ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டி இந்தியாபாகிஸ்தான் சண்டையால் திடீரென ஒரு வாரம் நிறுத்தப்பட்டது. மேலும் முக்கியமான வெளி நாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிக்காக கடைசி கட்டத்தில் கிளம்புவது அணிகளின் சரியான கலவையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதைஎல்லாம் கணக்கு போட்டே சில அணிகள் தற்காலிகமாக மாற்று வீரர்களை சேர்த்துள்ளனர். இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன. 13லீக் மட்டுமே மிஞ்சியுள்ளது.. முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன. மற்ற 7 அணிகள் பிளே-ஆப்சுற்றின் 4 இடத்துக்கு மல்லுக்கட்டுகின்றன.புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப்சுற்றுக்கு தகுதி பெறும். இதில் முதல் 2இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி காணும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும்.தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.3வது,4வதுஇடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இதில் தோற்கும் அணிவெளியேறும். வெற்றி பெறும் அணி,முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் இறுதிப்போட் டிக்கான 2வது தகுதி சுற்றில் சந்திக்கும். இந்த ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தும் அணி2-வதுஅணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
2014 புரோ கபடி லீக் முதல் 11 சீசன் முடிந்துள்ளன. நடப்பு ஆண்டில் புரோ கபடி லீக் 12வது சீசன் வீரர்கள் ஏலம், மும் பையில் வரும் மே 31, ஜூன் 1ல் நடக்கவுள்ளன. கடந்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் அதிகபட்ச மாக 8 வீரர்கள் தலா ரூ. ஒரு கோடிக்கு மேல் ஒப்பந்தமாகினர். தமிழ் தலை வாஸ் அணி, . 2.15 கோடிக்கு சச்சின்தன்வரை வாங்கியது. இதுபோல இம்முறை நிறைய வீரர்கள் அதிக விலைக்கு ஒப்பந் தம் செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப் படுகிறது.புரோ கபடி லீக் சேர்மன் அனுபம் கோஸ்வாமி கூறுகையில், ''புரோ கபடி லீக் 12வது சீசனுக் கான வீரர்கள் ஏலம் மே 31ல் துவங்குகிறது. சிறந்த வீரர்களை ஒப்பந்தம் செய்து, வலுவான அணியை தேர்வு செய்ய ஒவ்வொரு அணி உரிமையாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்," என்றார்.
ஜப்பானில் நடந்த கோல்ப் 'குயீன் சிரிகிட்' கோப்பையில் இளம் இந்திய வீராங்கனை ஜாரா ஆனந்த் 7வது இடம் பிடித்தார். இத்தொடரில் இந்தியாவுக்கு 5வது இடம்.
ஆசிய பீச் ஹேண்ட்பால் விளையாட்டு போட்டிகள்ஆசியபீச்சாம்பியன்ஷிப் ஓமனில்ஹேண்ட்பால்தொடரின் 10 வதுசீசன்பெண்கள்பிரிவில்இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஹாங்காங் கள மிறங்கின. முதல் போட்டி யில் 0-2 என வியட்நாமிடம் தோற்ற இந்தியா, அடுத்து 1-2 என பிலிப்பைன்சிடம் வீழ்ந் தது. மூன்றாவது போட்டியில் 2-0 என்ற (20-17, 20-17) செட் கணக்கில் இந்திய அணி, ஹாங்காங்கை சாய்த்தது.அடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் 3 போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. முடிவில் 6 போட்டியில் 1 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. கால்பந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் அருணாச்சல பிரதேசத்தில், 7வது சீசன் ,இந் தியா, 'நடப்பு சாம்பியன்' வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, பங்கேற்ற 2 போட்டியிலும் வென்று, 6 புள்ளியுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னே றியது. இதில் நேற்று 'ஏ' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த மாலத்தீவு அணியை எதிர்கொண் டது. போட்டியின் 22 நிமி டத்தில் இந்திய வீரர் ஓமங் டோடும் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக் கில் வெற்றி பெற்று பைன லுக்கு முன்னேறியது.நாளை நடக்கும் பைனலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோது கின்றன. டென்னிஸ், பெண்களுக்கான ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர் சுலோவாகியாவில் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரார்த்தனா, நெதர் லாந்தின் ஹர்டோனோ அரியானே ஜோடி, உக் ரைனின் வலேரியா, ரஷ் யாவின் எலினா பிரிதன்கினா ஜோடியை எதிர் கொண்டது.முதல் செட்டை பிரார்த் தனா ஜோடி 6-3 என கைப்பற்றியது. அடுத்த செட்டில் ஏமாற்றிய இந்த ஜோடி 3-6 என கோட்டை விட்டது. பின் நடந்த 'சூப் பர் டை பிரேக்கரில்' 11-9 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம் 43 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பிரார்த்தனா ஜோடி 6-3, 3-6, 11-9 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
16வது சீசன் டைமண்ட் லீக் தடகளம் 15 சுற்றுகளாக நடக்கிறது. நேற்று, கத்தார் தலைநகர் தோகாவில் 3வது சுற்று நடந்தது. இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா (ஈட்டி எறிதல்), பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), குல்வீர் சிங் (5000 மீ.,ஓட்டம்)என முதன் முறையாக 4 பேர் பங்கேற்றனர் .ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 27,கிஷோர் ஜெனா உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். முதல் வாய்ப்பில் 88.44 6. எறிந்த நீரஜ் சோப்ரா, 2வது வாய்ப்பை 'பவுல்' செய்தார். பின் எழுச்சி கண்ட இவர், 3வது வாய்ப்பில் 90.23 மீ.,எறிந்தார். இதன்மூலம் தனது சொந்த தேசிய சாதனையை முறிடித்தார்.
