விளையாட்டு போட்டிகள் 22 nd OCTOBER.
தெற்காசிய தடகள சீனியர் சாம்பியன் ஷிப் போட்டி, இந்தியாவின் ராஞ்சியில் அக். 24-26ல் நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட் பட 7 நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்திய அணியினர் நேற்று ராஞ்சி வந்தடைந்தனர்.
சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் பிரான்சில் ,ஆண்கள் இரட்டையர் முதல்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, ஸ்பெயினின் மார் டோஸ், வேஹா ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம், 45 நிமிடம் நடந்த போட்டியில் இந்திய ஜோடி 6-7, 6-1,10-7 என வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.
ஆசிய கால்பந்து பெண்களுக்கான (17 வயதுக்கு உட்பட்ட) ,10வது சீசன், 2026ல் சீனாவில் ( ஏப்ரல் 30- மே 17) நடக்க உள்ளது. இதற்கான தகுதிச் சுற்றில் இந்திய அணி, பிரதான தொடருக்கு முன்னேறியது. இதையடுத்து அகில இந்திய கால்பந்து கூட்ட மைப்பு, ரூ.22,00,000 பரிசு தருவதாக அறிவித்துள்ளது.
பஹ்ரைனில் ஆசிய யூத் குத்துச் சண்டை விளையாட்டு, அக். 23ல் துவங்குகிறது.
0
Leave a Reply