பெண்களுக்கான ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர் ,டொமினிகன் குடியரசில். பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சஹாஜா, ஜப்பானின் ஹிரோகா குவாட்டா ஜோடி, பிரிட்டனின் எஸ்தர் அடிஷினா, வெனிசுலாவின் சோபியா எலினா ஜோடியை எதிர் கொண்டது.முதல் செட்டை சஹாஜா ஜோடி என 6-3 கைப்பற்றி,. தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-2 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 14 நிமி டம் நடந்த போட்டியின் முடிவில் சஹாஜா ஜோடி, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது. இந்திய வீராங்கனை வைஷ்ணவி உஸ்பெகிஸ்தானில் நடந்த ஐ.டி.எப்., ஒற்றையர் பிரிவு பைனலில் 2-6, 4-6 என ரஷ்யாவின் பான்ஷினாவிடம் வீழ்ந்து 2வது இடம் பிடித்தார். டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. ஒற்றையர் பிரிவு தரவரிசையில், பிரெஞ்ச் ஓபனில் பைனல் வரை சென்ற இத்தாலியின் ஜானிக் ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்துக் கொண் டார். பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்ற ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
துப்பாக்கி சுடுதல். உலக கோப்பை தொடர் ஜெர்மனியில் இன்று துவங்குகிறது. இதில் இந்தியாவின் இளவேனில், வருண் தோமர், மனு பாகர், ஈஷா சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கால்பந்து 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ள ஆசிய கோப்பை கால் பந்து தொடரில் மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. இவை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும் போட்டிகள் நடக்கும். புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம்.உலகத் தரவரிசையில் 127வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. கோல் எதுவுமின்றி ,இந்தியா-வங்கதேசம் மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது. இன்று ஹாங்காங்கில், நடக்கும் போட்டியில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்திக்கிறது.
சர்வதேச செஸ் நார்வேயில், ('கிளாசிக்கல்') தொடர் நடந்தது. மொத்தம் 6 பேர் பங்கேற்றனர். 9 சுற்று முடிவில் நார்வேயின் கார்ல்சன் (15.0), இந்தியாவின் குகேஷ்(14.5), அமெரிக்காவின் நகமுரா (13.0), பேபியானோ (12.5), பேபியா, இந்தி யாவின் அர்ஜுன் (11.5) 'டாப்-5' இடத்தில் இருந்தனர். 10வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றால் சாம்பியன் ஆகலாம் என்ற நிலையில், பேபியானோவை சந்தித்தார். இதன் 48 வது நகர்த்தலில் செய்த தவறு காரணமாக, 50வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியடைந்தார்.கார்ல்சன், அர்ஜுன் மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' அர்ஜுன் வெற்றி பெற்றார். இதையடுத்து 16 புள்ளி பெற்ற கார்ல்சன், நார்வே தொடரில் 7வது முறையாக சாம்பியன் ஆனார்.ரூ.53 லட்சம் பரிசு பெற்றார். பேபியானோ 15.5 புள்ளியுடன் (ரூ.26.40 லட்சம்) இரண் டாவது இடம் பெற்றார். குகேஷிற்கு (14.5) 3வது இடம், ரூ.15.10 லட்சம் கிடைத்தது.5வது இடம் பெற்ற அர் ஜூன் ரூ. 11.32 லட்சம் பெற்றார்.இந்தியாவின் ஹம்பி, பெண்கள் பிரிவில் 10வது சுற்றில் சீனாவின் வென்சுனை 'டை பிரேக்க ரில்' வென்றார். முடிவில் 15 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்தார். உக் ரைனின் அனா முஜிசக் (16.5), சீனாவின் டிங் ஜீ (16) முதல் இரு இடம் பிடித்தனர். இந்தியாவின் வைஷா லிக்கு (11) 5வது இடம் கிடைத்தது.
.தைவான் தடகள ஓபன் சீனதைபேயில், நடந்தது. பெண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில், தமிழகத்தின் வித்யா ராம்ராஜ்(56.53 வினாடி) தங்கப்பதக்கத்தை சென்றார். ஆண்களுக்கான 400 மீ.,தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில் யாஷஸ் பாலக்ஷா (49.22 வினாடி) வெள்ளி வென்றார். இந்தியாவின் பூஜா பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் பைனலில் - இலக்கை 2 நிமிடம், 02.79 5 வினாடியில் கடந்து, புதிய சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனைடிவிங்கிள் சவுத்தரி (2 நிமி டம், 06.96 வினாடி) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்தியாவின் கிருஷ்ணன்குமார், ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் பைனலில் பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 48.46 வினாடியில் கடந்து, , தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். விஷால், தரம்வீர் சவுத்தரி, சந்தோஷ், மானு அடங்கிய இந்திய அணி ஆண்களுக்கான 4×400 மீ.,தொடர் ஓட்டத்தின் பைனலில் (3 நிமிடம், 05.58 வினாடி) தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றது.
