தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் டில்லியில் கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு போட்டி ,தகுதிச் சுற்றில் இந்திய ஆர்மி அணியின் லக்சிதா (290), ஷர்வன் (292) இணைந்து 582 புள்ளி பெற, முதலிடம் பெற்று பைனலுக்கு முன்னேறினர். இதில் லக்சிதா, ஷர்வன் ஜோடி 16-10 என ஹரியானாவின் சுருச்சி, சாம்ராட் ராணா ஜோடியை வென்று தங்கம் கைப்பற்றினர்.ராஜஸ்தானின் அஞ்சலி, அமித் சர்மா ஜோடி 17-13 என கர்நாடகாவின்ஜோனாதன், அவந்திகா ஜோடியை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வென்றது.மத்திய பிரதேசத்தின் ஆராத்யா, யுக்பிரதாப் ஜோடி, ஜூனியர் பிரிவில் கர்நாடகாவின் கேம்பெர்யா, டேரன் ஜோடியை 16-8 என வென்று தங்கம் வென்றனர்.
பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நேற்று சீனாவின் ஹாங்சு நகரில், . ஆண்கள் இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் உலகின் 'டாப்-8' ஜோடி, இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடந்தன.இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக்ஷெட்டி ஜோடி, உலகத் தரவரிசையில் 'நம்பர்-3', 'பி' பிரிவில் இடம் பெற்று, முதல் இரு போட்டியில் வெற்றி பெற்றது. உலகத் தரவ ரிசையில் ‘நம்பர்-2' ஆக உள்ள மலேசியாவின் ஆரோன்சியா, சோ இக் ஜோடியை மூன்றாவது, கடைசி போட்டியில் எதிர் கொண்டது.அரையிறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில், இந்திய ஜோடி முதல் செட்டை (17–21) என இழந்து.,பின் இந்திய ஜோடி அடுத்த இரு செட் டுகளை (21-18, 21-15) வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 17–21, 21-18, 21-15 என வெற்றி பெற்றது. பங்கேற்ற 3 போட்டியிலும் வென்று, பட்டியலில் முதலிடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.வேர்ல்டு டூர் பாட்மின்டன் பைனல்ஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆண்கள் இரட்டையர் இந்திய ஜோடி பெருமை பெற்றனர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரையும் 3-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. நேற்று ஐந்தாவது போட்டி குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், 'பவுலிங்' தேர்வு செய்தார். தென்ஆப்பிரிக்க அணி20 ஓவர்கள் முழுமையாக ஆடி ,8 விக்கெட்டுக்கு 201 ரன்களே எடுக்க முடிந்தது. இந்தியஅணி 20 ஓவரில் 231/5 ரன்கள் குவித்தது இதனால் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜனவரி மாதம் 2026ல் நியூசிலாந்துடன் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ,2025-ம் ஆண்டை வெற்றியுடன் நிறைவு செய்த இந்திய அணி இனி விளையாட இருக்கிறது.
இந்திய அணி சென்னையில் நடந்த உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியில், ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. அந்த அணியில் அங்கம் வகித்த அபய் சிங் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் படித்து வருகிறார். குருநானக் கல்லூரியில் உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்த அபய்சிங்குக்கு பாராட்டு விழாவில் ,அபய் சிங்குக்கு ரூ.11 லட்சம் ரொக்கப்பரிசை கல்லூரி தாளாளர் மஞ்சித் சிங்நய்யார் வழங்கினார். அத்துடன் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம்வென்ற வீரர்களுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையாக அளிக்கப்பட்டது. விழாவில் அபய் சிங்கின் பெற்றோர் ,துணைத் தலைவர் ஜஸ்பீர்சிங் நருலா, முதல்வர் எழிலரசி, விளையாட்டுஒருங்கிணைப்பாளர் நமச்சிவாயம், கலந்து கொண்டனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் இந்தியாவந்துள்ள தென் ஆப்ரிக்க அணி முதல் மூன்று போட்டி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. நான்காவது போட்டி லக்னோவில் மோசமான வானிலை (பனிப்பொழிவு) காரணமாக ரத்தானது. இன்று ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் ஐந்தாவது, கடைசி போட்டி நடக்கிறது. இந்திய அணிசிறப்பாக செயல் பட்டு கோப்பை வெல்ல காத்திருக்கிறது.
சர்வதேச வாலிபால், ஆசிய வாலிபால் கூட்டமைப்பு சார்பில், உஸ்பெகிஸ்தானில் சர்வ தேச வாலிபால் நடுவர் தேர்வு நடந்தது. இந்தியா சார்பில் 3 பேர் உட் பட சர்வதேச அளவில் 22 பேர் பங்கேற்றனர். எழுத்து தேர்வு போட்டி விதிகள், தொழில் நுட்பங்கள் குறித்து நடந்தது. போட்டிகளில் நடுவராக செயல்பட வைத்து, செயல்பாட்டிற்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. கடைசியாக உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் சிறப்பாக செயல் பட்ட தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த பவித்ரா 30, நடுவரானார். தமிழகத்தின் முதல் பெண் சர்வதேச வாலிபால் போட்டியில் நடுவர் என பெருமை பெற்றார்.
7வது உலக கோப்பை தொடர் ,சர்வதேச ரோல் பால்' கூட்டமைப்பு துபாயில்,.கூடைப்பந்து, ஹேண்ட்பால், ரோலர் ஸ்கேட்டிங் என மூன்றை யும்சேர்த்து 'ரோல் பால்' என விளையாடப்படுகிறது.இந்திய அணி பெண்களுக்கான பைனலில், தொடர்ந்து இரு முறை சாம்பியன் ஆன கென்யாவைசந்தித்தது. இதில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக உலக சாம்பியன் ஆனது. இந்திய அணி ஆண்கள் பிரிவு பைனலில், கென்யாவை எதிர்கொண்டது. ஒரு கட்டத்தில் 4-8 என இந்தியா பின் தங்கி ,முடிவில் இந்திய அணி 11-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக உலக சாம்பியன் ஆனது.
நேற்று பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் சீனாவின் ஹாங்சு நகரில், ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர்,கலப்பு இரட்டையர் தரவரிசையில் உலகின் 'டாப்-8' இடத்திலுள்ள நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.இம் முறை ஆண்கள் இரட்டையரில், இந்தியா சார்பில்உலகத் தரவ ரிசையில் 'நம்பர்-3' ஆக உள்ள சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி பங்கேற்கிறது. 'டாப்-8' ஜோடி இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.முதல் போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய ஜோடி, வெள்ளி வென்ற சீனாவின் லியாங் வெய், வாங் சங் ஜோடியை வென்றது. ‘நம்பர்-8' ஆக உள்ள இந்தோனேஷியாவின் பஜர் அல்பியான், சோகிபுல் பிக்ரி ஜோடியைநேற்று தனது இரண் டாவது போட்டியில் எதிர் கொண்டது. இந்திய ஜோடி முதல் செட் 21-11, இரண் டாவது செட்டில் 11-11 என சமநிலையில் இருந்த இந்திய ஜோடி, கடைசியில் 16-21 இழந்தது. மூன்றாவது, கடைசி செட்டில் 21-11 என வெற்றி பெற்றது.ஒரு மணி நேரம் நீடித்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 21-11, 16-21, 21-11 என வெற்றி பெற்றது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது, இரு வெற்றியை பெற்ற இந்திய ஜோடி .
நேற்று பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர்சீனாவின் ஹாங்சு நகரில் துவங்கி,. ஆண்கள் இரட்டையர் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள்லீக் முறையில் நடக்கின்றன. இம்முறை ஆண்கள் இரட்டையரில், இந்தியா சார்பில் உலகத் தர வரிசையில் 'நம்பர்-3' ஆக உள்ள சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டிஜோடி பங்கேற்கின்றனர். 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய ஜோடி, நேற்று தனது முதல் போட்டியில் 6வது இடத் திலுள்ள, பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளி வென்ற சீனாவின் லியாங் வெய், வாங் சங் ஜோடியை எதிர்கொண்டது. இந்திய ஜோடி 12-21, 22-20, 21-14 என முடிவில் வெற்றி பெற்றது.
குளோபல் செஸ் லீக் தொடரின் 3வது சீசன்இந்தியாவின் மும்பையில் நடக்கிறது. மொத்தம் ஆறு அணிகள், தலா இரு முறை மோதுகின்றன. முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இருஇடம் பெறும் அணிகள் பைனலில் மோதும்.ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, இந்தியாவின் ஆனந்த், இதன்3வது சுற்றில், உலக கோப்பை வென்ற உஸ் பெகிஸ்தானின் சிந்த ரோவ், ஜெர்மனியின் வின்சென்ட் உள்ளிட்டோர் இடம் பெற்ற கேங்கஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் அணி, உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் உள்ளிட்டோர் இடம் பெற்ற அலாஸ்கன் நைட்ஸ் அணியை எதிர்கொண்டது.கேங்கஸ் வீரர் ஆனந்த் 56, அலாஸ்கன் வீரர் குகேஷ் 19, மோதினர். ஆனந்த் 45 வது நகர்த் தலில் வெற்றி பெற்றார்.முடிவில் ஆனந்த் அணி 12.0-3.0 என குகேஷ் அணியை வென்றது.மும்பை மாஸ்டர்ஸ் அணி (9 புள்ளி) இதுவரை முடிந்த போட்டி முடிவில் முதலிடத்தில் உள்ளது. 6 புள்ளியுடன் 4வது இடத்தில் ஆனந்த் அணி, உள்ளது.