25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jan 29, 2026

இந்தியாவின் பிரக்ஞானந்தா டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 9வது சுற்றில் வெற்றி பெற்றார்.

நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நெதர்லாந்தில், இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம் பரம், அர்ஜுன்எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.  ஒன்பதாவது சுற்றில், இந்தியாவின் பிரக்ஞா னந்தா, அரவிந்த் சிதம்பரம் மோதினர். 'நடப்பு சாம்பியன்' பிரக்ஞானந்தா, 84வது நகர்த்தலில் - வெற்றி பெற்றார்.  தலா 4 புள்ளிகளுடன் 9 வது இடத்தை ,இந்தியாவின் அர்ஜுன், குகேஷ், பிரக்ஞானந்தா பகிர்ந்து கொண்டுள்ளனர். அரவிந்த் சிதம்பரம் (2.5 புள்ளி) 14வது இடத்தில் உள்ளார். 

Jan 29, 2026

இந்தியாவின் தருண், மிதுன்மஞ்சுநாத் தாய்லாந்து பாட்மின்டன் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் தாய்லாந்தின் பாங்காக்கில்,. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், உலகத் தரவரிசையில் 61வது இடத்திலுள்ள இந்தியாவின் மிதுன்மஞ்சுநாத், 41வது இடத்திலுள்ள, இத்தொடரின் 'நம்பர் -8' வீரர் என அந்தஸ்து பெற்ற டென்மார்க் கின் மாக்னஸ் ஜோகன்னெசனை சந்தித்தார்.59 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில்  21-12, 9-21, 21-17 என்ற செட் கணக்கில் மிதுன் மஞ்சுநாத் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் ('நம்பர் -43'), தாய்லாந்தின் கன்டபனை ('நம்பர்-55') எதிர்கொண்டார். தருண் 22-20, 21-17 என்ற நேர் செட்டில்வெற்றி பெற்றார். 

Jan 28, 2026

விளையாட்டு போட்டிகள் 28 th  Jan 2026

'டாடா ஸ்டீல்' செஸ் தொடர் கோல்கட்டாவில் நடந்த பெண்களுக்கான ரேபிட் பிரிவில் இந்தியாவின் பிரிஸ்டி முகர்ஜீ (2022, 2024, 2026) மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ. 20,000 பரிசு, கோப்பை கிடைத்தது.ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் , இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வசந்தி, ருமேனியாவின் பிரியானா ஜோடியை இந்தியாவின் ருடுஜா, சீனாவின் ஜெங் ஜோடி 6-4, 6-3 என வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. ஐதராபாத்தில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொட ரில்  இந்தியாவின் விஷ்ணு வர்தன், மணிஷ் சுரேஷ் குமார் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். 

Jan 28, 2026

'பார்முலா-1' பயிற்சி அகாடமிக்கு தேர்வான முதல் இந்திய வீராங்கனை அட்டிகா மிர்,

காஷ்மீரைசேர்ந்தஇந்தியாவின்இளம்அட்டிகாமிர்,11. ஆண்கள்ஆதிக்கம்செலுத்தும்கார்பந்தயத்தில்,'சிங்கப்பெண்ணாக' சீறுகிறார் . இவர், 'பார்முலா-1' பயிற்சி அகாடமிக்கு தேர்வான முதல் இந்திய வீராங்கனை. டபியுள். எஸ்.கே., சூப்பர் மாஸ்டர் கார்ட் ரேசில், இத்தாலி, லா கன்காவில்நடந்த ஜூனியர் பிரிவில் பங்கேற்றார். தகுதிச் சுற்றில் (49.76 வினாடி) இவர், 2வது இடம் பெற்று சாதித்தார்.இவரது 'கார்ட்' பைனலுக்கு முந்தைய சுற்றில் ,தொழில்நுட்ப பிரச்னையால் 'ஸ்டார்ட்' ஆக வில்லை. பைனலுக்கான பட்டியலில் 18வது இடத்திற்கு பின்தங்கினார். "அறிமுக வீராங்கனையாக தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. பந்தயத்தின் போது, கார்ட்டில் பிரச்னை ஏற்படுவது சகஜம்," என்று அட்டிகா மிர் கூறினார்.

Jan 28, 2026

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் உத்தேச அட்டவணை வெளியானது.

