25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


விளையாட்டு (SPORTS)

May 06, 2025

'கேலோ இந் தியா யூத்' 7வது சீசன் விளையாட்டு போட்டிகள்.

'கேலோ இந் தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் பீஹாரில், நடக்கிறது. துப்பாக்கி சுடுதல், சைக்கிளிங் பந்தயம், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் மட்டும் டில்லியில் நடக்கின்றன.சைக்கிளிங் போட்டி.சைக்கிளிங் போட்டியில் ராஜஸ்தானின் ஹர்ஷித்தா, 500 மீ., டைம் டிரையல் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு  நேற்று தங்கம் கைப்பற்றினார். தமிழகத்தின் தபிதாவுக்கு வெண்கலம் கிடைத்தது.7.5 கி.மீ., ஸ்கிராச் ரேஸ் பிரிவில் ஹர்ஷித்தா, 11 நிமிடம், 50.973 வினாடி நேரத்தில் வந்து தங்கத்தை  வசப்படுத்தினார்.துப்பாக்கிசுடுதல்.துப்பாக்கிசுடுதல் போட்டியில் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் மயங்க் சவுத்ரி தங்கம் கைப்பற்றினார்.நீச்சல் போட்டிகயாவில் நடந்த நீச்சல் போட்டியில் தெலுங்கானா வின் வர்ஷித் (400 மீ., தனி நபர் மெட்லே), சுஹாஸ் (100 மீ., பேக்ஸ்டிரோக்), ஸ்ரீ நித்யா (100 மீ., பேக்ஸ் டிரோக்) என மூவரும் தங்கம் கைப்பற்றினார்கள்.  ஜூடோ போட்டிஜூடோ போட்டியில் திவ்யா (44 கிலோ), குஷ்பு (57 கிலோ) குஜராத் அணிக்கு முதல் இரு தங்கம் வென்று தந்தனர்.நடந்த போட்டிகளில் ராஜஸ்தான் அணி, 6 தங்கம், 2 வெள்ளி என 8 பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. : கர்நாடக அணி (5 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம்) இரண்டாவதாக உள்ளது. மஹாராஷ்டிரா (5 தங்கம். 6 வெள்ளி, 9 வெண்கலம்) மூன்றாவது இடத்தில் உள்ளது. டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, 5 இடம் முன்னேறி, 33வது இடம் பிடித்துள்ளார். கடந்த வாரம் நடந்த மாட்ரிட் டென்னிசில் போபண்ணா ஜோடி, காலிறுதிக்கு முந்தைய சுற் றுக்கு தகுதி பெற்றதால், இந்த முன்னேற்றம் கிடைத்தது. டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது.45 வயதான போபண்ணா, மீண்டும் இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார். 

May 05, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' கிரிக்கெட்

மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' கிரிக்கெட் தொடர் பெங்களூருவில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதல் நான்கு போட்டியில் 'வென்ற இந்தியா, தொடரை கைப்பற்றியது.நேற்று, ஐந்தாவதுபோட்டியில் ,முதலில் 'பேட்' செய்த இந்திய அணி,20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்தது. இலங்கை அணி 15 ஓவரில், 88 ரன்னுக்கு 103 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு கோப்பையுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.இலங்கை அணிக்கு கோப்பையுடன், ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் நரேந்திர வென்றார். நாயகன் இந்தியாவின் மாங்கூர் தொடர் விருதை ரவிந்திர சான்டே கைப்பற்றினார். 

May 05, 2025

 'கேலோ இந்தியா யூத்' விளையாட்டுபோட்டிகள்  .

'கேலோ இந்தியா யூத்' விளையாட்டு 7வது சீசன்,பீஹாரில்,  துப்பாக்கி சுடுதல், சைக்கிள் பந்தயம், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் மட்டும் டில்லியில் நடக்கின்றன.துப்பாக்கி சுடுதல் .நேற்று, டில்லியில் நடந்த துப்பாக்கி சுடுதல் கலப்பு அணிகளுக்கான 10 மீ.,'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் ராஜஸ்தானின் பிராச்சி, மயங்க் சவுத்ரி ஜோடி, உ.பி.,யின் தேவ் பிரதாப், உர்வா சவுத்ரி ஜோடியை சந்தித்தது. போட்டி 15,15 என 'டை' ஆனது. பின் 'ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, இம்முறை முதல் தங்கத்தை கைப்பற்றியது..மூன்றாவது இடத்துக்கான போட்டியில் டில்லியின் ஹர்திக் பன்சால், நியாமிகா ராணா ஜோடி 1614 என ஹரியானாவின் பிரதிக் ஷியோகன்ட், கனக் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.நீச்சல் போட்டி.நீச்சல் போட்டியில் கர்நாடகா நட்சத்திரங்கள்,. நேற்று வழங்கப்பட்ட 7 தங்கப்பதக்கத்தில்,4 தட்டிச் சென்றனர். மஹாராஷ்டிரா, கேரளா, அசாம் அணிகளுக்கு தலா ஒரு தங்கம் கிடைத்தன..ஆண்களுக்கான வில்வித்தைஆண்களுக்கான வில்வித்தை தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு அரையிறுதியில் தமிழகத்தின் ஸ்மரன் சர்வேஷ் 6,2 என, உ.பி.,யின் விஷுவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.  

