ஐ. சி. சி.விருதுக்கு இந்தியாவின் ஷைபாலி வர்மாநவம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனை.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி.) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.சிறந்த வீராங்கனைக்கான கடந்த நவம்பர் மாதத்தின் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியலில் இந்தியாவின் ஷைபாலி வர்மா, யு.ஏ.இ., அணியின் ஈஷா ஓஜா, தாய்லாந்தின் திபாட்சா இடம் பெற்றனர்.
சமீபத்திய உலக கோப்பை தொடரில், இந்தியாவின் பிரதிகா ராவல் காயத்தால் பாதியில் விலகினார். இவருக்கு மாற்றாக கள மிறங்கிய ஷைபாலி வர்மா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பைனலில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை வெல்ல உதவினார். இவர், ஆட்ட நாயகி விருதையும் (87 ரன், 2 விக்கெட்) தட்டிச் சென்றார். சிறந்தவீரருக்கான விருதை தென் ஆப்ரிக்காவின் சைமன் ஹார்மர் வென்றார்.
0
Leave a Reply