ஐ.பி.எல் கிரிக்கெட் 14 வயது சூர்யவன்ஷி சதம்அடித்து சாதனை.
ஐ.பி.எல்.ல் குறைந்த வயதில்ஐ.பி.எல்.ல்அறிமுகம் ஆன வீரர் என்ற பெருமைக்குரிய பீகாரைச் சேர்ந்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் நிர்வாகம் ரூ.1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தனது முதல் இரு ஆட்டங்களில் 34மற்றும் 16 ரன்கள் வீதம் எடுத்த சூர்யவன்ஷி 3 -வது ஆட்டத்திலேயே சதம்அடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
மொத்த ஸ்கோரில் 94ரன்களை பவுண்டரி, சிக்சர் மூலம் 35 பந்துகளில் சதத்தை எட்டிய சூர்யவன்ஷி எடுத்து விட்டார். ஒட்டு மொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரராக திகழ்கிறார். இதற்கு முன்பு 18 வயதுக்கு குறைந்த வீரர் யாரும் சதம் அடித்ததில்லை.
0
Leave a Reply