JUNE 1-ம் தேதி அஹமதாபாத் , பஞ்சாப் மும்பை அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 203/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 207/5 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SHREYAS IYER தேர்ந்தெடுக்கப்பட்டார். பைனல் சுற்று நாளை 3-ம் தேதி அஹமதாபாத்தில்பஞ்சாப், பெங்களூர் அணி மோதுகின்றது.
ஹாக்கி நான்கு நாடுகள்பங்கேற்கும் ஜூனியர் பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் அர்ஜென்டினாவில் நடக்கிறது. இந்தியா, அர் ஜென்டினா, சிலி, உருகுவே அணிகள் பங்கேற்கின்றன. முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா, 4வது போட்டியில் சிலியிடம் தோல்வியடைந்தது. இந்திய அணி, தனது 5வது போட்டியில் நேற்று உருகுவே அணியை மீண்டும் சந்தித்தது.விறுவிறுப்பான இப் போட்டி ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது. இந்திய அணிக்கு துணை கேப்டன் ஹினா (10வது நிமிடம்), லால்ரின்புய் (242) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.பின்போட்டியின்முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் கீதா, கனிகா, லால்தான்ட் லுவாகி தலா ஒரு கோல் அடித்து கை கொடுக்க இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது செஸ் நார்வேயில், சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதன் 5வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜூன், 48வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் குகேஷ் (கருப்பு), சீனாவின் யி வெய் (வெள்ளை) மோதினர். இதில் குகேஷ் 56வது நகர்த்தலில் தோல் வியடைந்தார்.ஐந்து சுற்றுகளின் முடிவில் அர்ஜுன் 6.0 புள்ளி களுடன் 4வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் கார்ல்சன் (9.5 புள்ளி), கருவானா (8), நகமுரா (6.5) உள்ளனர். கடைசி இரு இடங்களில் யி வெய், குகேஷ் (தலா 5.5 புள்ளி) உள்ளனர்.பெண்கள் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, சீனாவின் லீ டிங் ஜீயை வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீராங்கனை வைஷாலி, ஸ்பெயினின் சாராவை தோற்கடித்தார். மல்யுத்தம் மங்கோலியாவில், சர்வதேச மல்யுத்த ரேங்கிங் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 61 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் உதித், மங்கோலியாவின்துமென் பிலெக் மோதினர். இதில் உதித் 4-6 என்ற கணக்கில் தோல்வி யடைந்து வெள்ளிப்பதக் கத்தை கைப்பற்றினார்.ஆண்களுக்கான 'பிரீஸ் டைல்' 57 கிலோ பிரிவு 3-4வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத், துருக்கியின் பெகிர் கேசர் மோதினர். இதில் அமன் 12-2 என வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.இத்தொடரில் இந் தியாவுக்கு 6 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என, மொத்தம் 21 பதக்கம் கிடைத்தது.
MAY 30-ம் தேதி பஞ்சாப்பில், குஜராத், மும்பை அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 228/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 208/6 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ROHIT SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவுது தகுதி சுற்றில் மும்பை அணி வெற்றி பெற்றது, ஜூன் 1-ம் தேதி eliminater ரவுண்டில் மும்பை, பஞ்சாப் அணி மோதுகின்றது.
மல்யுத்த ரேங்கிங் தொடர் மங்கோலியாவில் நடக்கிறது. பெண்களுக்கான பிரீஸ்டைல் போட்டி நடந்தன. இந்தியாவின் அன்டிம் (53 கிலோ), பைனலில் ரஷ்யாவின் நடாலியாவை 10-0 என வீழ்த்தி தங்கம் கைப்பற்றினார். 57 கிலோ பிரிவு பைன லில் இந்தியாவின் நேஹா, 4-0 என மங்கோலியாவின் போலூர்டுயாவை வென்று, தங்கம் வசப்படுத்தினார்.மற்ற இந்திய வீரா ங் க னைகள் ஹர்ஷித்தா (72). முஸ்கான் (59) தங்களது பிரிவில் பங்கேற்ற போட்டியிலும் வென்று, தங்கம் தட்டிச் சென்றனர். 50 கிலோ போட்டியில் நீலம் வெண்கலம் வென்றார்.ஆண்களுக்கான கிரிகோ போட்டிகள் ரவுண்டு ராபின்' முறையில் நடந்தன. 55 கிலோ பிரிவில் 4 போட்டியில் இந்தியாவின் அனில் மோர், தங்கம் கைப்பற்றினார். மற்ற இந்திய வீரர் கள் நிஷாந்த் (77), கரண் கம்போஜ் (87), நீரஜ் (67) வெண்கலப் பதக்கம் கைப் பற்றினர். நேற்று நடந்த 7 பிரிவுகளில் இந்தியாவுக்கு 6 பதக்கம்( 1 தங்கம், 2வெள்ளி, 3 வெண்கலம்) கிடைத்தன.இதுவரை இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி,4 வெண்கலம் என மொத்தம் 2 பதக்கம் கைப்பற்றியுள்ளது.
