25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Apr 21, 2025

ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர்  திகம் சிங் வெற்றி.

 15,17 வயதுக்குட்பட்.டோருக்கான ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ஜோர்டனில், ஆண்களுக்கான 17 வயதுக்குட் பட்டோருக்கான போட்டிகள் நடக்கின்றன. இதன் 52 கிலோ பிரிவு முதல்சுற்றில் இந்தியாவின் திகம் சிங், ஐக்கிய அரபு எமிரேட்சின் (யு.ஏ.இ.,) அலி ,அல்மெஸ்மாரி மோதினர். இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு போட்டியில் தங்கம் வென்ற திகம் சிங், துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினர். போட்டியை பாதியில் நிறுத்திய நடுவர், திகம் சிங் வெற்றி பெற்றதாக அறிவித்தார். ஜோர்டனில்ஆண்களுக்கான 17 வயதுக்குட் பட்டோருக்கான போட்டியில்தங்கம் வென்றஇந்தியாவின் திகம் சிங்பின்,57 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராகுல் காரியா, சீனதைபேயின் லி ஷோசூன் மோதினர். இந்திய வீரரின் தாக்குதலை முடியாமல் சமாளிக்க சீன தைபே வீரர் திணறியதால், போட்டியை பாதியில் நிறுத்திய 'ரெப்ரி', ராகுல் காரியா வென்றதாக அறிவித்தார்.

Apr 20, 2025

20 TH APRIL விளையாட்டு போட்டிகள்.

ஸ்குவாஷ் .உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர்அமெரிக்காவின் சிகாகோவில், வரும் மே 9,17நடக்க உள்ளது.இதற்கான ஆசிய தகுதிச் சுற்று, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இந்தியாவின் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் அனாஹத் சிங், ஹாங்காங்கின் டோபி சேமோதினர். இதில் அனாஹத் 3-1(11-4, 9-11, 11-2, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.இந்தியாவின்ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ,வீர்சோட்ரானி, மலேசியாவின் அமீஷன்ராஜ் சந்திரன் மோதினர். வீர்சோட் ரானி 3-0 (11-3, 11-4, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.அனாஹத், வீர் சோட்ரானி, தகுதிச் சுற்று பைனலில் உலக சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முறையாக களமிறங்க உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கு இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அபே சிங், ரமித் டான்டன், நேரடியாக தகுதி பெற்றிருந்தனர். துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் பெருவில், தொடர் ஆண்களுக்கான தனிநபர் 10 மீ.,'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா வின் ருத்ராங்க் ஷ்பாலா சாகேப் பாட்டீல்(632.0 புள்ளி), அர்ஜுன் பாபுதா(631.9) 3,4 வதுஇடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.10மீ.,'ஏர் ரைபிள்' பிரிவு பெண்களுக்கான தனி நபர் தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஆர்யா போர்ஸ் 633.56 புள்ளிகளுடன்,2வதுஇடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார். இந்திய வீராங்கனைகளான நர்மதா நிதின் ராஜு (627.6), சோனம் (623.5) முறையே 16, 30வதுஇடம் பிடித்தனர். அடுத்து நடந்த பைனலில் ஆர்யா, 188.1 புள்ளிகளுடன் 5வதுஇடம் பிடித்தார்.இதுவரை 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ஈட்டி எறிதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள சவுதி அரேபியாவில் சாம்பியன்ஷிப் 6வது சீசன் நடந்தது.ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இந்தியாவின் ஹிமான்சு, 67.57 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். 18 வயது ஆசிய சாம்பியன் ஷிப் ஈட்டி எறிதலில் இந்தியா கைப்பற்றிய முதல் தங்கம்..இந்தியாவின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் 2.03 மீ., தாவிய  தேவக் புசான், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.'மெட்லே ரிலே ' ஓட்டம் .ஆண்களுக்கான 'மெட்லே ரிலே 'ஓட்டம் நடந்தது. இதன்படி முதல் வீரர் 100 மீ., அடுத்த வீரர் 200 மீ.,3வது வீரர் 300 மீ., கடைசி வீரர் 400 மீ., துாரம்(மொத்தம் 1000 மீ.)ஓடுவர். இந்தியா சார்பில் சிராந்த், சையது சபீர், சாகேத் மின்ஜி,காதிர்கான் அடங்கிய அணிபங்கேற்றது. 1நிமிடம்,52.15 வினாடி நேரத்தில் வந்து இரண்டாவது இடம்பிடிக்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.இந்திய பெண்கள் அணியினர், இரண்டாவது இடத்தில் 'பேடன்'மாற்றிய போது, கீழே தவறவிட்டதால் போட்டியை முடிக்காமல் வெளியேறினர். இந்திய அணி1 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் வென்றது. 

