25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Apr 18, 2025

விளையாட்டு போட்டிகள்.18th april

குண்டு எரிதல்,இந்தியாவின் நிஷ்சே ஆசிய சாம்பியன்ஷிப் (18வயது) குண்டு எறிதலில் வெள்ளி வென்றார். துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட நிஷ்சே, ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 19.59 மீ., துாரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளி வென்றார். இத்தொடரில் இவர் கைப்பற்றிய இரண் டாவது பதக்கம் இது.  செஸ்  ('பிடே') சார்பில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி ' செஸ் தொடர் நடத்தப்படுகிறது. ஐந்தாவது தொடர் புனேயில் நடக்கிறது.நேற்று ஐந்தாவது சுற்று போட்டி நடந்தன. இந்தியாவின் வைஷாலி, மங்கோலியாவின் பக்குயாக்கை எதிர்கொண்டார். இதில் 52வது நகர்த்தலில் வைஷாலி வெற்றி பெற்றார். ஐந்து சுற்று முடிவில் சீனாவின் ஜு ஜினெர் (4.0) முதல் இடத்தில் தொடர்கிறார். இந்தியாவின் ஹம்பி (3.5), திவ்யா (3.5), வைஷாலி (2.5), ஹரிகா (2.5) அடுத்த நான்கு இடங்களில் உள்ளனர். வட்டு எரிதல். இந்தியாவின் லக்சித்தா பெண்களுக்கான வட்டு எறிதலில் (41.30 மீ.,) வெண்கலம் கைப்பற்றி னார். மா சென்யி (53.81, சீனா), ஜாவோ அன்கி (47.89, சீனா) தங்கம், வெள்ளி வென்றனர். பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் சவுரியா (13.80 வினாடி) வெண்கலம் வசப்படுத்தினார். பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஆர்த்தி, 24.31 வினாடி நேரத்தில் கடந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இந்திய அணி 3 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கம் வென்று உள்ளது. பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை  உலக கோப்பை கிரிக்கெட் ,இந்தியாவில் நடக்க உள்ள தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் பெண்கள் அணி தகுதி பெற்றது.ஐ.சி.சி., பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இந்தியாவில் (செப். 29-அக். 26) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டி பாகிஸ்தானில் நடக்கின்றன. 6 அணிகள்  மோதுகின்றன. 'டாப்-2' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு முன்னேறும்.  

Apr 17, 2025

17th APRIL IPL MATCH. MUMBAI - HYDERABAD

 APRIL 17-ம் தேதி மும்பையில், ஹை தராபாத், மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 162/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 166/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக WILL JACKS தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Apr 17, 2025

ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா .

 தென் ஆப்பிரிக்காவில் உள்ள போட் செஸ்ட்ரூமில்  சர்வதேச அழைப்பு தடகள போட்டி ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். 6 பேர் களம் கண்ட இந்த பந்தயத்தில் நீரஜ் சோப்ரா 84.52 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றி, இந்த சீசனை வெற்றியோடு தொடங்கினார். 

Apr 17, 2025

ஐந்தாவது தொடர் புனேயில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') 

 ஐந்தாவது தொடர் புனேயில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர் நேற்று நான்காவது சுற்று போட்டி நடந்தன. இந்திய வீராங்கனை ஹம்பி, ரஷ்யாவின் போலினாவை சந்தித்தார். ஹம்பி, போட்டியின் 33வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் திவ்யா, ஜார்ஜியாவின் சலோமி மெலியாவை எதிர்கொண்டார். திவ்யா நீண்ட போராட்டத்துக்குப் பின், 77 வது நகர்த்தலில் திவ்யா வெற்றி பெற்றார்.  இந்தியாவின் ஹம்பி (3.0), திவ்யா (3.0), ஹரிகா (2.0) அடுத்த மூன்று இடங்களில் உள் ளனர். வைஷாலி (1.5) 7 வது இடத்தில் உள்ளனர். 

Apr 17, 2025

துப்பாக்கி சுடுதல் 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சவுரப் சவுத்ரி ஜோடி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

 பெருவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரில் .கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சவுரப் சவுத்ரி ஜோடி, 580.20 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தது. அடுத்து நடந்த பைனலில் சுருச்சி, சவுரப் சவுத்ரி ஜோடி, சீனாவின் கியான்ஜுன் யாவோ, கை ஹு ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 17-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

Apr 16, 2025

16th APRIL IPL MATCH. RAJASTHAN - DELHI

 APRIL  16-ம் தேதி டெல்லியில், ராஜஸ்தான் டெல்லி,  அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 188/5 ரன்கள் எடுத்தது .அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 188/4 ரன்கள் எடுத்து,  இரண்டு அணிகளும்  சமநிலையில்   உள்ளன.  ஆட்ட நாயகனாக MITCHELL STARC  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Apr 16, 2025

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய நீளம் தாண்டுதல் வீராங்கனை ஷைலி சிங்.

இந்திய நீளம் தாண்டுதல் வீராங்கனை ஷைலி சிங்21. உ.பி.,யை சேர்ந்த இவர், சமீபத்தில் சென்னையில் நடந்த இந்திய ஓபன் தடகளத்தில், அதிகபட்சமாக 6.45மீ., தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஆசிய தடகள் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி இலக்கான 6.41 மீ., விட அதிகமாக தாண்டினார். உலக ஜூனியர் (20 வயது) சாம்பி யன்ஷிப் (2021), ஆசிய ' சாம்பியன்ஷிப் (2023) போட்டிகளில் தலா ஒரு  வெள்ளி வென்றுள்ள இவர், வரும் ஏப். 21ல்மீண்டும் சென்னையில் நடக்கவுள்ள இந்திய ஓபனில் பங்கேற்க  உள்ளார்.இதுகுறித்து ஷைலி சிங்கூறியது: சென்னையில் நடந்த இந்திய ஓபனில் தங்கம் வென்றது மகிழ்ச்சி. "சர்வதேச போட்டி களில் நிறைய பதக்கம் வெல்வேன் என்று நம்புகிறேன்," என, இந்தியா வின்ஷைலி சிங் தெரிவித்துள்ளார். நான் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி இலக்கை கடந்தது பெருமை . கடினமாக பயிற்சி மேற் கொண்டு இந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் நிறைய பதக்கம் வெல்ல விரும் புகிறேன்..... 

