திருவில்லிபுத்தூர் ஆண்டாள், பிள்ளையார்பட்டி கோயில்களின் சிறப்புகள்
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்
108 வைணவ திவ்ய தேசங்களில் 99வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. பெரியாழ்வார்.ஆண்டாள், வடபத்ரசாய் ஆகிய மூவர் அவதரித்த தலம் ஆதலால் 'முப்புரிஊட்டியதலம்'எனப்படும்.11 கலசங்களை உடையஇக்கோயில்ராஜகோபுரத்தின் உயரம்196 அடி.இக்கோபுரமே தமிழக அரசின்சின்னமாக அமைந்துள்ளது பொதுவாக எல்லாகோயில்களிலும் ஒரு விமானம்தான் இருக்கும்.இங்குள்ள கருவறையில் 2 விமானங்கள் உள்ளதும் தனிச்சிறப்பு .
பிள்ளையார்பட்டி கோயில்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சுமார்1300 ஆண்டுகள் தொன்மையுடையது என கல்வெட்டுகள் கூறுகின்றன. விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயில் இதுவே. முருகனைப் போலவே பிள்ளையாருக்கும் அறுபடை வீடு உண்டு. அதில் இக்கோயில் 5ம் படை வீடாகும். இங்கு 3 லிங்கங்கள் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கின்றனர். இது வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பு- அம்சமாகும்.
0
Leave a Reply