May 04, 2025

'கேலோ இந்தியா யூத்' வாலிபால் விளையாட்டு.

'கேலோஇந்தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் நேற்றுபீஹாரில்,பெண்களுக்கான வாலிபால் 'பி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஜார்க் கண்ட் அணிகள் மோதின. தமிழக அணி3-0 (25-13, 25-11,25-7) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 'ஏ' பிரிவு போட்டியில் மேற்கு  வங்க அணி3-0 (25-9, 25-7, 25-9) என பீஹாரை வென்றது.ஆண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் பின்தங்கி இருந்த ஜம்மு காஷ்மீர் அணி, பின் எழுச்சி கண்டு 3-2 (18-25, 25-20, 16-25, 27-25, 15-9)  உத்ரகாண்ட் அணியை வீழ்த்தியது. 'பி' பிரிவு போட்டியில் குஜராத் அணி 3-1 (25-12, 18-25, 25-18, 25-19) என கேரளாவை வென்றது

May 04, 2025

5TH MAY விளையாட்டு போட்டிகள் .

கபடி 'நடப்பு சாம்பியன்' ஆண்களுக்கான கபடி லீக் போட்டியில் ஹரியானா, கர்நாடகா அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் 28-14 என முன்னி லையில் இருந்த ஹரியானா, ஆட்ட நேர முடிவில் 57-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.பெண்களுக்கான லீக் போட்kடியில் 'நடப்பு சாம்பியன்' ஹரியானா அணி 33-32 என பஞ்சாப் அணியை வீழ்த்தியது.ஹாக்கி இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியா சென்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று. முதல் மூன்று போட்டியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி யிடம் தோல்வியடைந்த இந்தியா, 4வது போட்டியில் சீனியர் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. நேற்று, பெர்த்தில் நடந்த கடைசி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் மோதின. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் இந்தியாவின் நவ்னீத் கவுர் ஒரு கோல் அடித்தார்.. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது.  

May 04, 2025

3RD MAY AND 4TH MAY IPL MATCH

3RD  MAY  IPL MATCH BANGALORE – CHENNAI  MAY 3-ம் தேதி பெங்களுரில், சென்னை, பெங்களுர், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி 213/5 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 211/5 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக Romario Shepherd தேர்ந்தெடுக்கப்பட்டார்.4TH MAY IPL MATCH KOLKATTA - RAJASTHAN 4-ம் தேதி கொல்கத்தாவில், ராஜஸ்தான், கொல்கத்தா, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 206/4 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 205/8 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ANDRE RUSSELL தேர்ந்தெடுக்கப்பட்டார்.4-ம் தேதி தர்மசாலாவில் பஞ்சாப், லக்னோ, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 236/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய லக்னேர் அணி 199/7 ரன்கள் தோல்வியடைந்தது.. 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PRABHSIMRAN SINGH தேர்ந்தெடுக்கப்பட்டார்.

May 04, 2025

“யூத் ஸ்டார் கன்டெண்டர்'டேபிள் டென்னிஸ் தொடரில் ,ஒரு தங்கம் ,3 வெள்ளி வென்ற இந்தியா.

“யூத் ஸ்டார் கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் தாய்லாந்தில்,19 வயதுக்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் அன்குர் பட்டாச் சார்ஜீ, அபினாத் பிரதாவதி ஜோடி, தென் கொரியாவின் லீ ஜங்மோக், சோய் ஜிவூக் ஜோடியை எதிர் கொண்டது. இந்திய ஜோடி 3-1 (11-7, 8-11, 11-8, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பட்டத்தை  வென்றது. (19 வயது) பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சின்ட் ரெலா தாஸ், திவ்யான்ஷி போவ்மிக் ஜோடி 1-3 (7-11, 15-13, 1-11, 10-12) என தாய்லாந்தின் விராகர்ன் தயாபிடக், பாட்சரபோன் வோங்லாகோன் ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றது. 15 வயதுக்குட்பட்ட பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ரியானா, அனன்யா த் ஜோடி வெள்ளி வென்றது. பெண்கள் ஒற்றையரில் (15 வயது ) இந்தியாவின் திவ்யான்ஷி போவ்மிக் வெள்ளி வென்றார்.

May 02, 2025

2ND MAY  IPL MATCH .GUJARAT - HYDERABAD.

