வாழை மரத்தில் அதிக காய்கள் காய்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.
வாழைமரத்தில் காய்க்கும் பழம், வாழைப்பூ. வாழைக்காய், வாழை இலை, வாழை தண்டு, வாழை நார் போன்ற எல்லாமே பயனுள்ளதாக இருக்கிறது. இதனாலேயே எல்லாரும் வீட்டிலும் வளர்க்கிறார்கள். ஆனால் சிலரது வீட்டில் வாழைப்பழம் பெரிதாக இருக்கும். சிலரது வீட்டில் பழம் சிறியதாக இருக்கும். அவர்களும் பார்த்து பார்த்து தான் வளர்க்கிறார்கள் ஏன் இப்படி பழம் குச்சியாக உள்ளது என்று நினைப்பார்கள். வாழை மரத்தில் அதிக காய்கள் காய்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.
முதலில் வாழை கன்றை வைப்பதற்கு முன் 2 நாட்களுக்கு முன்பே குழியை நோண்டி அதில் ஆட்டு சாணம், மண்புழு உரம் போன்றவற்றை சேர்த்து கலந்து விட வேண்டும்..
இரண்டு நாட்களுக்கு பிறகு வாழைக்கன்றை வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். முக்கியமாக எப்பொழுதும் வாழைக்கன்றில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். தினமும் காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அடுத்து நீங்கள் வாழை கன்றை வைத்த கொஞ்சம் வளர்ந்தவுடன் 7 முறை சீவ வேண்டும். நீங்கள் அப்படியே விட்டு விட்டால் மரம் உயரமாக வளர்ந்து விடும். காய்களும் நன்றாக காய்க்காது.
வாழைக்கு தழைச்சத்து, சாம்பல் சத்து, மணி சத்து போன்றவை தேவைப்படும். இந்த சத்துக்கள் தான் அதிக காய்கள் காய்ப்பதற்கு உதவுகிறது.
:தழைச்சத்து அதிகரிப்பதற்கு உளுந்தை குழியில் போட வேண்டும். ஏனென்றால் உளுந்தில் ரஷோமீம் என்ற பாக்ட்ரியா உள்ளது. இவை மரத்தில் உள்ள கிருமிகளை அகற்றி செழிப்பாக வளர செய்கிறது.
தழைச்சத்தை அதிகப்படுத்துவதற்கு கடலை பிண்ணாக்கு கரைசல், ஆட்டு சாணம் போன்றவற்றை உரமாக கொடுக்கலாம்.
:மரத்தில் மணிச்சத்து குறைந்தால் சீப்புகளின் எண்ணிக்கை குறையும் இதனை இயற்கையாகவே அதிகரிப்பதற்கு எள்ளு பிண்ணாக்கு கரைசலை கொடுக்கலாம்..
சாம்பல் சத்தை அதிகப்படுத்த ஆமணக்கு கரைசலை கொடுக்க வேண்டும்.
மூன்று சத்துக்களையும் மாதத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.
0
Leave a Reply