25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Feb 16, 2026

விளையாட்டு போட்டிகள் 16 th FEB 2026.

டபிள்யு.டி.டி., 'ஸ்டார் கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ், சென்னையில் கலப்பு இரட்டையர் பைனலில் ,இந்தியாவின் ஹர்மீத் தேசாய், யாஷஸ்வினி ஜோடி 0-3 (9-11, 2-11, 8-11) என, ருமேனியாவின் எட்வர்டு ஐயோனெஸ்கு, பெர்னாடெட் சோக்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது. , 'பிரீஸ்டைல்' செஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனியில்,  5-8வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 3-1 என உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவை வென்றார். அமெரிக் காவின் ஹான்ஸ் நீமனை, 5-6வது இடத்துக்கான போட்டியில் அர்ஜுன், சந்திக்கிறார். சர்வதேச உள்ளரங்கு தடகளத்தின் குண்டு எறிதலில், அமெரிக்காவில்இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன், அதிகபட்சமாக 16.83 மீ., துாரம் எறிந்து முதலிடம்பிடித்து, தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். 

Feb 16, 2026

'ஜெயண்ட் ஸ்லாலோம்''ஆல், பைன்' பனிச்சறுக்கு போட்டியில்அமெரிக்கா,பிரேசிலுக்கு 'முதல்' பதக்கம்.

குளிர்காலஒலிம்பிக் 25வது சீசன் இத்தாலியில், ஆண்களுக்கான 'ஆல், பைன்' பனிச்சறுக்கு, 'ஜெயண்ட் ஸ்லாலோம்' பிரிவில் பிரேசிலின் லுாகாஸ் பின்ஹீரோ பிராத்தன் 25, இலக்கை 2 நிமிடம், 25.00 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இது,  தென் அமெரிக்காவுக்கு 102 ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில், கிடைத்த முதல் பதக்கம். ஒன்பதாவது முறையாக (1992-2026) குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கும் பிரேசிலுக்கு முதல் பதக்கம் கிடைத்தது.

Feb 16, 2026

பிரீஸ்டைல் செஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர்  சர்வதேச செஸ் கூட்ட மைப்பு சார்பில் கார்ல்சனை வென்றார் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி.

.ஜெர்மனியில் பிரீஸ்டைல் செஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர்  சர்வதேச செஸ் கூட்ட மைப்பு சார்பில்,இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஐந்து முறை உலக சாம்பியன் நார்வே யின் கார்ல்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலில் 'ரவுண்டு ராபின்' முறையில் ஒவ்வொருவரும், மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோதினர். முதல் சுற் றில் ஜெர்மனியின் வின் சென்ட், 4வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவை வென்றார். 6வது சுற்றில் அர்ஜுன், கார்ல்சனை எதிர்கொண்டார். அர்ஜுன், 8வது நகர்த்தலில்முந்தினார். இவர், 28 நகர்த்தலில் வெற்றி பெற்றார். 7 சுற்று முடிவில்அர்ஜுன், 3.0 புள்ளியுடன் 6வது இடம் பெற, அரையிறுதி வாய்ப்பை இழந்தார். 5 முதல் 8 வரையிலான இடத்தை பெற, அர்ஜுன், மீண்டும் ஜாவோகிரை சந் திக்க உள்ளார்.

Feb 16, 2026

தாய்லாந்து தலைநகர்  பாங்காக்கில் பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை .

வளர்ந்து வரும் பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' தாய்லாந்துதலைநகர்  பாங்காக்கில், ஆசிய கோப்பை கிரிக்கெட் 2வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ', மலேசியா, எமிரேட்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இருபிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா 'ஏ' பாகிஸ்தான் 'ஏ' அணிகள் மோதின.“'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பாகிஸ்தான் அணி  18.5 ஓவரில் 93 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா 'ஏ' அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்து வெற்றி பெற்றது.  ஒரு வெற்றி, ஒரு தோல்வி என 2 புள்ளிகளுடன் இதுவரை விளையாடிய 2 போட்டியில், இந்தியா 'ஏ' அணி 2வது இடத்தில் உள்ளது. 

Feb 16, 2026

டி-20' போட்டியில் இந்திய பெண்கள் அணி .

 மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, நேற்று, சிட்னியில் முதல் போட்டியில், 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.ஆஸ்திரேலிய அணி 18 ஓவரில், 133 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.இந்தியா சார்பில் அருந்ததி ரெட்டி 4, ரேணுகா சிங், ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணி 5.1 ஓவ ரில் 50/1 ரன் எடுத்திருந்த போது,தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டி தொடர முடியாத நிலை ஏற்பட்டது.'டக்வொர்த்-லீவிஸ்' முறைப்படி இந்தியாவின் வெற்றிக்கு 5.1 ஓவரில், 30 ரன் தேவைப்பட்டது. ஆனால், கூடுதலாக 21 ரன் எடுத்திருந்த எடுத்திருந்த இந்தியாவெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுஇந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் அருந்ததி ரெட்டி வென்றார் 

Feb 16, 2026

இந்தியா, இலங்கை யில் 10வது டி-20 உலக கோப்பை லீக்  கிரிக்கெட் போட்டி .

கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ‘நடப்புசாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான் அணிகள்  மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவரில் 175/7 ரன் எடுத்தது. பாகிஸ்தான் அணி, 18 ஓவரில் 114  ரன்னுக்கு தோல்வி அடைந்தது. ஆட்டநாயகன் விருதை இஷான் கிஷான் வென்றார். 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது நேபாள அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்தது, வெஸ்ட் இண்டீஸ் அணி 15.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்து வெற்றி பெற்றது.ஆட்ட நாயகன் விருதை வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் வென்றார். ஏற்கனவே ஸ்காட்லாந்து, இங்கிலாந்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ்,வெற்றியுடன் 'சூப்பர்-8' சுற்றுக்குள் நுழைந்தது.3ல் வரிசையாக தோற்ற நேபாள அணி, அடுத்தசுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.'டி-20' உலக கோப்பை தொட ருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில்  சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று அமெரிக்கா, நமீபியா அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த அமெரிக்க அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன் எடுத்தது.  நமீபிய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை அமெரிக்காவின் சஞ்சய் வென்றார். 

Feb 15, 2026

பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பிரமோத் பகத் 2 தங்கம் வென்றார்.

பாரா பாட்மின்டன் உலக சாம்பியன் ஷிப் தொடர்பஹ்ரைனில் ,ஆண்கள் ஒற்றையர் எஸ். எல்.3 பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத், இந்தோனேஷியாவி்ன் அல் இம்ரானை எதிர்கொண்டார். இதில் பிரமோத், 21–12, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தொடர்ந்து பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் ,4வது, மொத்தமாக 6வது தங்கம் (2009, 2015, 2019, 2022, 2024, 2026) வசப்படுத்திஉள்ளார். 

Feb 15, 2026

பெண்களுக்கான ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர் ,ராஷ்மிகா-அன்கிதா 'சாம்பியன்' .

புனேயில், பெண்களுக்கான ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர் புனேயில், இரட்டையர் பிரிவுபைனலில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, அன்கிதா ரெய்னா ஜோடி, ஜப்பானின்மிசாகி மட்சுடா, எரிஷிமி சூ ஜோடியை சந்தித்தது. 'டை பிரேக் கர்' வரை நீடித்த முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 6-3 என வென்றது.

Feb 14, 2026

FEB 14 th டி-20' உலக கோப்பை லீக் போட்டி

'டி-20' உலக கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டியில் 2021ல் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேயை இலங்கையின் கொழும்புவில், நேற்று எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது.ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 169/2 ரன் எடுத்தது.  ஆஸ்திரேலியா அணி அடுத்து 40 ரன் எடுப்பதற்குள் 6 கெட்டுகளை இழந்தது. 19.3 ஓவரில் 146 ரன்னில் தோல்வி அடைந்தது....... 'டி-20' உலக கோப்பைக்கான, 'டி' பிரிவு லீக் போட்டி யில் ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று மோதின.'டாஸ்' வென்று முத லில் 'பேட்' செய்த கனடா அணி  20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்தது. எமிரேட்ஸ் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 151 ரன் எடுத்து முதல் வெற்றி. ........  'டி -20' உலக கோப்பைக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் அமெரிக்கா, நெதர்லாந்து அணிகள் சென்னை, சேப்பாக்கம் மைதா னத்தில் நேற்று மோதின. 'டாஸ்' வென்ற நெதர்லாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.அமெரிக்க அணி 20 ஓவரில் 6  விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தது. நெதர்லாந்து அணி 15.5 ஓவரில் 103 ரன்னுக்கு தோல்வி யடைந்தது. சர்வதேச 'டி-20' போட்டியில் அமெரிக்க அணி, முதன்முறையாக நெதர்லாந்தை வென்றது.

Feb 14, 2026

குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் இத்தாலியில் இந்திய வீரர் ஸ்டான்சின் லண்டப் 104வது இடம்.

குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் இத்தாலியில்,  ஆண்களுக்கான 'கிராஸ்- கன்ட்ரி' 10 பனிச்சறுக்கு, கி.மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் இந்தியாவின் ஸ்டான்சின் லண்டப் உட்பட 113 பேர் பங்கேற்றனர். இலக்கை 28 நிமிடம், 26.7 வினாடியில் கடந்த ஸ்டான்சின், 104வது இடம் பிடித்தார் . நார்வேயின் ஜோஹன்னஸ் ஹோஸ்பிளோட் க்ளோபோ (20 நிமிடம், 36.2 வினாடி) கடந்து தங்கம் வென்றார்.

1 2 ... 62 63 64 65 66 67 68 ... 181 182

AD's



More News