25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Feb 25, 2025

பெண்களுக்கான புரோ லீக்6வதுசீசன் (2024-25) ஹாக்கி: இந்தியாவெற்றி

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோலீக் 6வது சீசன்(2024,25) நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் புவனேஸ் வரில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஒலிம்பிக், உலக சாம்பியன் நெதர்லாந்து அணிகள் மோதின.போட்டி துவங்கிய 17,28 வது நிமிடத்தில் நெதர் லாந்தின் கேப்டன் பியன் சாண்டர்ஸ்,வான்டர் பேதலா ஒரு கோல்அடிக்க முதல் பாதியில் இந்திய அணி 0,2என பின் தங்கியது.இரண்டாவது பாதியில் போட்டியின் 35வதுநிமிடத்தில் இந்தியாவின் தீபிகா, ஒருபீல்டு கோல் அடித்தார். அடுத்த 8வது நிமிடம் பல்ஜீத் கவுர்(43)தன் பங்கிற்கு ஒருகோல் அடித்தார். முடிவில்போட்டி 2,2 என்ற கணக்கில் சமன்ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. இரு அணிகளுக்கும் தலாஐந்து வாய்ப்பு தரப்பட்டன. முதல், மூன்றாவது வாய்ப்பில் தீபிகா,மும்தாஜ்கோல் அடித்தனர். பியூட்டி, பல்ஜீத் வாய்ப்புகளை வீணடித்தனர்.நெதர்லாந்து சார்பில் மார்ஜீன் வின் மட்டும் ஒருகோல் அடித்தார். மற்றநான்கு வீராங்கனைகள் வாய்ப்பை இந்திய கோல் கீப்பர் சவிதா தடுத்து முடிவில். இந்திய அணி 2,1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.நெதர்லாந்தை வென்ற, இந்திய வீராங் கனைகள் ஒவ்வொருவருக்கும் ரூ1லட்சம்,பயிற்சியாளர்களுக்குரூபாய்50,000பரிசுஅறிவிக்கப்பட்டுள்ளது.  

Feb 25, 2025

தேசிய ரோல் பால்போட்டி தமிழக அணி2வதுஇடம்.

திருச்சி, தொட்டியம், கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லுாரியில், தேசிய 21வது சீனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தமிழகம், கர்நாடகா, கேரளா, மகாராஷ் டிராஉள்ளிட்ட மாநிலங் களில் இருந்து,600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த இறுதிப் போட்டியில், ஆண்கள் பிரிவில் உத்தரபிரதேச அணி 6 கோல் அடித்து, சாம்பியன் ஆனது. பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் ராஜஸ்தான், தமிழக அணிகள் மோதின. ராஜஸ்தான் 4கோல்கள் அடித்து சாம்பியன் பட்டம் வென்றது. தமிழகம் மூன்று கோல் அடித்து இரண்டாம் இடத்தை பிடித்தது. இரண்டுமுறை சமஎண்ணிக்கையில் கோல் அடித்த நிலையில், கோல்டன் கோல் வாய்ப்பில், தமிழக அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது. 

Feb 25, 2025

பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக விளையாடும் விராட் கோலி.. 

துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி 'ஏ'பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை அரையிறுதிக்கு வீழ்த்தி முன்னேறியது. சதம் விளாசிய கோலி, இந்திய வெற்றிவாய்ப்புக்குவசப்பட்டது.ஒருநாள் அரங்கில் அதிகரன் எடுத்தவர் பட்டியலில் கோலி(299போட்டி,14,085 ரன் மூன்றாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சகவீரர் சச்சின்(463ல் 18,426) நீடிக்கிறார்.2வது,4வது இடத்தில் முறையே சங்ககரா (இலங்கை, 404 14,234), பாண்டிங் (375ல் 13704) உள்ளனர்.சங்ககராவை கோலிக்கு முந்த இன்னும் 150 ரன் தேவை. சச்சின் சாதனையை எட்ட 4,341ரன் தேவை. ஏற்கனவே அதிக சதம் அடித்தவர்பட்டியலில் சச்சினை(49) முந்தி முதலிடம் பெற்றார் கோலி  (51). தற்போது 36வயதாகும் இவர்,தொடர்ந்து அசத்தும் பட்சத்தில் அதிக ரன்எடுத்து சாதிக்கலாம். பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக விளையாடுவார் கோலி  2022ல்'T20' உலக கோப்பையில் 82 ரன்எடுத்து அசத்தினார். சாம்பியன்ஸ் டிராபியிலும் கைகொடுத்துள்ளார். துபாய் ஆடுகளத்தில் 'டாப்ஆர்டர்’பேட்டர் ஒருவர் நிலைத்து நின்று ஆடினால் வெற்றி வசப்படும் நிலைஇருந்தது. 'சாம்பியன்' வீரர் என்பதை நிரூபித்தார். 50ஓவர் போட்டியில் அசைக்க முடியாத வீரராக திகழ்கிறார். இவரது சதம் தான்இந்தியா- பாகிஸ்தான் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது.

