கோடி நன்மைகள் தரும் ஆடி வெள்ளி வழிபாடு!
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம்
தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கைஎனவே தான்‘கோடி நன்மைகள் தரும் ஆடி வெள்ளி’ அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும். அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும்.. துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகை.
ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் பொங்கல் வைத்து வபாடு நடத்துவர். அந்தவருடம் முழுவதும் குலம் சிறக்க குடும்பத்தோடு பொங்கல் வைப்பதை காணலாம். திருமயிலை முண்டக கண்ணியம்மன், திருவேற்காடு மாரியம்மன், சமயபுரம், நார்த்தாமலை, மற்றும் பல மாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.கன்னியாக்குமரி, திருவானைகாவல் அகிலாண்டேஸ்வரி ஆகிய ஸ்தலங்களில் ஆடி வெள்ளி கிழமைகளில் விடியற்காலை3 மணி முதல் வரிசையில் நின்று தரிசனம் செய்வர்.ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றையதினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும்.
ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.ஆடி வெள்ளியன்றுநாகதேவதைக்குபால்தெளித்துவிசேஷபூஜைசெய்வார்கள்.பராசக்தியின்ஒன்பதுஅம்சங்களை(சர்வபூதசமனி,மனோன்மணி,பலப்பிரதமணி,பலவிகாரணி,கலவிகாரணி,காளி,ரௌத்ரி,ஜேஷ்டை,வாமை)ஒன்பதுசிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால்ஒரேசமயத்தில்அர்ச்சிக்கும்“நவசக்தி அர்ச்சனை’ நடைபெறும்.ஆடிவெள்ளியில்“சண்டிஹோமம்’போன்றசக்திஹோமங்களும்செய்வார்கள். மொத்தத்தில் இந்த ஆடி மாதம் பெண்கள் மற்றும் பெண் தெய்வங்களில் பலம் ஓங்கிநிற்க்கும் மாதம். அம்பிகையைவெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால், நல்லகாரியங்கள் இல்லத்தில் நடைபெற வழி பிறக்கும் என்பதை அனுபவத்தில் காணலாம்.
0
Leave a Reply