25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழ்வளர்ச்சித்துறை சார்பாக 31.10.2025 அன்று நடைபெறும் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறமைகொண்ட தகுதியான மாணவர்கள் திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்வளர்ச்சித்துறை சார்பாக 31.10.2025 அன்று நடைபெறும் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறமைகொண்ட தகுதியான மாணவர்கள் திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.

மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் சீரிய கருத்துகளை இளம் தலைமுறையினரின் மனதில் பதியச் செய்து அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து முழுமையாக ஒப்பிக்கும் திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறையால் குறள் பரிசாக ரூ.15000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்படவுள்ளது.

அந்தவகையில்   2025-26 ஆம் ஆண்டிற்கான குறள்பரிசு வழங்கும் பொருட்டு தகுதியான மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகையாக ரூ.15000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பெறும்.விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ / www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பங்களை 31.10.2025 க்குள் “தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம்” என்ற முகவரிக்கு நேரிலோ /அஞ்சல் மூலமாகவோ/ tamilvalar.vnr@tn.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News