைத்தும், எள்முடிச்சுகளை தலையைச்சுற்றிநெருப்பில் இட்டும் விளக்கேற்றியும்இங்கு வழிபடுகிறார்கள். சனீஸ்வரனுக்கு உகந்தகோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது

Aug 10, 2023

கோடி நன்மைகள்  தரும் ஆடி வெள்ளி வழிபாடு!

எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம்தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கைஎனவே தான்‘கோடி நன்மைகள் தரும் ஆடி வெள்ளி’ அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும். அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும்.. துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகை.ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் பொங்கல் வைத்து வபாடு நடத்துவர். அந்தவருடம் முழுவதும் குலம் சிறக்க குடும்பத்தோடு பொங்கல் வைப்பதை காணலாம். திருமயிலை முண்டக கண்ணியம்மன், திருவேற்காடு மாரியம்மன், சமயபுரம், நார்த்தாமலை, மற்றும் பல மாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.கன்னியாக்குமரி, திருவானைகாவல் அகிலாண்டேஸ்வரி ஆகிய ஸ்தலங்களில் ஆடி வெள்ளி கிழமைகளில் விடியற்காலை3 மணி முதல் வரிசையில் நின்று தரிசனம் செய்வர்.ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றையதினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும். ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.ஆடி வெள்ளியன்றுநாகதேவதைக்குபால்தெளித்துவிசேஷபூஜைசெய்வார்கள்.பராசக்தியின்ஒன்பதுஅம்சங்களை(சர்வபூதசமனி,மனோன்மணி,பலப்பிரதமணி,பலவிகாரணி,கலவிகாரணி,காளி,ரௌத்ரி,ஜேஷ்டை,வாமை)ஒன்பதுசிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால்ஒரேசமயத்தில்அர்ச்சிக்கும்“நவசக்தி அர்ச்சனை’ நடைபெறும்.ஆடிவெள்ளியில்“சண்டிஹோமம்’போன்றசக்திஹோமங்களும்செய்வார்கள். மொத்தத்தில் இந்த ஆடி மாதம் பெண்கள் மற்றும் பெண் தெய்வங்களில் பலம் ஓங்கிநிற்க்கும் மாதம். அம்பிகையைவெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால், நல்லகாரியங்கள் இல்லத்தில் நடைபெற வழி பிறக்கும் என்பதை அனுபவத்தில் காணலாம்.

Aug 03, 2023

கட்டை விரல் குருதட்சிணை

ஏகலைவனின் இருப்பிடத்தில் துரோணரைப்போலவே ஒரு சிலை இருப்பதைக் கண்டார். அந்தசிலைக்கு எதிரே  வில்லுடன் நின்று கொண்டிருந்த ஏகலைவனைபார்த்துஉனக்குவில் வித்தையை கற்றுதந்தது யார்? என்றுகோபத்துடன் கேட்டார். அதற்குஏகலைவன். நீங்கள் தான்.ஆனால் நீங்கள் நேரில்வந்து எனக்கு கற்றுத்தரவில்லை. நீங்கள் ஆசிவழங்கி என்னுள் இருந்துகற்று தந்தீர்கள் என்றான்அர்ஜுனனை சிறந்த வில் வீரனாக ஆக்குவேன் என்றுதான் கூறியது. நினைவுக்குவந்தது. உடனே துரோணர் ஏகலைவனை நோக்கி, எனக்குகுரு தட்சினையாக உனதுவலதுகைக் கட்டை விரலைத்தா என்று கேட்டார்உடனே ஏகலைவன் ஒருகணம் கூடதாமதிக்காமல் கத்தியைஎடுத்து தனது வலதுகை கட்டை விரலைவெட்டி எடுத்து துரோணரிடம் கொடுத்தான் ஏகலைவனின் செயலைப்பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனன் அதிர்ச்சிஅடைந்தான் .