தென் கொரியாவில் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இந்தியா சார்பில் 58 பேர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் 18 வயது பூஜா பங்கேற்றார். 2023ல் நடந்த 23 ஆசிய சாம்பியன் ஷிப்பில் தங்கம் வென்ற இவர், நேற்று அதிகபட்சம் 1.89 மீ., உயரம் தாண்டி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியாவின் குல்வீர் சிங், 13:24.77 நிமிடத்தில் வந்து தங்கப்ப தக்கம் வென்றார். இது ஆசிய சாம்பி யன்ஷிப் சாதனை ஆனது. முன்னதாக 2015ல் கத்தார் போட்டியில் முகமது அல் கார்னி (கத்தார்), 13:34.47 நிமி டத்தில் வந்து இருந்தார்.குல்வீர் வென்ற இரண்டாவது தங்கம் இது. முன்னதாக 10,000 மீ., ஓட்டத்தில் சாதித்து இருந்தார். கோபால் சைனி (1981), பஹ துர் பிரசாத் (1993), லட்சமணனுக்கு (2017) அடுத்து 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற வீரர் குல்வீர் சிங்.
MAY 29-ம் தேதி பஞ்சாப்பில், பெங்களூர், பஞ்சாப் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 101/ 10 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 106/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SUYASH SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் தகுதி சுற்றில் பெங்களூர் அணி பைனலுக்கு முன்னேறியது.
தடகளம்26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் போட்டி நடந்தது. கடைசி நேரத்தில் முந்திய இந்தியாவின் அவினாஷ் சபிள், 8:20.92 நிமிடத்தில் வந்து தங்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தின் பைனல் நடந்தது. கடைசி 10 மீ., துாரத்தில் முந் திய இந்தியாவின் ஜோதி, 12.96 வினாடியில் வந்து தங்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான 4X400 5., தொடர் ஓட்ட ('ரிலே') பைனல் நடந்தது. இந்தியா சார்பில் துவக்கத்தில் ஜிஸ்னா, அடுத்து ரூபல், ரஜிதா ஓடினர்.கடைசி தமிழகத்தின் சுற்றில் சுபா, மின்னல் வேகத்தில் ஓடி, 3:34.18 நிமிட நேரத்தில் வந்த இந்தியா தங்கம் கைப்பற்றியது. நேற்று ஒரே நாளில் இந்தியா, 3 தங்கம் 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கம் வென்றது. செஸ் சர்வதேச செஸ் தொடர் நார்வேயில்நடக்கிறது. ஓபன் பிரிவில், நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன்(நார்வே) உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர்.மூன்றாவது சுற்றில் குகேஷ், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை சந்தித்தார்.31வது நகர்த்தலில்,குகேஷ் 42வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். பெண்களுக்கான மூன்றாவது சுற்றில் இந்தியாவின் ஹம்பி, ஸ்பெயினின் சாராவை வென்றார். இந்தியாவின் வைஷாலி, 'டை பிரேக்கரில்' சீனாவின் வென்சுனிடம் வீழ்ந்தார். மூன்று சுற்று முடிவில் உக்ரைனின் அனா முஜிசக் (6.0), ஹம்பி (6.0), சீனாவின் டிங்ஜீ (4.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். குத்து சண்டை சர்வதேச குத்துச்சண்டை தாய்லாந்தில்,தொடர்தாய்லாந்தில், நடக்கிறது. ஆண்களுக்கான 90 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நமன் தன்வர், உஸ்பெகிஸ்தானின் ஜூராபோவ் எலியோர்பெக் மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நமன் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார் பெண்களுக்கான அரையிறுதியில் ஏமாற்றிய இந்தியாவின் தமன்னா (51 கிலோ), லால்பாக் மாவி (80 கிலோ), பிரியா (57 கிலோ) வெண்கலம் கைப்பற்றினர்.
