25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


கோபுரத்தின்உச்சியில் சுதர்சன சக்கரம்உள்ள கோவில் ஸ்ரீநாத்ஜி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோபுரத்தின்உச்சியில் சுதர்சன சக்கரம்உள்ள கோவில் ஸ்ரீநாத்ஜி

கோவிலின் கோபுரத்தில் கலசங்கள் தான் இருக்கும். ஆனால் இங்குள்ள கோவிலிலோ சுதர்சன சக்கரம் பொருத்தப்பட்டு மணிக்கு ஒரு முறை அதை வாசனை திரவியத்தால் துடைத்து விடுகிறார்கள்.நாதன் இருக்கும் இடத்தின் வாயில்அல்லது நாதனிடம் அழைத்துச் செல்லும் வாயில்என்னும் பொருள்பட ஸ்ரீநாத் என்றபெயரில் அமைந்துள்ள ஆலயம். ராஜஸ்தானில் உதய்பூருக்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் பனஸ்நதி கரையில் உள்ளது.இறைவன் ஸ்ரீநாத்ஜி. பிருந்தாவனத்தில் எழுந்தருளியிருந்த இந்தஇறைவனை வைணவ ஆச்சாரியர்களில் முக்கியமானவரான ஸ்ரீமந் நாதமுனிகள் பிருந்தாவனத்தில் யோக நிலையில் இருந்தபோது பூஜித்து வந்ததாக சொல்கிறார்கள். ஸ்ரீநாதமுனிகள் நேரில் வந்து தரிசிக்க எண்ணியகோவில் இது. அவர் வர இயலாத காரணத்தால் அவர்பெயரில் ஸ்ரீநாத் துவாரகை என்றுஅழைக்கப்படுகிறது. 

1665 இல் ஔரங்கசீப் மதுராவை தாக்கிய போது1672 ல் இங்கு கொண்டுவரப்பட்டது. அந்நிய படையெடுப்பின் போதுகோஸ்வாமி தாவோஜி என்பவர் ராணாராஜ்சிங்கின் உதவியுடன் பெருமாளின் விக்கிரகத்தை மாட்டுவண்டியில் எடுத்துக்கொண்டு இந்த ஊருக்கு வந்தாராம். அப்போது சக்கரம் மண்ணில் புதைந்து வண்டிநகர மறுக்கவே இந்த இடமேஇறைவனுக்கு விருப்பம் போலும் என உணர்ந்த தாவோஜி அங்கேயே விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தாராம்.ஏழு வயது குழந்தையாக இங்கு கிருஷ்ணர் காட்சி தருகிறார். வல்லபாச்சாரியாரின் புஷ்டி மார்க்கம் என்ற சம்பிரதாயத்தில் இக்கோவில் வழிபாட்டு முறை உள்ளது. வல்லபாச்சாரியாரின் மகன் விட்டல் நாத்ஜி இவ்வழிபாட்டு முறையை ஸ்தாபித்தார்.கோவர்தன மலையைதூக்க இடது கையை தூக்கியதால் விக்ரகம் அவ்வாறே காணப்படுகிறது. இடதுகையால் கோவர்தனகிரியை சுமந்த படியும், வலதுகையை இடுப்பில் வைத்த படியும் தரிசனம் தரும்ஸ்ரீநாத்ஜி கருப்பு சலவை கல்லில் வடிக்கப்பட்ட விக்ரகம். இந்த விக்கிரகத்தில் இரண்டுபசுக்கள், இரண்டு மயில்கள், பாம்புமற்றும் கிளி ஆகியவையும் உள்ளன. 

இங்கே எம்பெருமாளை குழந்தை கண்ணனாகவே பாவித்து வணங்குகின்றனர். குழந்தையால் நீண்டநேரம் நிற்க முடியாது என்பதால் ஒவ்வொரு முறையும்30 நிமிடங்களுக்கு மட்டுமே தரிசனம் தருகிறார். பக்திமீராவுக்கு ஸ்ரீ கண்ணன் அடைக்கலம் அளித்ததலமும் இதுதான்.காலையிலிருந்து இரவுவரை கிருஷ்ணர் விக்ரகம் பலவாறுஅலங்கரிக்கப்படுகிறது. ஆரத்திஇங்கு மிகவும் விசேஷமாக காட்டப்படுகிறது.இங்கு தரப்படும் பிரசாதங்கள் மிகவும் பெரிய சைஸ் உள்ளன. விலையும் ஜாஸ்தி தான்.ஸ்ரீநாத்ஜிக்கு அணிவிக்கப்படும் ஆடைகள்தைக்கும் இடம் மாடியில் உள்ளது. வாயில்துணி கட்டிக் கொண்டு(எச்சில் தெறிக்காமல் இருக்க) ஸ்ரீநாத்திற்கு ஆடை தைக்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை விதவிதமாக அழகாகஉடை மாற்றி விடுகிறார்கள்.அதேபோல் பகவானுக்கு மாலையில் அணிவிக்கக்கூடிய மலர்மாலையை தொடுத்து மிக அழகாகவாழை இலையை சுற்றி மூடிவைக்கிறார்கள்.பூத்தொடுக்கும் இடம், மாலை கட்டும் இடம், உடைகள்தைக்கும் இடம், பிரசாதம் செய்யும் இடம்ஆகியவற்றை நம்மால் நேரில் சென்றுபார்க்க முடிகிறது.

மிக மிக அழகான சுதர்சன சக்கரம் கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. அதற்குஅரை மணி நேரத்துக்கு ஒரு முறை வாசனை திரவியத்தை கொண்டுபஞ்சால் துடைத்து விடுகிறார்கள். சுதர்சன சக்கரம் உஷ்ணம்ஆகிவிடும் எனவும் அதனால் அரை மணிக்கு ஒரு முறைவாசனை திரவியங்களை பஞ்சில் நினைத்து ஒத்திஎடுப்பதாகவும் கூறுகிறார்கள்.நம் பக்கம் திருப்பதி ஏழுமலையானைப் போல தென்னிந்தியர்கள் ஸ்ரீ நாத்ஜீயை கொண்டாடுகின்றனர் 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News