யானை தலையுள்ள இந்து பெண் தெய்வம் விநாயகி
விநாயகரைபற்றிதெரியாதவர்கள்இருக்கமுடியாது.முழுமுதற்கடவுளானவிநாயகரைவணங்கியபின்தான்எந்தஒருசெயலாகஇருந்தாலுமேசெய்யத்தொடங்குவோம்.அப்போதுதான்நம்மனதில்நினைத்தகாரியம்எந்தத்தடையுமின்றிநிறைவேறும்என்றநம்பிக்கைஉண்டு. ஆனால்,விநாயகியைபற்றிகாண்போம்.விநாயகி என்பவர் யானை தலையுள்ள இந்து பெண் தெய்வம். இவரைப் பற்றி பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. இவரைப் பற்றிய குறைந்த தகவல்களும், சிலைகளுமே உள்ளன. விநாயகிக்கு சிலை இருந்தால் கண்டிப்பாக அதற்கு பின் கதையும் காரணமும் இருக்கும் என்று தேடினால் அவரைப் பற்றிய பெரிதாக தகவல் இல்லை. பிள்ளையாரை நம்முடைய இஷ்டப்படி எப்படி வேண்டுமோ வழிபடலாம் என்பது மக்களின் எண்ணமாக இருந்தது. அதுவும் கி.பி.6ம் நூற்றாண்டிற்கு பிறகு தான். அதற்கு முன் நம்பிக்கை இருந்தது, ஆனால் உருவ வழிபாடு கிடையாது. யானை தலையினை கொண்டிருப்பதால், விநாயகருடன் இவரை சம்பந்தப்படுத்தி பேசுவதுண்டு.
ஸ்ரீ கணேசா, வைநாயகி, கஜனனா, விக்னேஷ்வரி, கணேசானி என்று பல பெயர்களில் இவரை அழைக்கிறார்கள். விநாயகி சில நேரங்களில்64 யோகினி தெய்வங்களுடன்இருக்கிறார். ஜெயின் மற்றும் புத்தத்தில் விநாயகியைஒரு தனி தெய்வமாகவேகுறிப்பிடுகிறார்கள். புத்த மதத்தில் விநாகியை'கணபதி ஹிரிதயா’ என்று அழைக்கிறார்கள். அதாவது கணபதியின்இதயம் என்று பொருள்.முதலாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விநாயகியின் சிலை ராஜஸ்தானில் உள்ளது. அதன் பிறகு10ம் நூற்றாண்டிலிருந்தே விநாயகியின் சிலை கண்டெடுக்கப்பட்டது. மிகவும் பிரபலமான விநாயகியின் சிலை மத்திய பிரதேசத்தில் உள்ள சௌசாத் யோகினி கோயிலில் அமைந்துள்ளது.மச்ச புராணத்தில் விநாயகியை பற்றி கூறப்பட்டிருக்கிறது. சிவபெருமான் அரக்கனை வதம் செய்யவே விநாயகியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. ஹரிவம்சா, வாயு மற்றும் ஸ்காந்த புராணங்களிலும் விநாயகியை பற்றிய குறிப்புகள் உள்ளன.
எல்லா தொடக்கங்களுக்கும் காரணமாக இருக்கக்கூடிய விநாயகப் பெருமான் ஏற்றபெண் வடிவம்தான் விநாயகி என்றும் கூறுகிறார்கள். விநாயகருக்கு பல்வேறு வடிவங்கள் இருப்பதாக விநாயகபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி விநாயகர் ஏற்றபெண் வடிவம்தான் விநாயகி. தமிழ்நாட்டில் சொல்லுமளவிற்கு விநாயகிக்கு தனி சன்னிதியில்லை என்றாலும் கோயில் தூண்களில் விநாயகியை காண முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளஅழகம்மன் திருக்கோயிலில் வீணை வாசித்தப்படி இருக்கும் விநாயகியை காணலாம். அதேபோலசுசீந்திரத்தில் உள்ள தாணுமலையான் கோயிலில் விநாயகியின் சிற்பத்தை காண முடிகிறது. மதுரைக்கு பெயர் போன மீனாட்சியம்மன் கோயிலில்‘விநாயகதாரணி’ என்றபெயரில் பெண் உருவிலான விநாயகியை காண முடிகிறது. இவரின் கால் புலிக்கால் போல அமைக்கப்பட்டுள்ளதால்‘வியாக்ரபாத்தா விநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்.களத்திர தோஷம், திருமணத்தில் உள்ளதடை, காரியத்தில் ஏற்படும் தடை ஆகியவை நீங்க வேண்டும் என்றால் மாதத்தில் வரும்வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகிக்கு சந்தனக்காப்பிட்டு வழிபட்டால் அனைத்து தடைகளும் விலகும் என்றுநம்பப்படுகிறது.
0
Leave a Reply