பாட்மின்டன் சர்வதேச பாட்மின்டன் தொடர் சிங்கப்பூரில் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி ('நம்பர் -27'), மலேசியாவின் ஹோன் ஜியான், முகமது ஹைக்கல் ஜோடியை ('நம்பர் -41') சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-16, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறியது. பெண்கள் இரட்டையரில், இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி 21-14, 19-21, 21-17 என சீனதைபேவின் சங், யங் ஜோடியை வீழ்த்தியது. ஹாக்கிஐரோப்பிய நாடுகளில் நடக்கவுள்ள புரோ லீக் போட்டியில் (ஜூன் 14-29) பங்கேற்க சலிமா தலைமையிலான இந்திய பெண்கள் அணி, பெங்களூருவில் இருந்து நெதர்லாந்து சென்றது. செஸ் சர்வதேச செஸ் தொடர் நார்வேயில்நடக்கிறது. ஓபன் பிரிவில், நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே) உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் குகேஷ், அர்ஜுன் மோதினர். முடிவில் 62வது நகர்த்தலில் அர்ஜுன் வெற்றி பெற்றார். பெண்களுக்கான இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் டிங்ஜீ மோதிய போட்டி டிரா ஆனது. வெற்றியாளரை நிர்ணயிக்க நடந்த 'டை பிரேக்கர்' போட்டியும் டிரா ஆனது.ஹாக்கி பெண்கள் அர்ஜென்டினாவில், நான்கு நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் நடக்கிறது. இந்தியா அர்ஜென்டினா, சிலி, உருகுவே அணிகள் பங்கேற்கின்றன. முதலிரண்டு போட்டியில் சிலி, உருகுவேயை வீழ்த்திய இந்தியா, 3வது லீக் போட டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என சம நிலையில் இருந்தது. இந்திய அணிக்கு கனிகா (44வது நிமிடம்) ஒரு கோல் அடித்து கை கொடுத்தார்.முடிவில் இந்திய அணி என 2-0 என வெற்றி பெற்றது.இந்திய அணி, தனது 4வது லீக் போட்டியில் (மே 30) சிலியை மீண்டும் சந்திக்கிறது. ஸ்குவாஷ் இங்கிலாந்தின் பர்மிங்காமில் பிரிட்டிஷ் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன.இந்தியா சார்பில் இளம் வீராங்கனை அனாஹத் சிங் பங்கேற்கிறார்.தகுதிச்சுற்று முதல் போட்டியில் அனாஹத் சிங் 3-0 (12-10, 11-3, 11-9) ரஷ்யாவின் ஹேலே வார்டை வீழ்த்தினார். அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் அனாஹத் சிங், இங்கிலாந்தின் மில்லி டாம்லின்சனை எதிர் கொண்டார். இதன் முதல் இரு செட்டை 11-6, 11-6 என வசப்படுத்தினார். அடுத்து நடந்த மூன்றாவது செட்டையும் 11-4 என எளிதாக வென்றார். 23 நிமிடம் நடந்த போட்டி முடிவில் அனா ஹத் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
MAY 27-ம் தேதி லக்னோவில், பெங்களூர், லக்னோ, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 227/3 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 230/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக JITESH SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார்.
26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் நேற்று துவங்கியது. 43 நாடுகளில் இருந்து 2000 வீரர், வீராங்கனைகள் . பங்கேற்கின்றனர். ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியாவின் குல்வீர் சிங் 26, சிறப்பாக செயல்பட்டார். ஆண்களுக்கான 20 கி.மீ., நடை பந்தயம் நடந்தது. இந்தியாவின் செர்வின் செபாஸ்டியன், ஒரு மணி நேரம், 21 நிமிடம், 13.60 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலம் கைப்பற்றினார். பெண்களுக்கான ஈட்டி எறிதலில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்தியாவின் அன்னு ராணி, அதிகபட்சம் 58.30 மீ., துாரம் மட்டும் எறிய, 4வது இடம் தான் கிடைத்தது. ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் அரையிறுதியில் அசத்திய இந்தியாவின் விஷால் தென்னரசு (46.05 வினாடி) பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு வீரர் ஜெய்குமார் (46.87) முதல் அரையிறுதியில் 4 வது இடம் பிடித்து வெளியேறினார். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் வித்யா (53.32), ரூபல் (53.00) வெற்றி பெற்றனர். உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சர்வேஷ் (2.10 மீ.,) பைனலுக்கு தகுதி பெற்றார்.