திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் பல காலங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது தற்போதிருக்கும் நிலைவரை நின்றசீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்டிருக்கிறது. நவ லிங்கங்களில் முதல் லிங்கம் இங்குள்ள மூல மகாலிங்கமே தமிழகத்தில்3 மூலவர்களைக் கொண்ட ஒரே கோவில் .இது சிவபெருமான் நடனமாடிய 5 முக்கிய சபைகளில் இக்கோவில் தாமிர சபையாக உள்ளது. இங்குள்ள பிரகாரத்தில் ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள் உள்ளன.
ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடிஅகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரியசிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும்தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல்மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள்சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம்ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆதிப் பிரளய காலத்தில்நான்கு வேதங்களும் இந்த வேணுவனத்தில் உள்ளதிரு மூல மகா லிங்கத்தைவணங்கியே அழிவிலாத நிலையப் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.
நவ லிங்கங்களில் திருநெல்வேலியில் உள்ள மூல மகாலிங்கமே முதல் லிங்கம் என்றும், கயிலையில் உள்ளது இரண்டாம் லிங்கம்என்றும், காசியில் உள்ளது மூன்றாம் லிங்கம்என்றும், கேதாரத்தில் உள்ளது நான்காம் லிங்கம்என்றும், லட்சுமிகிரியில் உள்ளது ஐந்தாம் லிங்கம்என்றும், காளத்தியில் உள்ளது ஆறாம் லிங்கம்என்றும், சிதம்பரத்தில் உள்ளது ஏழாவது லிங்கம்என்றும், காஞ்சியில் உள்ளது எட்டாவது லிங்கம்என்றும், மதுரையில் உள்ளது ஒன்பதாவது லிங்கம்என்றும் நவலிங்கங்களாக சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் உள்ள திருமூலமகாலிங்கத்திற்கு ஆதிலிங்கம், வேதலிங்கம், விஷ்ணு லிங்கம், திரிகண்டலிங்கம், தருமலிங்கம், தானலிங்கம், கற்பகலிங்கம், கெளரிலிங்கம், பரமலிங்கம், பராபரலிங்கம், நிற்குணலிங்கம், சற்குணலிங்கம் என்ற பெயர்களும் உள்ளதாககூறப்பட்டுள்ளது.இந்த திருநெல்வேலி தலத்தில்உள்ள ஆதி மூல மகாலிங்கத்தைவணங்கினால் நவலிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்என்று திருநெல்வேலி தல புராணத்தின் திருமூலலிங்கச்சருக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின்இரு பக்கமும் கங்கையும், யமுனையும் துவார பாலகிகளாக காவல்புரிய, உள்ளே கருவறையில் ஒரு கரத்தில் மலர்ஏந்தியும், மறு கரத்தை கீழேதொங்க விட்டபடியும், சற்றே இடைநெளித்து, மூக்கில்வைர புல்லாக்கு மின்ன, சந்திர வதனம்பூத்த திருமுகத்தவளாய், நின்ற கோலத்தில் ஆனந்தகாட்சியளிக்கிறாள் அம்மை காந்திமதி..இந்தகாந்திமதி அம்மைக்கு, வடிவுடையம்மை, வேணுவன நாயகி, சாலிவாடீஸ்வரி, திருக்காமக் கோட்டம் உடைய நாச்சியார்ஆகிய பெயர்களும் இருக்கிறது.பொதுவாக கருவறையில் விநாயகர்அமர்ந்த கோலத்தில் தான் நமக்கு தரிசனம்அளிப்பார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் கிழக்கு கோபுரவாசலுக்கு தென் பக்கம் உள்ளசிறிய கோவிலில் விநாயகர் கருவறையில் சற்றே வித்தியாசமாக நின்றகோலத்தில் தரிசனம் தருவது சிறப்பம்சம்.
சுவாமி நெல்லையப்பர் கோவிலின் நடுநயமாக சுவாமிக்கு நேர் எதிரே காட்சித்தரும் நந்தியே மாக்காளை ஆகும். மிக பிரம்மாண்ட வர்ண கலாபத் திருமேனியாகியஇந்த மாக்காளை சுண்ணாம்பினால் செய்யப்பட்ட சுதை திருமேனி ஆகும்.சுவாமி நெல்லையப்பர் சன்னதியின்முதலாம் வடக்கு திருச்சுற்றில் உள்ளதுதெற்கு நோக்கிய மகிஷாசூரமர்த்தினி சன்னதி. இங்கு மகிடன் தலை மேல்நின்ற கோலத்தில் அம்மை அழகுற காட்சித்தருகிறாள். இந்த அம்மையின் சன்னதியில்அவளுக்குரிய வாகனமான சிம்மத்தோடு, மானும்இருப்பது சிறப்பம்சம் ஆகும். சிங்கமும், மானும்ஒன்றுக்கு ஒன்று பகை கொண்டமிருகங்கள் ஆயினும் இங்கு சேர்ந்துகாட்சியளிப்பதால், இந்த அம்மையை வணங்கும்பக்தர்கள் எதிரிகளின் தொல்லை நீங்கி நண்பர்களாகஆக பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
சுவாமி நெல்லையப்பர் கோவில் இரண்டாம் மேலபிரகாரத்தில் தாமிர சபை அருகேகிழக்கு நோக்கிய தனி சன்னதியில்வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிக்கிறார் நெல்லைசுப்பிரமணியர். இவரைப் போற்றி அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார் என்பது சிறப்பம்சம்.
சுவாமி கோவில் இரண்டாம் தெற்குபிரகாரத்தில் வடக்கு நோக்கிய சன்னதியில்மூன்று முகங்கள், மூன்று கரங்கள், மூன்றுகால்களுடன் காட்சித் தருகிறார் சுர தேவர். இவருக்குமிளகு அரைத்து சாத்தி, வெந்நீரால்அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதுவிசேஷமாக கருதப் படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தை வளங்கொழிக்க செய்யும் வற்றாத ஜீவ நதியாகியதாமிரபரணி அம்மைக்கு இங்கு உற்சவராக சன்னதிஉள்ளது. சுவாமி கோவில் இரண்டாம்பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களை அடுத்துதாமிரபரணி அம்மை காட்சித் தருகிறாள். இவள் தைப் பூசம், சித்ராபெளர்ணமி ஆகிய நாட்களில் இத்தலசுவாமி, அம்மையோடு தாமிரபரணி நதிக்கு எழுந்தருளி தீர்த்தவாரிகண்டருள்வாள்.
0
Leave a Reply