ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் அரையிறுதியில் லக்சயா சென்.
'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட் மின்டன் தொடர் சிட்னியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், சக வீரர் ஆயுஷ் ஷெட்டி பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட் 19–19, 21–21 என இழுபறியாக இருந் தது. பின் லக்சயா 23-21 என வென்றார்.இரண்டாவது செட்டை 21-11 என எளிதாக கைப்பற்றினார். முடிவில் லக்சயா 23-21, 21-11 என நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு நுழைந்தார்.
ஆண்கள் இரட்டை யர் பிரிவு காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந் தியாவின் சாத்விக்சாய் ராஜ், சிராக் ஷேட்டிஜோடி, இந்தோனேஷியா வின் பிக்ரி, அல்பியான் ஜோடியை சந்தித்தது.இந்திய ஜோடி 19-21, இந்திய 15-21 என தோல்வியடைந்தது.
0
Leave a Reply