Feb 24, 2025

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங் களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கின்றன. நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இந் தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ் தான் 33.1 ஓவரில் 151/2 என வலுவாக இருந்தது. அப் போது 300 ரன் எட்ட வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்திய பவுலர்கள் பிடியை இறுக்க, 34.5 ஓவரில் 165/5 ரன் என சரிந்தது. சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் சூப்பர் துவக்கம் தந்தனர். நசீம் ஷா ஓவரில் ரோகித் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார்.   பின் கோலி, ஸ்ரேயாஸ் அபாரமாக ஆடினர். சல்மான் பந்தில் ஸ்ரேயாஸ் ஒரு இமா லய சிக்சர் (102 மீ., துாரம்) சிக்சர் விளாசினார். அரைச தம் கடந்த ஸ்ரேயாஸ், 56 ரன்னுக்கு குஷ்தில் பந்தில் இமாம் - உல்- ஹக்கின் சர்ச் சைக்குரிய 'கேட்ச்சில்' வெளி யேறினார். 42 ஓவரில் இந்தியா 238/4 ரன் எடுத்திருந்தது. அப்போது கோலி 95 ரன்னில் இருந்தார். வெற்றிக்கு 4 ரன், கோலி சதத்திற்கு 5 ரன் தேவை என்ற நிலை ஏற்பட்டது. குஷ்தில் வீசிய அடுத்த ஓவ ரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்த கோலி 96 ரன்னை எட்டினார். அடுத்த பந்தில் அக்சர் ஒரு ரன் எடுத்தார்.3வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்த கோலி, ஒருநாள் அரங்கில் 51வது சதம் எட்டினார். இந்திய அணி 42.3 ஓவரில் 244/4 ரன் எடுத்து சுலப வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய இந்தியாவின் விராத் கோலி, ஒரு நாள் போட்டி அரங்கில் தனது 51வது சதத்தை பதிவு செய்தார். அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் (49 சதம்) உள்ளார்.இது கோலியின், 82வது சர்வதேச சதம் (டெஸ்ட்-30, ஒருநாள் -51, 'டி-20'-1) ஆனது. ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 3வது வெற் றியை பதிவு செய்தது. இரு அணிகளும் 6 முறை மோதிய போட்டியில் இந்தியா 3 (2013, 2017, 2025), பாகிஸ்தான் 3ல் (2004, 2009, 2017) வெற்றி பெற்றன.பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் கூறுகையில், "கோலி 'பார்ம்' இல்லாமல் தவிப்பதாக உலகமே விமர்சித்தது. ஆனால், முக்கிய போட்டியில் அனாயசமாக சதம் விளாசி, ஆட்ட நாயகனாக முத்திரை பதித்தார். இவரது சிறப்பான உடற்தகுதி, கடின உழைப்பை பாராட்டுகிறேன்," என்றார்.

Feb 21, 2025

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி .

 கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணியை சந்தித்தது.50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது இதனையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் ஆப்கானிஸ் தான் அணி 208ரன்னில் அடங் கியது. இதனால் தென்ஆப்பி ரிக்க அணி 107 ரன் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. ஆப்பிரிக்க வீரர் ரையான் ரிக் கெல்டன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அணிகள், மோதுகின்றன. நாளை இந்தியா, பாகிஸ்தான் அணிகள், துபாயில் மோதுகின்றனர்.   

Feb 21, 2025

இந்தியா ஆசிய கோப்பை வில்வித்தையில் அதிக புள்ளி எடுத்து உலக சாதனை படைத்தது.