இந்தியாவின் ரோகித் யாதவ் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் (74.42 மீ.,) தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றார். இந்தியாவின் அன்னு ராணி பெண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் (56.82 மீ.,) தங்கம் வென்றார்.
இந்தியாவின் ஷைலி சிங் (6.41மீ.,), ஆன்சி ஜோசன் (6.39 மீ.) வெள்ளி, வெண் கலத்தை பெண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் கைப்பற்றினர்.இத்தொடரில் இந்தியா வுக்கு 12 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 16 பதக்கம் கிடைத்தது.
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடக்கும்ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ்,5முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென்(நார்வே) உள்பட 6 வீரர்கள், பங்கேற்றுள்ளனர். இதில்ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதன் 9வது சுற்று ஆட்டம் ஒன்றில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய தமிழகத்தை சேர்ந்த குகேஷ் 40வது நகர்த்தலில் சீனாவின் வெய் யியை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 23-வது நகர்த்தலில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஹிகாருநகமுராவிடம்(அமெரிக்கா) டிரா கண்டார். இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க நடந்த டைபி ரேக்கரில் நகமுரா 48-வது நகர்த்தலில் எரிகைசியை வீழ்த்தினார்.9வது சுற்று முடிவில் கார்ல்சென் 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,குகேஷ் 14% புள்ளிகளுடன் 2வது இடத்திலும், நகமுரா 13 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.கடைசி சுற்றில் குகேஷ், பாபியானோ கருனாவையும், கார்ல்சென், அர்ஜூன் எரிகைசியையும் சந்திக்கிறார்கள். இதன் முடிவில்யாருக்கு சாம்பியன் பட்டம் என்பது தெரியவரும்.
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் ஆமதாபாத்தில் (குஜராத்), நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் நடப்பு சாம்பியன்' கோவா, புனே அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கோவா வின் ஹர்மீத் தேசாய், புனேயின் அல்வரோ ரோபிள்ஸ் மோதினர். இதில் ஹர்மீத் 2-1 என வெற்றி பெற்றார்.பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கிருத்விகா சின்ஹா ராய் (கோவா) 2-1 என ஜியோன் லீயை (புனே) வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் போட்டியில் கோவாவின் ஹர்மீத் தேசாய், ஜெங் ஜியான் ஜோடி 3-0 என புனே யின் ஜியோ லீ, அனிர்பன் கோஷ் ஜோடியை தோற்கடித்தனர். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஜெங் ஜியான் (கோவா) 2-1 என ரீத் ரிஷ்யாவை (புனே) வென்றார்.கோவா அணி 10-5 என வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 3 போட்டியில், 2ல் வென்ற கோவா அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் ஜூன் 20ல் லீட்சில் துவங்குகிறது.இதற்கு முன் நேற்று மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சுப்மன் கில் கூறியது: ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி இருக்கும்.தற்போது, இந்திய அணிக்காக நீண்ட காலம் சிறப்பாக விளையாடிய, இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் நாங்கள் களமிறங்குகிறது. அவர்களது இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. சீனியர்' வீரர்கள் இல்லாமல் விளையாட பழகி வருகிறோம். மற்றபடி டெஸ்ட் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட உடன் திகைத்து விட்டேன். இது மிகப் பெரிய பொறுப்பு. இதற்கான சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். கேப்டன் பணியில் எனக்கென 'ஸ்டைல்' எதுவும் இல்லை. அணியின் மற்ற வீரர்களின் பலம், பலவீனங்களை அவர்களுக்கு தெரிவிக்க முயற்சிப்பேன். அணி யில் தங்களது இடம் பாதுகாப்பான என் பதை அவர்கள் உணர வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்படுவர்.வரும் டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் ஆர்டர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்திய வீரர்கள் இரு அணியாக பிரிந்து பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளோம்.அடுத்து 10 நாள் பயிற்சி முகாம் உள்ளது. பவுலிங்கில் 10 வீரர்கள் உள்ளனர். பும்ரா விளையாடினால் சிறப்பாக இருக்கும். அவர் இல்லாத போது, சமாளிக்கத் தேவையான பவுலர்கள் அணியில் உள்ளனர்.கேப்டனாக, மற்ற வீரர் களுக்கு முன்னுதாரணமாக இருக்க முயற்சிப்பேன் என்று சுப்மன் கில் கூறினார்.
சர்வதேச கிளாசிக்கல் செஸ் தொடர் ஆர்மேனியாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட மொத்தம் 10 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதன் 7வது சுற்றில் பிரக்ஞானந்தா, ஆர்மேனியாவின் ஹகோபியானை எதிர்கொண்டார். பிரக்ஞா னந்தா 78 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் சாம்செவியன் மோதினர். அரவிந்த், போட்டியின் 65 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.ஏழு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, 5.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார்.