நான்கு பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.'ஏ': இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா'பி': ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வேசி": இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்'டி' ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, யு.ஏ.இ., டி - 20' உலக கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 120 கோடி. கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 27.48 கோடி பரிசு கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணி ரூ.14.65 கோடி பெறும். கடந்த 2024ல் பார்படாசில் நடந்த 'டி-20' உலக கோப்பை பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, கோப்பை வென்றது, 'டி-20' போட்டியில் ஒரே ஓவரில்போட்டியின் முடிவு திசை மாறும்.இதை உணர்ந்து இந்திய அணி கவனமாக செயல்பட்டால், 140 கோடி மக்களின் கோப்பை கனவை நனவாக்கலாம். சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறை யாக கோப்பை வென்று வரலாறு படைக்க காத்திருக்கிறது.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இறுதிசுற்றில் இந்தியாவின் சம்ரத் ராணா-சுருச்சி சிங் ஜோடி 479.6 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது. உஸ்பெகிஸ் தானின் நிஜினா சைட்குலோவா-முகமது கமலோவ் ஜோடி 481.3 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றது. சீனதைபேயின் செங் யென் சிங்-ஹிக் சியாங் சென் கூட்டணி 412.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றது.பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் ராஷ்மிகாசாஹல்(237.9 புள்ளி)தங்கப்பதக்கமும், வன்ஷிகா சவுத்ரி (236.7 புள்ளி) வெள்ளிப்பதக்க மும் வென்றனர். இந்தோனேசியாவின் ஆசிபாரிஹாததுல் வெண்கலப்பதக்கம் பெற்றார். இதன் இளையோர் பிரிவில் இந்தியாவின் பிரியான்ஷி புர்வா (234.8 புள்ளி) தங்கப்பதக்கத்தையும், சாஹிக் கோக்லா (233) வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர். பெண்கள் ஜூனியர் மற்றும் இளையோர்அணிகள் பிரிவிலும் இந்தியா தங்கப்பதக் கத்தை வென்றது. முடிவில் இந்தியா 10 தங்கம், 5 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்தில் தொடருகிறது. உஸ்பெ கிஸ்தான் 3 தங்கப்பதக்கத்துடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் டில்லியில் பெண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரி வில், ஈஷா சிங், மனு பாகர், சுருச்சி அடங்கிய இந்திய அணி, 1726.53 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றது. இந்தியாவின் ராணா சாம்ராட், ஷர்வன் குமார், வருண் தோமர் அடங்கிய இந்திய அணி, ஆண்களுக்கான 10 மீ., 'ஏர்பிஸ்டல்' பிரிவில் 1732.52 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றனர்.'தனி நபர் பிரிவு 10மீ., 'ஏர் பிஸ்டல்' பைனலில் இந்தியாவின் ராணா சாம்ராட், 220.3 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார். இந்தியவீரர் ஷர்வன் குமார் (198.6) 4வது இடம் பிடித்தார்.
ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் ,இந்திய பெண்கள் அணி 'ஒய்' பிரிவில் தாய்லாந்து, மியான்மருடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் இந்தியா, மியான்மரை எதிர்கொண்டது. முதலில் நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா 21-13, 21-16 மியான்மரின் துஸ்ஹரை வென்றார்.இந்தியாவின் ரக்சித்தா ஸ்ரீ, சிர்பூவைஇரண்டாவது ஒற்றையர் போட்டியில் 21–12, 21-6 என வென்றார். மாளவிகா, லின் டினை ,21-9, 21-12 என வென்றார்.கடைசியாக நடந்த ஒற்றையர் போட்டியில் ஸ்ரீகாந்த் 21-15, 21-16 என ஜியா வெய்யை வென்று ,முடிவில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.
19 வயதுக்குஉட்பட்டஅணிகளுக்கானதெற்காசியகால்பந்துசாம்பியன்ஷிப்தொடர் நேபாளத்தில்இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என நான்கு அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. முதல் போட்டியில் நேபாளத்தை வென்ற இந்தியா, அடுத்து வங்க தேசத்திடம் தோற்றது, மூன்றாவது, கடைசி போட்டியில் பூடானை எதிர்கொண்டஇந்திய அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.3 போட்டியில் 2ல் வென்ற இந்தியா (1 தோல்வி), 6 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறியது. மீண்டும் பிப். 7 ல் மீண்டும் வங்கதேசத்தை சந்திக்க உள்ளது.
