மதுரை வந்த ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 9 அணி வீரர்கள் !
மதுரையில் நவ. 28 ல் நடக்க உள்ள, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்பதற்காக 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மதுரை வந்தனர்.
மதுரை விமான நிலையம் நேற்று (நவ.24) இங்கிலாந்து, நெதர்லாந்து, நமீபியா, தென்னாப்பிரிக்கா ஹாக்கி அணியினர்.எஸ்.டி.ஏ.டி., மாவட்ட நிர்வாகம், ஹாக்கி சங்கங்கள் சார்பில் வெளிநாட்டு வீரர்களுக்கு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.இதுவரை அயர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, கனடா, எகிப்து உட்பட 9 நாடுகளைச் சேர்ந்தஅணியினர் மதுரையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். நவ. 27 வரை பயிற்சி ஆட்டம் நடைபெறும்.
நவம்பர் 28 காலை 9:00 மணிக்கு நடக்கும்முதல் போட்டியில் ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதால் பாதுகாப்பு கருதி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் போலீசாரின் பாதுகாப்புவளையத்திற்குள் கொண்டு வரப்படும்.
0
Leave a Reply