கடந்த ஆண்டு பிரான்சில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் (50 கிலோ பிரிவு) இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 31. பங்கேற்றார். இதில் ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறிய இவர் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.பைனல் நடப்பதற்கு முன் வினேஷ் போகத்தின் எடை பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையைவிட 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இவர் மல்யுத்தபோட்டியில் இருந்துஓய்வை அறிவித்தார்.இந்நிலையில் நேற்று வினேஷ் போகத் ஓய்வு முடிவு திரும்ப பெற்று மீண்டும் போட்டியில் பங்கேற்க போவதாகவும், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் விளையாடுவதே இலக்கு என்றும் தெரிவித்தார்.'மல்யுத்தபோட்டியைஇன்னும்நேசித்துக் கொண்டுஇருப்பதைஉணர்ந்தேன்.மீண்டும்விளையாடவிரும்புகிறேன்’ என்று சமூகவலைதளத்தில் அறிக்கைவெளியிட்டார்.லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (2028) பங்கேற்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்க முடிவு செய்துள்ளேன்,'என்று தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா அணியின் கேப்டன்,உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவருமான, லியோனல் மெஸ்சி இன்று கொல்கத்தாவுக்கு வருகிறார். 14 ஆண்டுக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு வருவதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாக மடைந்துள்ளனர்.அவரது கட் அவுட்கள், சுவரொட்டிகளை பல இடங்களில் பார்க்க முடிகிறது. 70 அடிஉயரத்தில், கையில்உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்றுவடிவமைக்கப்பட்டுள்ள மெஸ்சியின்சிலையைகாணொலி மூலம் திறந்து வைக்கிறார். மெஸ்சியின் வருகையையொட்டிஅங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடந்து வருகிறது.நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில்தென் ஆப்பிரிக்காவை வென்று, தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது. முன்னதாக எகிப்து அணி கால் இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.மற்றொரு கால்இறுதியில் ஹாங்காங் 3-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை வென்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் அரை இறுதியில் இந்தியஅணி நடப்பு சாம்பியன் எகிப்தை எதிர்கொள்கிறது.
ஆசிய யூத் பாரா விளையாட்டு துபாயில்மாற்றுத்திறனாளிகள் ஆண்களுக்கான (17-18 வயது) நீச்சல் போட்டி 50 மீ., 'பேக்ஸ் டிரோக்' பிரிவு (எஸ் 1-5) பைனலில் இலக்கை 40.35 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த இந்தியாவின் அப்துல் காதிர் இந்தோரி, தங்கப்பதக்கத்தை வென்றார்.50 மீ., 'பட்டர்பிளை' பிரிவு (எஸ் 2-7) ஆண்களுக்கான (17-18 வயது) நீச்சல் போட்டி பைனலில் பந்தய துாரத்தை 43.26 வினாடியில் கடந்த இந்தியாவின் அப்துல் காதிர், 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார்.
இந்திய ஹாக்கி அணி, தென் ஆப்ரிக்கா சென்ற உலகின் 'நம்பர்-7' ஆக உள்ள மூன்று போட்டி கொண்ட நிகோசி கோப்பை டெஸ்ட் தொடரின், முதல் போட்டியில் இந்தியா (5-2) வென்றது. இரண்டாவது போட்டி 'டிரா' (2-2) ஆனது. கேப்டவுனில் உள்ள ஹார்ட்லேவாலி மைதானத்தில் மூன்றாவது, கடைசி போட்டியின், முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது இந்தியா. இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ,இரண்டாவது பாதியிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது.
