விளையாட்டு போட்டிகள் .JAN 31ST
ஹாக்கி
ரூர்கேலா (ஒடிசா), ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. டபுள் ரவுண்டு-ராபின்' முறையில் நடந்த லீக் சுற்று நடந்தது. இதன் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த பெங்கால் (19 புள்ளி), சூர்மா (19), ஐதராபாத் (18), தமிழகம் (18) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ரூர்கேலாவில் இன்று நடக்கும் முதல் அரை யிறுதியில் பெங்கால், தமிழக அணிகள் மோதுகின்றன.
நீச்சல்
ஆண்களுக்கான 200 மீ., 'பிரஸ்ட் ஸ்டிரோக்' நீச்சல் பைனல் நடந்தது. இதில் தமிழக வீரர் தனுஷ், தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
'டிரையாத்லான்'
கலப்பு 'டிரையாத்லான்' போட்டியில் தமிழக அணி, வெண்கலம் வென்றது.
கூடைப்பந்து
பெண்களுக்கான கூடைப்பந்து 'பி' பிரிவு போட்டியில் தமிழக அணி 86-52 என டில்லியை வென்றது.
கால்பந்து
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கேரளா அணிகள் மோதின.
முடிவில் சென்னை அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி யடைந்தது. சென்னை அணி 19 போட்டியில், 4 வெற்றி, 6 'டிரா', 9 தோல்வியுடன் (18 புள்ளி) 10வது இடத்தில் உள்ளது.
பெண்களுக்கான கால்பந்து 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழக அணி 6-0 என்ற கோல் கணக்கில் சிக்கிமை வீழ்த்தியது
செஸ்
மாஸ்டர்ஸ் பிரிவு 10வது சுற்றில், 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியா வின் குகேஷ், நெதர்லாந்தின் வார்மெர்டாமை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளை யாடிய குகேஷ், 34வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். பத்து சுற்று முடிவில் 5 வெற்றி பெற்ற இந்தியாவின் குகேஷ், 7.5 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்
இந்தியாவின் பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் விளாடிமிரை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா, 45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.பிரக்ஞானந்தா (6.5) அடுத்த ( 3 )இடத்தில் நீடிக்கிறார்.
0
Leave a Reply