25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாயா ராஜேஸ்வரன்  ரேவதி, செர்பியாவின் அனஸ்டா சியா சிவெட்கோவிச் ஜோடி, சாம்பியன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாயா ராஜேஸ்வரன் ரேவதி, செர்பியாவின் அனஸ்டா சியா சிவெட்கோவிச் ஜோடி, சாம்பியன்.

 பெண்களுக்கான போர்ட் லாடர் டேல் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர்  அமெரிக்காவின் புளோரிடாவில், (18 வயதுக்கு உட்பட்டோர்) ,இரட்டையர் பிரிவு பைனலில், 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 16 வயது மாயா ரேவதி, செர்பியாவின் அனஸ்டா சியா சிவெட்கோவிச் ஜோடி, 'நம்பர்-5' அந்தஸ்து கொண்ட அமெரிக்காவின் தியா புரோடின், வெல்லஸ் நியூமன் ஜோடியை சந்தித்தது.

 முதல் செட்டை 3-6 ,2வது செட்டை 6-2 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது.. முடிவில் மாயா ஜோடி 3-6, 6-2, 10-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை வென்றார்.

அமெரிக்காவின் அனிதா டுவிடம் ,ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற மாயா, முதல் சுற்றில் 0-6, 3-6 என   தோல்வியடைந்தார்.

சர்வதேச ஜூனியர் டென்னிஸ் தரவரிசையில் மாயா இரட்டையரில் கோப்பை வென்றதை அடுத்து,  38வது இடத்துக்கு முன்னேறினார்.

15 வயதான தமிழக டென்னிஸ் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். டெல்லியில் நடைபெற்று வரும் ஐடிஎப் ஜே 300 டென்னிஸ் போட்டியில் மாயா தற்போது வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை வென்றார்.களத்தில் ஆக்ரோஷமாக ஷாட்களை விளையாடி எதிரணி வீராங்கனைகளை மாயா அபாரமாக வீழ்த்தி வருகிறார். கோவையில் பிறந்து வளர்ந்து தற்போது ஸ்பெயினில் உள்ள ரஃபேல் நடால், டென்னிஸ் அகாடமிவில் மாயா பயிற்சி செய்து வருகிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News