25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Feb 10, 2026

இந்திய வீராங்கனை மனு பாகர்  (25 மீ., 'பிஸ்டல்') ஆசிய துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார்.

டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் ('ரைபிள்' / 'பிஸ் டல்") தொடர் டில்லியில், பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஈஷா சிங் (589.24 புள்ளி), மனுபாகர் (584.18) முதலிரண்டு இடம் பிடித்தனர். மற்றொரு இந்திய வீராங்கனை ரிதம் சங்வான் (578.22) 7வது இடம் பிடித்தார், மனு பாகர், ஈஷாசிங், ரிதம் சங்வான் அடங்கிய இந்திய அணி,25 மீ 'பிஸ்டல்' அணிகள் பிரிவில் 1751.64 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது,   நாம்யா கபூர், அஞ்சலிபகவத், பாரிஷா குப்தா அடங்கிய இந்திய அணி ,ஜூனியர் பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' அணிகள் பிரிவில் (1723.39) தஙகம் வென்றது.அஞ்சலி பகவத் தனி நபர் பைனலில் வெண்கலம் வென்றார். 

Feb 09, 2026

'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பம்.

நேற்று இந்தியா இலங்கை 20 அணிகள் பங்கேற்கின்ற உலக கோப்பை 10வது டி -20' சீசன் துவங்கியது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, அமெரிக்க அணிகள் மோதிய போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்திய அணி 20 ஓவரில் 161/9 ரன் எடுத்தது. அமெரிக்க அணி 20 ஓவரில் 132/8 ரன் எடுத்து தோற்றது.சூர்யகுமார் (84 ரன், 49 பந்து) அவுட்டாகாமல் இருந்தார், ---------சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்08.02.2026 நேற்று நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில்நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மோதின. ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 182/6 ரன் எடுத்தது,நியூசிலாந்து அணி 17.5 ஓவரில் 183/5 ரன் எடுத்து வென்றது......……….  இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை,அயர்லாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற அயர் லாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்தது.   அயர்லாந்து அணி 19.5 ஓவரில் 143 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது.-----------------மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் நேபாளம், இங்கிலாந்து அணிகள் மோதின. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது,நேபாள அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

Feb 09, 2026

இளவேனில், அர்ஜுன் ஜோடி ஆசிய துப்பாக்கி சுடுதலில்  தங்கம்,.

ஆசிய துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்') சாம்பியன் ஷிப் 12வது சீசன் டில்லியில், கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் இளவேனில், அர்ஜுன் பாபுதா ஜோடி 632.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. பைனலில் இந்திய ஜோடி, 505.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றது.   10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு ஜூனியர் கலப்பு அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் ஷம்பவி, ஹிமான்ஷு ஜோடி (502.4 புள்ளி) தங்கம் வென்றது.  25மீ., 'ஸ்டேன்டர்ட் பிஸ்டல்' பிரிவில் ஆண்களுக்கான  பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங் (575.16 (571.14), அமன்பிரீத் சிங் புள்ளி), ஹர்ஷ் குப்தா (569.11) தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.  இதுவரை 20 பதக்கம் வென்ற 11 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என, இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

Feb 09, 2026

இந்தியாவின் லவ்லினா, சச்சின் எலைட் குத்துச் சண்டை தொடரில் தங்கம் வென்றனர்.

எலைட் சர்வதேச குத்துச்சண்டை தொடர் ஸ்பெயினில், பெண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவு பைனலில் இந்தியாவின் லவ்லினா, இங்கிலாந்தின் மேரி - கேட் ஸ்மித் மோதி  லவ்லினா, 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். பிரியா (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (70), நைனா (80), மஞ்சு ராணி (48),நீது கங்காஸ் (51), பூனம் (54)  பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு பைனலில் தங்கம் கைப்பற்றினர். மற்றொரு இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் (54 கிலோ) வெள்ளி வென்றார். ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு பைனலில்இந்தியாவின் சச்சின், கனடாவின் கியோமா அலி அல் அஹ்மதியே மோதி, ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு பைனலில்,சச்சின் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை வென்றார். மற்றொரு பைனலில் (75 கிலோ) இந்தியாவின் ஆகாஷ் 3-2 என, கஜகஸ்தானின் அமன் கோன்ஸ்பெ கோவை தோற்கடித்தார். 9 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் என, 19 பதக்கம் இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்தது. 

Feb 09, 2026

பிரான்செஸ்கா லோலோபிரிஜிடா., 'ஸ்பீடுஸ்கேட் டிங்' போட்டியில் இத்தாலி வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்.

இத்தாலியில், குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன். பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்பீடுஸ்கேட் டிங்' போட்டியில், பந்தய தூரத்தை 3 நிமிடம், 54.28 வினாடியில் கடந்த இத்தாலியின் பிரான்செஸ்கா லோலோபிரிஜிடா 35, தங்கப்பதக்கத்தை வென்றார். ‘ஸ்பீடுஸ்கேட்டிங்' போட்டியில், குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இத்தாலி வீராங்கனையானார்லோலோபிரிஜிடா. 

Feb 09, 2026

துபாய் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் சஜன் பிரகாஷ் முதலிடம்.

துபாய் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் ,ஐக்கிய அரபு எமிரேட்சில், ஆண்களுக்கான 200 மீ., ‘பட்டர்பிளை' பிரிவு பைனலில் இந்தியா வின் சஜன் பிரகாஷ்பங்கேற்றார். இலக்கை ஒரு நிமிடம், 59.61 வினாடியில் கடந்து முதலி டம் பிடித்த சஜன் பிரகாஷ் தங்கப் பதக்கத்தை வென்றார்.  இந்தியாவின் அத்வைத் பேஜ் ஆண்களுக்கான 1500 மீ., 'பிரீஸ்  டைல்' பிரிவில் வெண்கலம் வென்றார்.இந்தியாவின் சஜன் பிரகாஷ் ஆண்களுக்கான 400 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் (4 நிமிடம், 02.94 வினாடி), அத்வைத் (4:09.77) 7, 9வது இடம் பிடித்தனர்.பிரிட்டன் வீரர் ஜேம்ஸ் ஜார்ஜ் குய் (3:49.27) தங்கம் வென்றார். 

Feb 09, 2026

இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 'ஹெப்டத்லான்' போட்டியில் தங்கம் வென்றார் .

 ஆசியஉள்ளரங்குதடகளசாம்பியன்ஷிப் பிப். 9சீனாவின்டியான்ஜின்நகரில்,12வதுசீசன் ,ஆண்களுக்கான 'ஹெப்டத்லான்' போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் பங்கேற்றார்.5993 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த தேஜஸ்வின் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், போல் வால்ட், 1000 மீ., ஓட்டம் உள்ளிட்ட 7 போட்டிகள் முடிவில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.  இந்தியாவின் பூஜா சிங் 18, பெண்களுக்கான உயரம் தாண்டுதல் பைனலில் பங்கேற்றார். அதிக பட்சமாக 1.87 மீ., தாண்டி 2வது இடம் பிடித்த பூஜா வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி, புதிய தேசிய சாதனை படைத்தார். 

Feb 07, 2026

ஐ.சி.சி., உலக கோப்பை ‘உலக' சாம்பியன் ஆறாவது கோப்பை வென்ற இளம் இந்தியா. 

.19 வயதுக்கு உட் பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 16வது சீசன் ஜிம்பாப்வே, நமீபியாவில், ஹராரேயில் நேற்று நடந்த பைனலில் இந்தியா,இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஆயுஷ்மாத்ரே, பேட்டிங் தேர்வு செய்தார் 50 ஓவரில் 411/9 ரன் குவித்தது இந்திய அணி. .40.2 ஓவரில் 311 ரன் னுக்கு ஆல் அவுட்டானதுஇங்கிலாந்து அணி. வைபவ் சூர்யவன்ஷி 80 பந்தில் 175 ரன்  குவித்து சாதனை. 10 முறை பைனலில் உலக கோப்பை (19 வயதுக்கு உட் பட்ட) தொடரில் விளையாடிய இந்திய அணி ஆறாவது முறையாக (2000, 2008, 2012, 2018, 2022, 2026) சாம்பியன் ஆனது. 

Feb 07, 2026

இந்தியாவின் நீலம், ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த தொடரில், வெள்ளி வென்றார்.

சர்வதேச மல்யுத்த ஓபன் 'ரேங் கிங்' தொடர் குரோஷியாவின் ஜாக் ரெப் நகரில், நேற்று பெண்களுக்கான பிரீஸ்டைல் போட்டிகள் நடந்தன. இந்தியாவின் நீலம், ஜப்பானின் ஹாருனா  50 கிலோ பிரிவு பைனலில் மோதினர். இதில் நீலம் 2-5 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என  இத்தொடரில் இந்தியா 7 பதக்கம் இதுவரை வென்றுள்ளது. 

Feb 07, 2026

பிரிமியர் லீக் பெண்கள் கிரிக்கெட் பெங்களூரு அணி 2வது முறையாக வெற்றி.

பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் பைனலில், கேப்டன் ஸ்மிருதி மந்தனா (87), ஜார்ஜியா (79) கைகொடுக்க பெங்களூரு அணி (204/4, 19.4 ໑) 6 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணியை (203/4) குஜராத்மாநிலம் வதோதராவில் வென்றது. பெங்களூரு அணி 2வது முறையாக (2024, 2026) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் ஸ்மிருதி, ஆட்ட நாயகி விருதை வென்றார்.ஸ்மிருதி மந்தனா, பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் திருமணம்,  கடந்த ஆண்டு (நவ. 23) நடக்க இருந்த திருமணம் ரத்தானது. இந்த சோகத்தில் இருந்து மீண்ட ஸ்மிருதி, பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பை வென்று தந்தார்."களத்திற்கு, வெளியே கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் அணியை சிறப்பாக வழிநடத்தியஸ்மிருதி மந்தனாவுக்கு இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது என பெங்களூரு அணி வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல்கூறினார். இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்," என்றார். 

1 2 ... 65 66 67 68 69 70 71 ... 182 183

AD's



More News