பல்லியை வைத்து சகுனம்
பொதுவாகவேவீட்டில் உலாவும் உயிரினங்களில் பல்லி முக்கியஇடம் வகிக்கின்றது. பல்லியைவைத்து பல்வேறு சகுனம்பார்க்கும் வழக்கமும் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்றது.பல்லியைப்பார்த்தாலே சிலருக்கு அருவருப்பும், பலருக்கும் பயமும்ஏற்படும். பல்லி இருந்தாலேவாழும் இடம் என்றுசொல்வார்கள்.ஆனால், சுவற்றில்பல்லியைப் பார்த்தாலே தெறிக்கஓடுபவர்களும் இருக்கிறார்கள்.வீட்டில்சில நேரங்களில் நாம் குட்டி பல்லிகள் சுற்றுவதை கண்டிருப்போம். இதற்கு இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் என்ன பலன் இருக்கின்றது பல்லியை வைத்து பல்வேறு சகுனம் பார்க்கும் வழக்கமும் தொன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றது
இந்துசாஸ்திரத்தின் படிபல்லிகள் மகா லட்சுமியின் வடிவமாகவே பார்க்கப்படுகின்றது. எனவே வீட்டில்பல்லி குட்டிகள் நடமாடினால்,இது மிகவும் நல்லஅறிகுறி என நம்பப்படுகின்றது. எனவே ஒவ்வொருமுறை பல்லியை பார்க்கும்போதும் உங்களின் நிதிபிரச்சனை தீரும், கஷ்டங்கள்தீரும் எனபது ஐதீகம்.எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நல்லநிகழ்வுகள் குறித்து உணர்துவதாகவே பல்லியின் குட்டியைகாண்பது பார்க்கப்படுகின்றது.
ஒன்றுக்கும் மேற்பட்ட குட்டிபல்லிகளை ஒன்றாக பார்த்தால்அது மிகவும் நல்லசகுனம் ஆகும். அதனால்எதிர்பாராத நல்ல செய்திகள்கிடைக்கும். மேலும் ஆண்மற்றும் பெண் பல்லிகள் வீட்டில் இணைவதை பார்த்தால்,கணவன் மனைவிக்கு இடையில் ஒற்றுமையும் பாசமும் அதிகரிக்கும்.நல்ல நாட்களின்குட்டி பல்லி வீட்டிற்குவந்தால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும் என இந்துசாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. வீட்டில் பல்லிகுட்டிகள் ஓடினால் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும்ஆரம்பிக்கும் வாய்ப்பு அமையும்.
வீட்டில்பல்லி குட்டியை கண்டால்அதை விரட்டவோ, கொல்லவோகூடாது. அதை கொல்வதால் மோசமான பலன்களை சந்திக்கநேரிடும். பாரிய பணதட்டுப்பாடு மற்றும் தொழில்ரீதியான வீழ்சிக்கு வழிவகுக்கும்.ஆனால் தற்செயலாக வீட்டில் பல்லி குட்டி இறந்து கிடந்தால் பயப்பட தேவையில்லை அதனை நிலத்தில் புதைத்துவிட்டால் எந்த தீமையும் ஏற்படாது.
0
Leave a Reply