பக்தியால் ஏற்படும் சிறப்புகள்
சாதத்துடன் பக்தி இணையும்பொழுது பிரசாதம் ஆகின்றது.
பட்டினியுடன் பக்தி இணையும் பொழுது நோன்பாக மாறுகின்றது.
தண்ணீருடன் பக்தி இணையும் பொழுது தீர்த்தமாகின்றது.
பயணத்துடன் பக்தி இணையும் பொழுது யாத்திரையாகின்றது.
செயல்பாட்டில் பக்தி இணையும்பொழுது சேவையாகின்றது.
இசையுடன் பக்தி இணையும்பொழுது கீர்த்தனையாகின்றது.
வீடு பக்தியில் திளைக்கும் பொழுது கோவிலாக மாறுகின்றது.
பிரம்மச்சரியம் பக்தியில் இணையும் பொழுது துறவறமாகின்றது.
மனிதனை பக்தி ஆக்கிரமிக்கும் பொழுது புனிதன் ஆகின்றான். அந்த பக்தி முழுமையடைந்தால் ஞானியாகின்றான்.
0
Leave a Reply