21 lவது சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் மலேசியாவில் கோஜோ ரையு சார்பில் போட்டி நடந்தது. இந்தியா, சிங்கப்பூர் உட்பட 10 நாடுகளின் 2,000வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றனர்.இந்தியா சார்பில், தமிழகத்தை சேர்ந்த சாய் அக்ஷரா, நிவேதா, ஹர்ஷிதா, வினிஷா, பாலிஷா, ஜியா ஹர்ஷினி, குஷி களமிறங்கினர். கட்டா, குமட்டெ என, இரு பிரிவுகளில் தமிழக வீராங்கனைகள், 5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என, 12 பதக்கம் வென்றனர்.
வரும் அக். 22-31ல், ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் ,பஹ்ரைன் தலைநகர் மனா மாவில், நடக்கவுள்ளது. இதில் தடகளம், பாட்மின்டன், நீச்சல், டேபிள் டென்னிஸ், பளுதுாக்கு தல் உள்ளிட்ட 24 வகையான விளையாட்டுகள், 207 பிரிவுகளில் நடக்க உள்ளன.பாரம்பரிய பாலைவன விளையாட்டான ஒட்டகப் பந்தயம், முதன்முறையாக நடத்தப்படுகிறது. இப்போட்டி 15 முதல் 18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான 500 மீ., ஓட்டமாக நடக்கவுள்ளது. இதில் இந்தியா, பஹ்ரைன் உட்பட 8 நாடுகள் பங்கேற்கின்றன.ஒட்டகப் பந்தயம் தவிர, இம்முறை குத்துச்சண்டை, சைக்கிள் பந்தயம், குதிரையேற்றம், புட் சால், டிரையத்லான், வாலிபால், மல்யுத்தப் போட்டிகளும் அறிமுகமாகின்றன.
டைமண்ட் லீக் போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில், இந்திய நட்சத்திரங்கள் அதிகம் பங்கேற்பது இது தான் முதன் முறை.இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா (ஈட்டி எறிதல்), பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீ பிள் சேஸ்), குல்வீர் சிங் (5000 மீ., ஓட்டம்) என 4 பேர் களமிறங்குகின்றனர். இதில் நீரஜ் சோப்ரா, தனது 18வது டைமண்ட் போட்டியில் பங்கேற்கிறார். கடந்த 10 தொடரில் தங்கம் அல்லது வெள்ளி என தொடர்ந்து பதக்கம் வென்றார். இவருக்கு கிரனடாவின் ஆண்டர்சன் செக் குடியரசின் ஜாகுப் வாடில்ச் என முன்னணி வீரர்கள் சவால் தர காத் திருக்கின்றனர்..
ஐந்து 'டி-20', மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய பெண்கள் அணி.முதல் 'டி-20' போட்டி ஜூன் 28ல் நாட்டிங்காமில் நடக் கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் பிரிஸ்டோல் (ஜூலை 1), லண்டன் (ஜூலை 4), மான்செஸ் டர் (ஜூலை 9), பர்மிங்காமில் (ஜூலை 12) நடக்கவுள்ளன. மூன்று ஒருநாள் போட்டிகள் சவுத் தாம்ப்டன் (ஜூலை 16), லண்டன் (ஜூலை 19), செஸ்டர்-லி-ஸ்டிரீட்டில் (ஜூலை 22) நடக்கின்றன.இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஒருநாள், டி-20' அணிகளுக்கு கேப்டனாக ஹர்மன்பிரீத்கவுர், துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா தொடர்கின்றனர்.
ஆசிய 'கான்டினென்டல்' செஸ் தொடர் ஐக்கிய அரபு எமிரேட் சில் (யு.ஏ.இ.,). 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் இனியன், ஸ்ரீஹரி இதில் மோதினர். கல்லுாரி மாணவரான ஸ்ரீஹரி 19, தோற்ற போதும் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்துக்கு தேவையான புள்ளியை பெற்றார். இந்தியாவின் 86வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.