  MAY 2-ம் தேதி  அகமதாபாத்தில், குஜராத், ஐதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 224/6, ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணி 186/6 ரன்கள்  எடுத்து தோல்வியடைந்தது,  38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PRASIDH KRISHNA  தேர்ந்தெடுக்கப்பட்டார். பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

May 02, 2025

அமெரிக்காவில் நடக்கவுள்ள இந்தியா, அமெரிக்க நட்சத்திரங்கள் பங்கேற்கும் 'செக் மேட்' செஸ் போட்டி .

செஸ் உலகில் முதன் முறையாக இரு நாடுகள் நேருக்கு நேர் மோத உள்ளன. இருதரப்பு கிரிக்கெட் போன்ற இப்போட் டியில் செஸ் உலகின் வலுவான இந்தியா - அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன..போட்டியை நடத்தும் நாடு  என்பதால், அமெரிக்க நட்சத்திரங்கள், 5 போட்டியிலும் வெள்ளை நிற காய்களுடன் விளையாடுவர். முதல் போட் டியில் இந்தியாவின் குகேஷ்-அமெரிக்காவின் நகமுரா மோதுவர். அதைத் தொடர்ந்து அர்ஜுன்-பேபியானா காருணா, சாகர் ஷா -லெவி ரோஸ்மன், திவ்யா-காரிஸ்சா, ஈதன் வாஸ்-அடீவ்யுமி மோத உள்ளனர். இதன் பின் இரு அணிகள் மோதும் போட்டி இந்திய மண் ணில் நடத்தப்பட உள்ளது.  இந்திய அணிக்கு உலக சாம்பியன் குகேஷ், அமெரிக்க அணிக்கு உலகின் 'நம்பர்-2' ஹிகாரு நகமுரா தலைமை ஏற்கின்றனர். மொத்தம் 5 போட்டி நடக்கும். ஒவ்வொரு போட்டி யிலும் இருவருக்கும் தலா 10 நிமிடம் தரப்படும். ஒருவேளை 'டிரா' ஆனால், அடுத்து 5 நிமிடம், 1 நிமிடம் கொண்ட போட்டியாக, முடிவு கிடைக் கும் வரை நடத்தப்படும். 'சேக் மேட்' என பெயரிடப்பட்ட இப்போட்டி வரும் அக்டோபர் 4ல், அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள 1 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட, இஸ்போர்ட்ஸ் மைதானத்தில் (ஆர்லிங்டன்) நடக்க உள்ளது.2500 பேர் நேரடியாக இதை கண்டு ரசிக்கலாம். போட்டிகள் 90 அடி உயரமான ராட்சத ஸ்கிரீனில் ஒளிபரப்பாகும். வழக்கமாக செஸ் அரங்கில் நிலவும் அமைதி போல இல்லாமல் உற்சாகத்துடன் பார்க்கலாம்.

May 02, 2025

(ஏ.ஐ.எப்.எப்.,) இந்திய கால்பந்து விருது வழங்கும் விழா.

(ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில்அனைத்துஇந்தியகால்பந்துகூட்டமைப்பு,ஒவ்வொருஆண்டும்சிறப்பாகசெயல்படும்வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும்.நேற்று,ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் சிறந்த வீரருக்கான விருதை சுபாஷிஷ் போஸ் கைப்பற்றினார். கோல்கட் டாவை சேர்ந்த தற்காப்பு வீரரான இவர், இந்தியாவுக்காக 42 போட்டியில் பங்கேற்றுள்ளார். இவரது தலைமையிலான மோகன் பகான் அணி, இந்தியன் சூப் பர் லீக் (ஐ. எஸ்.எல்.,) 11வது சீசனில் (2024-25) கோப்பை வென்றது. தவிர, லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து ஐ.எஸ்.எல்., ஷீல்டு வென்றது.தெலுங்கானாவை சேர்ந்த மத்தியகள வீராங்கனையான ஈஸ்ட் பெங்கால் அணியின் சவுமியா சிறந்த வீராங்கனைக்கான விருதை தட்டிச் சென்றார். தெலுங்கானாவை சேர்ந்த மத்தியகள வீராங்கனையான இவர், இந்தியாவுக்காக 33 போட்டியில் களமிறங்கினார். சிறந்த கோல்கீப்பருக்கான விருதை ஹிமாச்சல பிரதேசத்தின் விஷால் கைத் கைப்பற்றினார். இவர், ஐ.எஸ்.எல்., 11வது சீசனில் சிறந்த கோல்கீப்பராக தேர்வாகினார். பெண்கள் பிரிவில் சிறந்த கோல்கீப்பராக மணிப்பூரின் பந்தோய் சானு கைப்பற்றினார்.சிறந்த நம்பிக்கைக்குரிய வீரராக கோவாவின் பிரிசான் பெர்ணான்டஸ், வீராங்கனையாக மணிப்பூரின் தோய்பி சானா சானு தேர்வாகினர்.

1 2 ... 64 65 66 67 68 69 70 ... 94 95

AD's



More News