தாய்லாந்தில் ஆசிய கோப்பை வில்வித்தை 'ரேங்கிங்' தொடர் (21 வயதுக்குட்பட்ட) நடக்கிறது. ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகு திச்சுற்று நடந்தது. இந்தியாவின் குஷால் தலால் (712 புள்ளி), கணேஷ் மணிரத்னம் (711), மானவ் கணேஷ்ராவ் (706) இணைந்து மொத்தம் 2129 புள்ளி எடுத்து, புதிய உலக சாதனை படைத்தனர். இதற்கு முன், இதே கூட்டணி, 2024ல்  2111 புள்ளிஎடுத்திருந்தது. தொடர்ந்து அணிகளுக்கான பிரிவில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறியது.இந்திய 5-3 என்ற அணி கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பைனலுக்கு  முன்னேறியது.'ரிகர்வ்' கலப்பு அணிகளுக்கான பிரிவு அரை யிறுதியில் இந்தியாவின் பசந்தி, விஷ்ணு ஜோடி, மலேசியாவின் ஹரிஸ்யா, ஈவன்ரிச் ஜோடியை சந்தித்தது. போட்டி 4-4 என சமனில் முடிய, இந்திய அணி 'ஷூட் ஆப்' முறையில் 19-17 பெற்று, என வெற்றி பைனலுக்கு முன்னேறியது.'ரிகர்வ்' அணிகளுக்கான ஆண்கள் அரை யிறுதியில் இந்தியாவின் விஷ்ணு, கோல்டி, ராகுல் ஜோடி வெற்றி பெற்றது. 

Feb 20, 2025

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியது.

 வங்காளதேச அணி 49.4 ஓவர்களில் 228 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.  இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியா சத்தில் அபார வெற்றிபெற்றது.  சுப்மன் கில் 101 ரன்னுடனும் (129 பந்து, 9 பவுண்டரி, சிக்சர்), லோகேஷ் ராகுல் 41 ரன்னுட னும் (47 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இதே மைதானத் தில் நாளை மறுதினம் (ஞாயிற் றுக்கிழமை) பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது

Feb 20, 2025

விளையாட்டு போட்டிகள் 21st february

மாற்றுத்திறனாளிகளுக்கான 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து 1,476 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் டி.11 பிரிவில் அரியானா வீரர் அன்குர் தமா 18 நிமிடம் 22.29 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். வட்டு எறிதலில் எப்.55 பிரிவில் தமிழகவீரர் முத்துராஜா (36.20 மீட்டர்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கானஈட்டி எறிதலில் எப்.53 பிரிவில் அரியானா வீராங்கனை காஞ்சன் லகானியும் (8.39 மீட் டர்), எப்.54 பிரிவில் தமிழக வீராங்கனை கீர்த்திகாவும் (11.87 மீட்டர்) தங்கப்பதக்கம்  பெற்றனர்.போட்டி முடிவில் அரியானா 49 தங்கம், 32 வெள்ளி, 25 வெண்கலம் என 106 பதக்கங்களுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்தமிழ்நாடு 17 தங்கம், 18 வெள்ளி, 21வெண்கலம் என 56 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது. பரிசளிப்பு விழாவில் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி பொதுச்செயலாளர் ஜெயவந்த் குண்டு ஹமனவார், பொருளாளர் சுனில் பிரதான், துணைத் தலைவர் சந்திரசேகர், தமிழ் நாடு பாரா ஸ்போர்ட்ஸ் சங்க பொதுச்செயலாளர் கிருபாகரராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். 

Feb 19, 2025

 தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி 

38வதுதேசிய விளையாட்டு போட்டி ஜனவரி 28ந் தேதி முதல் கடந்த 14ந் தேதி வரைஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்தது.நாடுமுழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி யில் சர்வீசஸ் (முப்படை) 68 தங்கம், 26வெள்ளி, 27 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. தமிழ்நாடு 27 தங்கம்,30 வெள்ளி,35வெண்கலம் என்று 92பதக்கங்களு டன் 6வது இடம் பெற்றது. தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் சிறந்த செயல்பாடு இதுவாகும். இதில் தடகளத்தில் 5 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என 19 பதக்கம்,வாள்வீச்சில் 4 தங்கம்,ஒரு வெள்ளி, வெண்கலம் என6 பதக்கம், நீச்சலில் 3 தங்கம்,10 வெள்ளி,6 வெண்கலம் என 19பதக்கம் வென்றதும் அடங்கும்.இந்த நிலையில் தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் உள்ள ஒலிம்பிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது.

Feb 19, 2025

9-வதுஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி

9வதுஐ.சி.சி.சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.கராச்சியில் பகல்,இரவு மோதலாக நேற்று  தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.50 ஓவர்முடிவில் நியூசிலாந்து அணி5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது, பாகிஸ்தான் அணி47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.இதன் மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றியோடு தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா,வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. 

1 2 ... 156 157 158 159 160 161 162 ... 170 171

AD's



More News