துப்பாக்கி சுடுதல் இந்திய ராணுவ அணி ஜூனியர் பெண்கள் அணிகள் பிரிவில் தங்கம் வென்றது.
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் டில்லியில், சீனியர் பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் திவ்யா (587 புள்ளி) முதலிடம் பிடித்தார். அடுத்த மூன்று இடங்களை அஞ்சலி சவுத்ரி (582), மனு பாகர் (581), ரிதம் சங்வான் (579) கைப்பற்றினர்.
மனு பாகர் அடுத்து நடந்த பைனலில் 36 புள்ளிகளுடன் தங்கத்தை வென்றார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே திவ்யா (32 புள்ளி), அஞ்சலி (28) வென்றனர். ரிதம் சங்வான் 4வது இடம் பிடித்தார்.
மகாராஷ்டிரா சீனியர் பெண்கள் அணிகள் பிரிவில் (25 மீ., 'பிஸ்டல்') தங்கம் வென்றது.
சிம்ரன்பிரீத் கவுர் பிரார் ஜூனியர்பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு பைனலில் தங்கம் வென்றார். பிரனவி, பாலக் முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
இந்திய ராணுவ அணி ஜூனியர் பெண்கள் அணிகள் பிரிவில் (25 மீ., 'பிஸ்டல்') தங்கம் வென்றது.
0
Leave a Reply