இந்தியா 10வது முறையாக உலககோப்பை தொடரின் (19 வயது) பைனலுக்கு முன்னேறியது. நேற்று நடந்த அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி. சி., உலக கோப்பை (50 ஓவர் )கிரிக்கெட் 16வது சீசன் ஜிம்பாப்வே, நமீபியாவில், நேற்று ஹராரேயில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 310/4 ரன் எடுத்தது. இந்திய அணி 41.1 ஓவரில் 311/3 ரன் எடுத்து வெற்றி பெற்று, 10 வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது.
ஸ்பெயினில்எலைட் சர்வதேச குத்துச்சண்டை தொடர் ஸ்பெயினில் 21 நாடுகளை சேர்ந்த, 214 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் பிரீத்தி பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்றில் 5-0 என, கஜகஸ்தானின் அலியாஸ்கர் சிம்பத்தை வென்றார். பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் பிராச்சி 5-0, என ஸ்பெயினின் வனேசா மோரெல் ரமிரெசை வென்றார். கனடாவின் அலெசியாவை இந்திய வீராங்கனை பிரியா (60 கிலோ) 5-0 என, தோற்கடித்தார். ஆண்களுக்கான 70 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா 5-0 என, நெதர்லாந்தின் பின் பாசை வென்றார் . இந்தியாவின் சச்சின் (60 கிலோ), அபினாஷ் (65), தீபக் (70), ஆகாஷ் (75), அன்குஷ் (80) மற்ற எடைப்பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
சர்வதேச மல்யுத்த ஓபன் 'ரேங்கிங்' தொடர் குரோஷியாவின் ஜாக் ரெப் நகரில்நேற்று ஆண்களுக்கான பிரீஸ்டைல் போட்டிகள் நடந்தன. இந்தியாவின் சுஜீத், பிரான்சின் காம்ஜத்தை 65 கிலோ பிரிவில் காலிறுதியில் 10-0 என வென்றார். அடுத்து நடந்த அரையிறுதியில் சுஜீத், அமெரிக்காவின் ஜோசப் கிறிஸ்டோபர் மோதினர். சுஜீத் 11-0 என வென்று பைனலுக்கு முன்னேறினார்.பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் அமன் ஷெராவத், 61 கிலோ பிரிவில் பங்கேற்றார். இதில் 'ரவுண்டு ராபின்' முறையில் போட்டி நடந்தன. முதல் போட் டியில் தோற்ற அமன், அடுத்த போட்டியில் ஈரானின் ரேஜாவை 12-2 என வென்றார்.
பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் ஆஸ்திரேலியாவில்,, 2026, மார்ச் 1-26ல் (12 அணிகள்) நடக்கவுள்ளது.இந்திய அணி தகுதிச்சுற்றில், முதன் முறையாக தகுதி பெற்று , முதல் போட்டியில் வியட் நாமை (மார்ச் 4, இடம் பெர்த்) சந்திக்க உள்ளது. தற்போது, இத்தொடருக்கு தயாராகும் வகையில் துருக்கி சென்றுள்ள இந்திய பெண்கள் அணி நட்பு கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளது. முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இந்திய அணி இரண்டாவது போட்டியில் ரஷ்யாவின் ஜிவெஸ்டா பெர்ம் அணியை சந்திக்க உள்ளது.
சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில், 'ஸ்டார் கன்டெண்டர்' தொடர் 2021 முதல் நடத்தப்படுகிறது. இத்தொடர் 2023, 2024 ஆண்டு கோவாவில் இருமுறை நடந்தது. முதன் முறையாக கடந்த ஆண்டு (2025) சென்னையில் நடந்தது.இரண்டாவது ஆண்டாக, 'ஸ்டார் கன்டெண்டர்' தொடர், சென்னையில் வரும் பிப் 10-15 ல் நடக்க உள்ளது. மொத்த பரிசுத் தொகை, ரூ.2.90 கோடி. இந்திய சார்பில் ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில், 23 பேர், பிரதான சுற்றில் பங்கேற்கின்றனர்.