கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே ,தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.7 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் தமிழ்நாடுகிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் தேசிய மற்றும் சர்வதேச போட்டியில் சிறந்து விளங்கும் தமிழக இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தாகை வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊக்கத் தொகைக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்த அபிநந்த் கபிள்டென்னிஸ்), வெனிசாஸ்ரீ (வில்வித்தை), முத்துமீனா வல்லச்சாமி (பாரா தடகளம்), ஷமீனா ரியாஸ் (ஸ்குவாஷ்), ஜயந்த், நந்தனா இருவரும் கிரிக்கெட்), கமலி (அலைச்சறுக்கு , அபிநயா, ஜித்தின் அர்ஜூனன் இருவரும் தடகளம்).தக்க்ஷந்த் (செஸ்) ஆகியோருக்கு தலா ரூ.30 ஆயிரம் வழங்கினார். இது அருமையான் திட்டம் என்று பாராட்டி, ஷிவம் துபே தனது சொந்த பணத்தில் இருந்து ,ஒவ்வொவருக்கும் தலா ரூ.70 ஆயிரம் விதம் மொத்தம் ரூ.7 லட்சமும் வழங்கினார்.
விழாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக இயக்குனர் கே.எஸ்.விஸ்வ தன், தமிழ்நாடு கிரிக்கெட்சங்கசெயலாளர் ஆர்.ஐ.பழனி, -உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
0
Leave a Reply