கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ்,
டபிள்யு. டி.டி., டேபிள் 'கன்டெண்டர்' டென்னிஸ் தொடர் டுனிசியாவில் ,கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சிட் டாலே ஜோடி, ஜப்பானின் சோரா மட்சுஷிமா, மிவா ஹரிமோடோ ஜோடியை சந்தித்தது. .
இந்திய ஜோடி 3-2 (11-9, 5-11, 14-12, 3-11, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. டபிள்யு.டி.டி., 'கன்டெண்டர்' கலப்பு இரட்டையரில் பட்டம் வென்ற 2வது இந்திய ஜோடியானது.
இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தாக்கர் ஜோடி, 2-3 (11-8, 7-11, 11-8, 9-11, 10-12) என்ற கணக்கில் ஜெர்மனியின் பெனடிக்ட் டுடா, ஆன்ட்ரி பெர் டெல்ஸ்மியர் ஜோடியி டம் .ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.
குத்து சண்டை
15,17 வயதுக்குட்பட்டோருக் கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்ஜோர்டானில் நடக்கிறது. நேற்று, 17 வயதுக்குட் பட்டோருக்கான காலிறுதி போட்டி நடந்தது.
பெண்களுக்கான 60 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், ஜோர்டானின் அயா அல்ஹாசனாத் மோதினர். சிம்ரன் ஜீத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
பின், 70 கிலோ பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை ஹிமான்ஷி, பாலஸ்தீனத்தின் பராஹ் அபூ லைலாவை வென்றார்.
ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் அமன் சிவாச் (63 கிலோ), தேவன்ஷ் (80 கிலோ) வெற்றி பெற்றனர். இந்தியாவுக்குஇத்தொடரில் 43 பதக்கம் உறுதியானது. இதில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 18 பதக்கம்,15 வயதுக்குட்பட் டோர் பிரிவில் 25 பதக்கம் வென்றனர்.
0
Leave a Reply