MAY 9th விளையாட்டு போட்டிகள்
செஸ்
ஆசிய 'கான்டினென்டல்' செஸ் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), 2வது சுற்றில் இந்தியாவின் இனியன், சீனாவின் ஷிசூவாங் மோதினர். இனியன் 53வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் முரளி கார்த்திகேயன், சீனாவின் லுலூ யபிங்கை வென்றார். இந்தியாவின் அபிஜீத் குப்தா, சகவீரர் செந்தில் மாறனை தோற்கடித்தார். இந்தியாவின் பிரனேஷ், சீனாவின் ஜியாங்ருய் காங்கை வீழ்த்தினார். இந்தியாவின் நிஹால் சரின், ரஷ்யாவின் நிகிதா மாட்டினியனை வென்றார்.மற்ற 2வது சுற்று போட்டிகளை இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, சேதுராமன், அஸ்வத், பிரணவ் ஆனந்த் உள்ளிட்டோர் 'டிரா' செய்தனர்.
பெண்கள் பிரிவில் நடந்த 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் வந்திகா அகர்வால், பிரியங்கா, ரக்ஷிதா, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தனர்.
வில்வித்தை
உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 சீனாவின் ஷாங்காய் நகரில் ரிகர்வ் ஆண் கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பார்த் சுஷாந்த், காலிறுதியில் தென் கொரியாவின் கிம் ஜேதியோக்கை சந்தித்தார். இதில், சுஷாந்த், 6-2 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அடானு 2-6 என தென் கொரிய வீரர் கிம் ஊஜினி டம் தோல்வியடைந்தார். அரையிறுதியில் சுஷாந்த்-ஊஜின் மோத உள்ளனர்
பெண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி, சீனாவின் லி ஜியாமனை எதிர் கொண்டார். இதில் தீபிகா குமாரி 6-2 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் தென் கொரியாவின் லிம் ஷியோனை சந்திக்க உள்ளார்.
டென்னிஸ்
ஐ.டி.எப்., ஜார்ஜியாவில் நடக்கும் தொடரின், ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா 5-7, 3-6 என்ற கணக்கில் ஜார்ஜியாவின் சோபியாவிடம் தோல்வியடைந்தார்.
பாட்மின்டன்
'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் சீனதைபேயில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியா வின் ஆயுஷ் ஷெட்டி, கனடாவின் பிரையன் யாங் மோதினர். இதில், ஆயுஷ் 16-21, 21-19, 21-14 T வெற்றி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சீனதைபேயின் யி-டிங் ஹுவாங் மோதி னர். உன்னதி 21-8, 19-21, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply