May 22 nd விளையாட்டு போட்டிகள்
துப்பாக்கி சுடுதல்
ஜூனி யர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் ஜெர்மனியில் நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., ஏர்பிஸ்டல் போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் கானக் (572), பிராச்சி (571) 4, 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். மற்ற இந்திய வீராங்கனைகள் ராஷ்மிகா (566) 14, சான்ஸ்கிருதி (565) 15வது இடம் பிடித்தனர்.அடுத்து நடந்த பைனலில் சிறப்பாக செயல்பட்ட கானக், 239 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.இந் தியாவின் பிராச்சி (176) ஐந்தாவது இடம் மட்டும் பிடித்தார்.இதுவரை தலா ஒரு தங்கம், வெள்ளி என 2 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
டென்னிஸ்
ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் ஜார்ஜியாவில் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சித்தாந்த் ஜோடி, நியூசிலாந்தின் அஜீத் ராய், லாட்வியாவின் ராபர்ட் ஜோடியை சந்தித்தது.முதல் செட் 5-5 என இழுபறி ஆனது. பின் இந்திய ஜோடி 7-5 என கைப்பற்றியது. தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-4 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம் 6 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 7-5, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.
ஹாக்கி
நான்கு நாடுகள் பங்கேற்கும் தொடருக்காக (மே 25 - ஜூன் 2) ஜூனியர் இந்திய பெண்கள் அணி, அர்ஜென்டினா சென்றது. இதில் உருகுவே, சிலி அணிகளும் விளையாடுகின்றன.
0
Leave a Reply