சென்னையில் உலக ஸ்குவாஷ் கோப்பை தொடரின் 5வது சீசன் தொடர்ந்து மூன்றாவது முறையாக (2011, 2023, 2025) நடக்கிறது . இந்தியா, ஹாங்காங், 2 முறை சாம்பியன் ஆன எகிப்து உட்பட 12 அணிகள், 4 பிரிவுகளாக பங்கேற்கின்றன.சுவிட்சர்லாந்து, பிரேசில் அணிகளுடன் இந்திய அணி, 'பி' பிரிவில் இடம் பெற்றது.முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தை வென்ற இந்தியா, நேற்று தனது இரண்டாவதுபோட்டியில் பிரேசிலை எதிர்கொண்டு, இந்தியாவின் அனாஹத் சிங் 17, பிரேசிலின் லாரா டா சில்வாவை 3-0 (7-4, 7-0, 7-2) என வென்றனர். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அபே சிங், டியகோ கோப்பையை 3-0 (7-3, 7-1, 7-1) என ,முடிவில் இந்திய அணி 4-0 என வென்றது.
'டி-20' தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டி கொண்ட முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று பஞ்சாப் மாநிலம், முல்லன்புரில் (புதிய சண்டிகர்) உள்ள மஹாராஜா யாதவிந்த்ரா சிங் மைதானத்தில், இரண்டாவது போட்டி முதன் முறையாக நடந்தது.'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 213/4 ரன் குவித்தது. இந்திய அணி 19.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. தொடர் 1-1 என சமனில் உள்ளது.மூன்றாவது போட்டி டிச.14-ல் தர்மசாலாவில் நடக்க உள்ளது.
அச்சக தொழில் செய்து வரும் தவசிக் குமார் 56. இவரது மனைவி உணவியல்நிபுணராக பாண்டிமாதேவி 50. இந்தத் தம்பதியினரின் இரு மகன்களுக்கும் திருமணமாகி பேரன்கள் உள்ளனர். பாண்டிமாதேவி நவ 30ல் தாய்லாந்தில் நடந்த சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்றார். 20 நாடுகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், இதில் இந்தியாவிலிருந்து 19 பேர் கலந்து கொண்டனர்.வயது பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியில் 40 முதல் 50 வயதுக்குட்பட்டோருக்கான தனிப்பிரிவில் 310 கிலோ எடையை துாக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். கடந்த மூன்றுஆண்டாகஇப்போட்டிக்குதயாரானேன்.ஏற்கனவேமாநிலஅளவில் 5 போட்டிகளிலும், தேசியஅளவில் 3 போட்டிகளிலும் தங்கம் வென்று தாய்லாந்து போட்டிக்கு தேர்வானேன்.பாண்டிமா தேவி கூறு கையில் "சாதனை படைப்பதற்கு வயது ஒரு தடையல்ல. 37 வயதிற்குப்பிறகு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் தூண்டப்பட்ட எனக்கு 50 வயதில் சர்வதேச பளு துாக்குதலில் தங்கப்பதக்கம் வென்றதை நினைத்துபெண்ணினத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாக பெருமிதம் கொள்கிறேன்.பல்வேறு போட்டிகளில் சாதனை படைக்க ஆசைப்படுகிறேன்" என்றார்.
மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா 18, ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரகிருதி பாரத் மோதினர். உன்னதி 21-12, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா 21-8, 17–21, 21-18 என, ஜப்பானின் அனா இவாகியை வென்றார். இந்தியாவின் அனுபமா 21-14, 21-13 என இந்தோனேஷியாவின் தலிலா அக்னியா புடேரியை வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான ஜூனி யர் உலகக்கோப்பை ஹாக்கி 11வது சீசன் சிலியில் 'சி' பிரிவு லீக் சுற்றில் நமீபியா, அயர்லாந்தை வென்ற இந்தியா, ஜெர்மனியிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது. இந்திய அணி அடுத்து நடந்த 9-16வது இடத்துக்கான போட்டியில், வேல்சை வென்றது.இந்தியா, உருகுவே அணிகள் ,நேற்று நடந்த 9-12 வது இடத்துக்கான போட்டியில் மோதின. இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என சமநிலையில் இருந்தது. இந்திய அணிக்கு மணிஷா (19வது நிமிடம்) கைகொடுத்தார். போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் அசத்திய இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் பூர்ணிமா யாதவ், இஷிகா, கனிகா சிவாச் கோல் அடித்தனர்.