மஹாராஷ் டிராவின் ஷாம்பவி, துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
குமார் சுரேந்திர சிங் நினைவு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் டில்லியில், பெண்களுக்கான 10 மீ., ''ஏர் ரைபிள்' பிரிவு தகு திச் சுற்றில் மஹாராஷ் டிராவின் ஷாம்பவி, 633.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித் தார். அடுத்து நடந்த பைனலில் 16 வயது வீராங்கனை ஷாம்பவி, 252.9 புள் ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பைனல் வரை சென்ற ஹரியானாவின் ரமிதா (252.1 புள்ளி) வெள்ளி வென் றார். உலக சாம்பியன்ஷிப்பில் 'வெண்கலம் வென்ற மேற்கு வங் கத்தின் மெஹுலி கோஷ் (231.0) வெண்கலத்தை கைப்பற்றினார்.
ஜூனியர் பெண்கள் பிரிவு (10 மீ., 'ஏர் ரைபிள்') பைனலில் ரமிதா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.ஷாம்பவி வெள்ளி, வெண்கல பதக்கத்தை, மன்யா மிட்டல் (உ.பி.,) வென்றனர்.
0
Leave a Reply