திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில்
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார்கோயில் என்பது திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் அமைந்துள்ளகோயிலாகும். இந்தக் கோவில் குபேரன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.இடுக்கு பிள்ளையார் கோயில் என அழைக்கப்பட்டாலும் விநாயகர் சிலைஇக்கோயிலில் இல்லை. தரைப்பகுதியில் கால் பாத சிற்பம் காணப்படுகிறது. இடுக்குபிள்ளையார் கோயிலில் நுழைந்து வரும் போது பக்தர்கள் இந்தப் பாதத்தை தொட்டுவணங்குகின்றனர்.கோயில் நேர்கோட்டில் அமையாத மூன்று வாசல்களை கொண்டது. பக்கவாட்டின்இருபுறமும் சுவர் உள்ளது. பின்பக்க வாசல் வழியாக நுழைந்து இரண்டாவது
வாசலை தவழ்ந்தபடி அடைந்து மூன்றாவது வாசல் வழியாக வெளியே வரவேண்டும். இரண்டாவது வாசல் வழியே வெளிவர ஒருக்களித்து படுத்து கைகளை
உந்தி சிரமப்பட்டு வெளிவர வேண்டியுள்ளது.இடுக்கு பிள்ளையார் கோயில் பரம்பரை கோயில் ஆகும். இந்தக்கோயிலைதிருவண்ணாமலை சின்னக்கடை தெருவில் உள்ள ரங்கநாதன் என்பவர்பராமரிக்கிறார். இக்கோயிலுக்கு 1969 மார்ச் மாதம் 23 ஆம் நாள் முதன் முதலாகதிருப்பணி செய்துள்ளனர். அதன் பின்பு 1976 முதல் 2004 வரை பல முறை திருப்பணிநடைபெற்றுள்ளதாக குறிப்புகள் கோயிலில் எழுதப்பட்டுள்ளது.
0
Leave a Reply