Apr 20, 2025

19 TH AND 20TH  APRIL IPL MATCH.

19 TH   APRIL IPL MATCH GUJARAT  19-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத், டெல்லி, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 203/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 204/3, ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்ட நாயகனாக JOS BUTTLER தேர்ந்தெடுக்கப்பட்டார்.19-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான், லக்னோ, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 178/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய லக்னோ அணி 180/5, ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக AVESH KHAN தேர்ந்தெடுக்கப்பட்டார்.20 TH APRIL IPL பஞ்சாப் -  BENGALORE 20-ம் தேதி நியூசண்டிகரில்,, பஞ்சாப், பெங்களுர், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 157/6 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பெங்களுர் அணி 159/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக VIRAT KOHLI தேர்ந்தெடுக்கப்பட்டார்.20 TH APRIL IPL சென்னை-மும்பை20-ம் தேதி மும்பையில், சென்னை-மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 176/5 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 177/1 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ROHIT SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Apr 18, 2025

18th APRIL IPL MATCH. BENGALORE - PUNJAB

 APRIL  18-ம் தேதி பெங்களூரில்,  பஞ்சாப், பெங்களூர், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 95/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 98/5 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக TIM DAVID தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Apr 18, 2025

விளையாட்டு போட்டிகள்.18th april

குண்டு எரிதல்,இந்தியாவின் நிஷ்சே ஆசிய சாம்பியன்ஷிப் (18வயது) குண்டு எறிதலில் வெள்ளி வென்றார். துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட நிஷ்சே, ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 19.59 மீ., துாரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளி வென்றார். இத்தொடரில் இவர் கைப்பற்றிய இரண் டாவது பதக்கம் இது.  செஸ்  ('பிடே') சார்பில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி ' செஸ் தொடர் நடத்தப்படுகிறது. ஐந்தாவது தொடர் புனேயில் நடக்கிறது.நேற்று ஐந்தாவது சுற்று போட்டி நடந்தன. இந்தியாவின் வைஷாலி, மங்கோலியாவின் பக்குயாக்கை எதிர்கொண்டார். இதில் 52வது நகர்த்தலில் வைஷாலி வெற்றி பெற்றார். ஐந்து சுற்று முடிவில் சீனாவின் ஜு ஜினெர் (4.0) முதல் இடத்தில் தொடர்கிறார். இந்தியாவின் ஹம்பி (3.5), திவ்யா (3.5), வைஷாலி (2.5), ஹரிகா (2.5) அடுத்த நான்கு இடங்களில் உள்ளனர். வட்டு எரிதல். இந்தியாவின் லக்சித்தா பெண்களுக்கான வட்டு எறிதலில் (41.30 மீ.,) வெண்கலம் கைப்பற்றி னார். மா சென்யி (53.81, சீனா), ஜாவோ அன்கி (47.89, சீனா) தங்கம், வெள்ளி வென்றனர். பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் சவுரியா (13.80 வினாடி) வெண்கலம் வசப்படுத்தினார். பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஆர்த்தி, 24.31 வினாடி நேரத்தில் கடந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இந்திய அணி 3 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கம் வென்று உள்ளது. பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை  உலக கோப்பை கிரிக்கெட் ,இந்தியாவில் நடக்க உள்ள தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் பெண்கள் அணி தகுதி பெற்றது.ஐ.சி.சி., பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இந்தியாவில் (செப். 29-அக். 26) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டி பாகிஸ்தானில் நடக்கின்றன. 6 அணிகள்  மோதுகின்றன. 'டாப்-2' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு முன்னேறும்.  

Apr 17, 2025

17th APRIL IPL MATCH. MUMBAI - HYDERABAD

 APRIL 17-ம் தேதி மும்பையில், ஹை தராபாத், மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 162/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 166/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக WILL JACKS தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Apr 17, 2025

ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா .

 தென் ஆப்பிரிக்காவில் உள்ள போட் செஸ்ட்ரூமில்  சர்வதேச அழைப்பு தடகள போட்டி ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். 6 பேர் களம் கண்ட இந்த பந்தயத்தில் நீரஜ் சோப்ரா 84.52 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றி, இந்த சீசனை வெற்றியோடு தொடங்கினார். 

Apr 17, 2025

ஐந்தாவது தொடர் புனேயில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') 

 ஐந்தாவது தொடர் புனேயில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர் நேற்று நான்காவது சுற்று போட்டி நடந்தன. இந்திய வீராங்கனை ஹம்பி, ரஷ்யாவின் போலினாவை சந்தித்தார். ஹம்பி, போட்டியின் 33வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் திவ்யா, ஜார்ஜியாவின் சலோமி மெலியாவை எதிர்கொண்டார். திவ்யா நீண்ட போராட்டத்துக்குப் பின், 77 வது நகர்த்தலில் திவ்யா வெற்றி பெற்றார்.  இந்தியாவின் ஹம்பி (3.0), திவ்யா (3.0), ஹரிகா (2.0) அடுத்த மூன்று இடங்களில் உள் ளனர். வைஷாலி (1.5) 7 வது இடத்தில் உள்ளனர். 

Apr 17, 2025

துப்பாக்கி சுடுதல் 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சவுரப் சவுத்ரி ஜோடி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

 பெருவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரில் .கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சவுரப் சவுத்ரி ஜோடி, 580.20 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தது. அடுத்து நடந்த பைனலில் சுருச்சி, சவுரப் சவுத்ரி ஜோடி, சீனாவின் கியான்ஜுன் யாவோ, கை ஹு ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 17-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

Apr 16, 2025

16th APRIL IPL MATCH. RAJASTHAN - DELHI

 APRIL  16-ம் தேதி டெல்லியில், ராஜஸ்தான் டெல்லி,  அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 188/5 ரன்கள் எடுத்தது .அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 188/4 ரன்கள் எடுத்து,  இரண்டு அணிகளும்  சமநிலையில்   உள்ளன.  ஆட்ட நாயகனாக MITCHELL STARC  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 2 ... 155 156 157 158 159 160 161 ... 181 182

AD's



More News