25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், 17.12.2025 முதல் 26.12.2025  வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், 17.12.2025 முதல் 26.12.2025 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது .

 2019-2020ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில் “ஆட்சிமொழிச் சட்ட வாரம்” ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இந்த ஆண்டு 17.12.2025 முதல் 26.12.2025  வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள் அரசு அலுவலர்கள்,  வணிக நிறுவனங்கள் பங்கேற்கும்  விழிப்புணர்வுப் பேரணி நடத்தியும், அரசு பணியாளர்களுக்கு ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, அரசாணைகள், பிழையின்றி தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தும், மாணவர்களுடன் பட்டிமன்றம் நடத்தியும்,  ஒன்றியம், வட்டம் அளவில் அரசுப் பணியாளர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுடன் ஆட்சிமொழிச் சட்டம் குறித்து விளக்கக் கூட்டம் நடத்தியும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்படவுள்ளது.   

 தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள்,  தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வாரத்தினைச் சிறப்பாகக் கொண்டாட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *