28 TH APRIL விளையாட்டு போட்டிகள்
டேபிள் டென்னிஸ்
தெற்காசிய யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன் ஷிப்நேபாள தலைநகர் காத்மாண்டுவில்,19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான பைனலில் இந்தியா, நேபாளம் மோதின.பிரிதா, அனன்யா, ஹர்தீ படேல், தியா இடம் பெற்ற இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.
பெண்கள் 15 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான பைனலில் பிரீத்தி பால், ஆருஷி நந்தி,ஆத்விகா அராவல், தன்மயி சஹா இடம் பெற்ற இந்திய அணி 3-0 என இலங்கையை வீழ்த்தி தங்கத்தை வென்றது.
19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தனிநபர் பைனலில் இந்தியாவின் சோப்தா 3-1 வீரர் குஷால் என சக பாலமுருகனை வென்றார். 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தனிநபர் பைனலில் இந்தியாவின் அனன்யா 3-1 என பிரிதாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
இரட்டையரில் (15, 19 வயது) ஆதிக்கம் செலுத்திய இந்திய நட்சத்திரங்கள் 6 தங்கத்தையும் தட்டிச் சென்றனர்.இந்தியாவுக்கு 13 தங்கம், 3 வெள்ளி என, மொத்தம் 16 பதக்கம் கிடைத்தது.
குத்து சண்டை
17, 15, வயதுக்குட்பட் டோருக்கானஆசியகுத்துச் சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டானில், நேற்று, 17 வயதுக்குட்பட்டோருக் கான அரையிறுதி போட்டிகள் நடந்தன.
பெண்களுக்கான 46 கிலோ பிரிவு அரையிறுதி யில் இந்தியாவின் குஷி சந்த், உக்ரைனின் ஒலெக் சாண்ட்ரா செரெவாடா மோதினர். இதில் குஷி சந்த் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
ஆசிய பேஸ்பால்: இந்தியா தகுதி
பெண்களுக்கான ஆசிய கோப்பை பேஸ்பால் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, இலங்கை, ஈரான் அணிகளை வீழ்த்தி முதலிடம்பிடித்தது. அடுத்து நடந்த 'சூப்பர் ரவுண்டு சுற்றில் இந்தோ னேஷியாவிடம் வீழ்ந்தஇந்தியா, தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முடிவில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தோனேஷியா, இந்தியா அணிகள் பைனலுக்கு (ஏப். 29) முன்னேறின.
இவ்விரு அணிகள், ஆசிய கோப்பை பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றன. இந்திய அணி, தொடர்ந்து 4வது முறையாக (2017, 2019, 2023, 2025) ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது.
0
Leave a Reply