28வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல்
கேரள மாநிலம் கொச்சியில், 28வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள போட்டி நடந்தது. ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப் போட்டியில் ஜே.எஸ். டபிள்யு., அணிக்காக விளையாடிய தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் 23, அதிகபட்சமாக 17.37 மீ., தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார்
பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் கோபிகா (1.82 மீ.,) வெள்ளிப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான ஈட்டி எறிதலில் உ.பி.,யின் அன்னு ராணி (56.66 மீ.,) தங்கப்பதக்கம் வென்றார் .
பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் இலக்கை 23.91 வினாடி யில் கடந்த தமிழகத்தின் ஏஞ்சல் சில்வியா வெள்ளி வென்றார். ஆண்களுக் கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் பந்தய தூரத்தை 20.85 வினாடியில் அடைந்த தமிழகத்தின் ராகுல் குமார், வெண் கலம் வென்றார்.
0
Leave a Reply