Apr 16, 2025

துப்பாக்கி சுடுதல், 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங் தங்கப்பதக்கத்தை வென்றார்.

துப்பாக்கி சுடுதல்.உலககோப்பை துப்பாக்கி சுடுதல் பெருவில், தொடர். பெண்களுக்கான தனிநபர் 10 மீ.,'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங் (582.24 புள்ளி), மனு பாகர் (578.25) முறையே 2, 4வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.அடுத்துநடந்த பைனலில் சுருச்சி, 243.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகர் 242.3 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.  பதக்கப்பட்டியலில் இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒருவெண்கலம் வென்ற இந்தியா, முதலிடத்தில் உள்ளது.  கால்பந்து . பெண்களுக்கான கால்பந்து தொடர் (ஐ.டபுள்யு.எல்.,) இந்தியாவில் 8வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை நேரு மைதானத்தில் தமிழகத்தின் சேது, டில்லியின் ஹாப்ஸ் அணிகள் தங்களது கடைசி போட்டியில் மோதின.சேது அணி சார்பில், ஹதிஜா 38வது நிமிடத்தில்  ஒரு கோல் அடித்தார். ஹாப்ஸ் அணி சார்பில் கிளாடிஸ் அம்போபியா 47வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவாக முடிந்தது.இதுவரை நடந்த  போட்டிகள் முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 35 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் முதலிடத்தை உறுதி செய்த ஈஸ்ட் பெங்கால், முதல் முறையாக சாம்பியன் ஆக உள்ளது.

Apr 15, 2025

15th APRIL IPL MATCH PUNJAB - KOLKATA

 APRIL 15-ம் தேதி சண்டிகரில், பஞ்சாப், கொல்கத்தா, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 111/10 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 95 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக YUZVENDRA CHAHAL தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Apr 15, 2025

15TH APRIL விளையாட்டு போட்டிகள்

டேபிள் டென்னிஸ்,  'அல்டிமேட் டேபிள் டென்னிஸ்' (யு.டி.டி.,) தொடர் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், 8 அணிகள் பங்கேற்கும் 6வது சீசன் (மே29 ஜூன்15) ஆமதாபாத்தில் நடக்கவுள்ளது. இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம்நேற்று மும்பையில் நடந்தது. 56 பேர்ஏலத்தில் இடம் பிடித்தனர். ஒவ்வொரு அணியும் ரூ. 50 லட்சம் வரை செலவு செய்தன. அடிப்படை தொகை என4 பிரிவுகளாக (ரூ.11, 7,4,2 லட்சம்) பிரிக்கப்பட்டன.கோவா அணி இந்தியாவின் ஹர்மீத் தேசாயை  வீரர்களை தக்கவைக்கும் விதியின் அடிப்படையில் ரூ.14 லட்சத்துக்கு தன் வசப்படுத்தியது.  ரூ.14.1 லட்சம் கொடுத்து, இந்தியாவின் தேசிய சாம்பியன் தியா சிட்டா லே வை டில்லி அணி தட்டிச் சென்றது. ரூ. 12 லட்சம் கொடுத்து, இந்தியா வீராங்கனை மணிகா பத்ராவை ஆமதாபாத் அணி  கொண்டு தட்டிச் சென்றது. செஸ்  பெண்களுக்கான  'கிராண்ட் ப்ரி' செஸ்,புனேயில் சர்வதேச செஸ்கூட்டமைப்பு ('பிடே') சார்பில் ஐந்தாவது தொடர் நடக்கிறது.நேற்று இரண்டாவது சுற்று போட்டி நடந்தன. இந்திய வீராங்கனைகள் திவ்யா, வைஷாலி ,17வது நகர்த்தலில் வைஷாலி தவறு 'செய்தார்., போட்டியின் 26 வது நகர்த்தலில் திவ்யா வெற்றி பெற்றார்.இந்தியாவின் ஹரிகா, போலந்தின் அலினா மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. சீனாவின் ஜு ஜினெர், மங்கோலியாவின் பக்துயாக்கை வீழ்த்தினார். இரண்டு சுற்று முடிவில் திவ்யா (2.0), ஜுஜினெர் (2.0), ரஷ்யா T வின் போலினா (1.5) 'டாப்-3' இடத்தில் உள்ள னர். ஹம்பி (1.0), 5வது, ஹரிகா (0.5), 10 வது இடத்தில் உள்ளனர்.பாட்மின்டன்  புதிய தரவரிசை பட்டியல்  சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் வெளியானது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து, சமீபத்திய சீன தொடரில், இரண்டாவது சுற்றில் தோற்றதால்,ஒரு இடம் பின்தங்கி, 18 வது இடம் பிடித்தார். மாளவிகா (22), ரக்சித்தா ஸ்ரீ (42), அனுபமா (44), ஆகர்ஷி (49) உள்ளிட்டோர் 'டாப்-50' பட்டியலில் உள்ளனர்.ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென், 2 இடம் பின்தங்கி, 18வது இடம் பெற்றார்.பிரனாய் 30 வது இடத்தில் உள்ளார்.  

1 2 ... 132 133 134 135 136 137 138 ... 158 159

AD's



More News