Aug 03, 2023

திரு ஆலவாய் கோவில்

சிதம்பரம், காசி, திருக்காளத்திவரிசையில். முக்கியமான4 ஆவதுதலமாகத் திருவாலவாய்உள்ளது. இந்த நகரம்புராண காலத்தில் திருவாலவாய்என்று அழைக்கப்பட்டுள்ளது இந்தத்தலத்தின்பெயரைக் கேட்டதுமே பேரின்பநிலை கிடைக்கும். அதனால்சிவபெருமானுடைய முக்திதலங்களுள் ஒன்றாகவும் இத்தலம்கருதப்படுகிறது. இத்தலத்தினைச்'சிவன் முக் திபுரம்'என்றும் அழைக்கின்றனர்இத்தலம், முக்கியமானசிவத்தலமாக மட்டும் இல்லாமல்அம்பிகையின்51 சக்தி பீடங்களுள்.ஒன்றுமாகும். இதனை, இராசமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனதென் திரு ஆலவாய் கோயில் என்பது மதுரைமாநகரில் தெற்கு மாசி வீதியில்  அமைத்துள்ள மீனாட்சி அம்மன் உடனுறை சிவபெருமான்  கோயில்ஆகும்.

Jul 27, 2023

அன்ன பூரணி

காசிக்கு வந்த தனஜ்செயன்,விரதம் இருந்து அன்னபூரணியின்அருள் பெற்றான்.. உனக்குஅருள் பாலிக்க நான்காசிக்கே வருகிறேன். ஈசனின்ஆலயத்துக்குத் தென்புறம்எனக்கு ஒருகோயில் எழுப்பினால், நான் அங்கு வந்துஅமர்கிறேன் என்றாள். அதனால் வற்றாத செலவத்துக்கு அதிபதியான தனஞ்செயன், அன்னபூரணிக்கு எழுப்பியதே இந்தஅன்னபூரணி ஆலயம். இந்த விரதத்தை யார்மேற்கொண்டாலும் அவர்களுக்குஅன்னத்துக்கு குறைவிருக்காது. நாமும் அன்ன பூரணியின்அருள்  பெறுவோம் .

Jul 20, 2023

.தமிழகத்தில் விநாயகர் வழிபாட்டு வரலாறு

சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின்படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபிஎன்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டுவந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்குவாதாபி கணபதி என்று பெயர்.தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும்பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர்வைத்துக் கூரையும் விமானமும் போட்டுக் கட்டடம் எழுப்ப வேண்டும்என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி,குளக்கரை, முச்சந்தி, நாற்சந்தி,தெருமுனை என வானம் பார்த்த அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார் தான்.

Jul 13, 2023

நாகலிங்க மலர்

இது இயற்கையாக வரும்ஒரு அபூர்வ மலர் . சிவலிங்கம் மலரின் மையப்பகுதியில் உள்ளது சிவலிங்கத்தின்மீதுநாகம் படமெடுப்பது போன்றஅமைப்பாக உள்ளது. சிவலிங்கபூஜைக்கு உதவும் பொருட்களில்நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப்பங்கு உண்டு.. சிவலிங்கபூஜைக்கு உதவும் பொருட்களில்வில்வம், தாமரை, செவ்வரளிபோல நாகலிங்கப் பூவுக்கும்முக்கியப் பங்கு உண்டு.நாகலிங்கப் பூவுக்கு21 ரிஷிகள்தங்களுடைய தவ ஆற்றல்களைஅளித்துள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 21 ரிஷிகளும், ‘மாத்ருகாரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். நாகலிங்கப்பூவைத் தொடவேண்டும் என்றால், சிவ பஞ்சாட்சரத்தை 1001 முறைசொல்லிய பின்னரே தொடவேண்டும். நாகலிங்கப் பூவை கையில்எடுத்தப் பின்னர்,21 பேருக்குஅன்னதானம் செய்ய வேண்டும்.அப்படி21 பேருக்கு அன்னதானம்செய்யும் போது,21 மாத்ருகாரிஷிகள் சூட்சுமமாக அந்தஅன்னதானத்தைப் பெற்றுக்கொள்வதாக நம்பிக்கை.அதன் பிறகு தான்நமது கையில் இருக்கும்நாகலிங்கப் பூவை சிவலிங்கத்தின்தலையில் வைக்க வேண்டும்;இப்படிச் செய்தால் மட்டுமேநாகலிங்கப் பூவால் சிவலிங்கத்திற்குபூஜை செய்த புண்ணியம்நமக்குக் கிட்டும்.நாகலிங்கப் பூவை ஈசனுக்குசாற்றி வழிபட்ட பிறகு,அது வாடியப் பின்னரும்கூட, நாம் குளித்துவிட்டுத்தான் அதனை எடுக்கவேண்டும். வாடிய நாகலிங்கப்பூவை எடுத்து ஓடும்ஆற்றில் போட்டு விடவேண்டும். அல்லது கடலில்போட வேண்டும். நாகலிங்கப்பூவையே சிவலிங்கமாக எண்ணிவீட்டில் தினமும் பூஜைசெய்யலாம். இப்படி ஒருவழிபாட்டு முறை கலியுகத்தின்ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்டுவந்ததாக சொல்லப்படுகிறது.. சிவலிங்கத்திற்குசாற்றிய நாகலிங்கப் பூவை,பிரசாதமாக பெற்றுக்கொண்டு வீட்டிற்குகொண்டு வரவேண்டும். நமதுவீட்டுப் பூஜை அறையில்சுவாமி படத்தின் முன்பாகஅதனை வைத்துக்கொள்ள வேண்டும்.நீண்டகாலமாக இருக்கும் நோய்தீரவோ அல்லது நீண்டகாலமாகஇருக்கும் குறைபாடுகள் நீங்கிடவோமனதார வேண்டிக் கொள்ளவேண்டும். நமது நோய்தீரும் வரை தினமும்வேண்டிக்கொண்டு சிவமந்திரங்கள் அல்லதுதேவாரப் பாடல்கள் பாடிவழிபட வேண்டும். நமதுவேண்டுதல்கள் நிறை வேறியபிறகு, நாகலிங்கப் பூவைஓடும் நதி அல்லதுகடலில் போடலாம். அதுவரைஅது எவ்வளவு காய்ந்துபோனாலும், அதற்கு நமதுவேண்டுதலை நிறைவேற்றும் சக்திஉண்டு.

