2ND MAY விளையாட்டு போட்டிகள்
கராத்தே
கோஜுரியு தேசியக் கராத்தே பஞ்சாபில் 2வது அனைத்து சாம்பியன்ஷிப் ,தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 13 அணிகள் பங்கேற்றன. இதில் சிறப்பாக செயல்பட்ட தமிழக வீரர்கள், 34 தங்கம், 28 வெள்ளி, 35 வெண்கலம் என, மொத்தம் 97 பதக்கங்கள் வென்றனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் கைப்பற்றினர். கர்நாடகா, பஞ்சாப் அடுத்த இரு இடம் பிடித்தன.
டென்னிஸ்,
பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ஜார்ஜியாவில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா ஜோடி, ரஷ்யாவின் வார்வரா பான்ஷினா, டேரியா ஜோடியை எதிர் கொண்டது. ராஷ்மிகா ஜோடி 6-3, 3-6, 10-8 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன் னேறியது.
இந்தியாவின் ருடுஜா போசாலே, பெய்ஜ் மேரி ஜோடி, மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கெயட்டனோ, வடக்கு மரியானா தீவின் கரோல் லீ ஜோடியை சந்தித்தது. ருடுஜா ஜோடி 6-7, 6-3, 10-8 என போராடி வென்றது.
0
Leave a Reply