அகில இந்திய கால் பந்து கூட்டமைப்பு சார் பில் (ஏ.ஐ.எப்.எப்.,), கடந்த 2014 முதல் இந்தி யன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர்நடத்தப்படுகிறது. இதன் 15 ஆண்டு ஒப்பந்தம் 2025, டிச.8ல் முடிந்தது.ஒப்பந்தம் புதுப்பிக்கப் படாத நிலையில், 12வது சீசன் நிறுத்தி வைக்கப்பட்டது. மத்திய அரசின் - தலையீட்டின் பேரில் ஐ.எஸ்.எல்., தொடர்வரும் பிப்.14ல் துவங்குகிறது. இதற்கான உத்தேச அட்டவணை வெளியானது. மொத்தம் 14 அணிகள் பங்கேற்க , 91 போட்டிகள்உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடக்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை தலா மோதும்.ஐ.எஸ்.எல்., தொடரில் பிப். 19ல் இருமுறை கோப்பை வென்ற  சென்னை அணி  (2015, 2017-18). தனது முதல் போட்டியில் மும்பைஅணியைஎதிர்கொள்கிறது.சென்னையில் 7 போட்டியில் பங்கேற்க உள்ளது. 

Jan 28, 2026

பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு. பி.எல்.,) கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் குஜராத் அணிவெற்றி .

இந்தியாவில் பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு. பி.எல்.,) கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடந்த லீக் போட்டியில், குஜராத், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. டில்லி அணி 20 ஓவரில் 171/8 ரன் மட்டும் எடுத்தது. குஜராத் அணி 20 ஓவரில் 174/9 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.

Jan 28, 2026

யூத் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, 204 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வென்றது.

19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 16வது சீசன் ஜிம்பாப்வே, நமீபியாவில், நேற்று 'சூப்பர்-6' போட்டிகள் துவங்கின. 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, ஜிம்பாப்வேயை சந்தித்தது. ஜிம்பாப்வே, 'டாஸ்' வென்று பீல்டிங் தேர்வு செய்தது. ஜிம்பாப்வே அணி 37.4 ஓவரில் 148 ரன்னுக்கு தோற்றது. இந்திய அணி 50 ஓவரில் 352/8 ரன் குவித்தது. பட்டியலில் இந்தியா (6 புள்ளி) முதலிடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே, வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்தன. 

Jan 27, 2026

ஷேக் ஜோவான் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவின் ரந்தீர் சிங் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவரான இவர் உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகினார். உஸ்பெகிஸ்தானில் நேற்று நடந்த ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கத்தாரைச் சேர்ந்த ஷேக் ஜோவான் பின் ஹமாத் அல்தானி புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, 2028-ம் ஆண்டு வரை அந்த பொறுப்பில் தொடருவார்.ஷேக் ஜோவான் கத்தார் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி உரிமத்தை கத்தாருக்கு பெறுவதே அவரது இலக்காகும். 

Jan 27, 2026

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகள்.

டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜானிக் சினெர் 6–1, 6-3, 7-6 (7-2) என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவரான லூசியானோ டார்டேரியை வென்று கால் இறுதிக்குள் நுழைந்தார். உலகதரவரிசையில் 6-வது இடம் வகிக்கும், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வென்றனர். மேடிசன் கீசை அமெரிக்கா). டபுள் பால்ட் (6 முறை)மற்றும் பந்தை வலுவாக வெளியே அடிக்கும் தவறுகளை ( 28 முறை) அதிகமாக செய்தது மேடிசனுக்கு பின்னடைவாக அமைந்தது. 4 அமெரிக்க மங்கைகள் பெகுலா, அனிசிமோவா, கோகோ காப், இவா ஜோவிச் கால் இறுதியை  அடைந்துள்ளனர். 2001-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் 4 அமெரிக்க வீராங்கனைகள் கால் இறுதிக்கு வந்துள்ளனர். 

Jan 27, 2026

பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை அணி  3-வது வெற்றியை  பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் பதிவு செய்தது.

 20 ஓவர் கிரிக் கெட் போட்டி ,5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் (டபிள்யூ.பி.எல்.) குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 16-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர் கொண்டது. 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. நாட்சிவெர் 100 ரன்களுடன் (57 பந்து, 16 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. 15ரன்கள் வித்தியாசத்தில்மும்பை அணி வெற்றி பெற்றது. 

1 2 ... 59 60 61 62 63 64 65 ... 172 173

AD's



More News