Jul 06, 2023

.சண்டி சேவாலயம் ( "சண்டி ஹோமம்" )

.சண்டி சேவாலயம் என்றால்  ,தேவிக்கு மங்கள சண்டிகா என்கிற ஒரு பெயரும் உண்டு. தூர்க்கையின்அருளை பெறுவதற்கு செய்யப்படும் ஒரு ஹோமம் தான் "சண்டி ஹோமம்"எனப்படும்.இந்த ஹோமம் செய்வதற்கு பல வருடங்கள் ஹோமபூஜை செய்வதில் அனுபவம் பெற்ற ' 9 வேதியர்களை கொண்டுசெய்யப்படுவதால் நிச்சயமான பலன்களை ஹோம பூஜைசெய்பவர்களுக்கு தருகின்றது. உங்கள் சார்பாக  கோயிலிலோ, ஹோமம் செய்வதற்கான பொருட்கள் மற்றும் இன்ன பிற ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும் உணவேதும் அருந்தாமல் இருந்து ஹோமத்தில் கொள்ள வேண்டும் தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி.. சண்டி ஹோமம் என்பது ஒரு அற்புதமான ஹோமம். ஆடி வெள்ளிக்கிழமை ஆடி பௌர்ணமியை முன்னிட்டும் உலக நன்மைக்காகவும்சண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வம். அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி. இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை அகலும்.தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள்.செல்வம், செல்வாக்கு, ஆரோக்கியம் மன நிம்மதி ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும். சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது. அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி. சண்டி ஹோமம் என்பது ஒரு அற்புதமான ஹோமம்.பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது. துர்கா ஹோமத்தில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் இடம்பெறுகிறது.

Jun 29, 2023

திருசெந்தூர் முருகன்

திருசெந்தூர் மூலவருக்கு தினமும்தூய வெள்ளை நிற ஆடையே அணியப்படுகிறதுதிருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார்இதனால்இத்தலத்துக்கு வீரபாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரபாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.மூலவர் சுப்பிரமணியருக்கு தினமும் தூயவெள்ளை நிற ஆடையேஅணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள்அணிவிக்கப்படும்.மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங் கங்களைக் காணலாம். அறைக்கு பாம்ப றை என்றும் ஒரு பெயர்உண்டு திருசெந்தூர் கோவிலில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது .இந்தகுகைக்கு முன்பு உள்ள கந்தன் மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் .

1 2 ... 12 13 14 15 16 17 18 19 20 21

AD's



More News