இந்தியாவின் லக்சயாசென் ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் சிட்னியில், 'சூப்பர் 500' தொடர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் லக்சயா சென் 24, ஜப்பானின் யூஷி டனாகா 26, மோதினர். முதல் செட்டை 21-15 ,2வது செட்டை 21-11 என லக்சயா கைப்பற்றி, நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். நடப்பு ஆண்டில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றி, சாம்பியன் பட்டம் வென்ற 2வது இந்தியரானார். கடினமாக பயிற்சி மேற்கொண்டு நடப்பு சீசனில் முதல் பட்டம் வென்றதில் மகிழ்ச்சி," என்றார் லக்சயா சென்.சமீபத்தில் முடிந்த யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி கோப்பை வென்றிருந்தார்
0
Leave a Reply